For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் ரீதியான நெருக்கத்தை ஒவ்வொரு பெண்ணும் ஏன் விரும்ப வேண்டும் என்பதற்கான 7 காரணங்கள்!!!

By Ashok CR
|

பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். மேலும் அதனால் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.

உடல் ரீதியான நெருக்கத்தை வளர்த்தல் மற்றும் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துதல் எனும் போது, உடலுறவில் பல பயன்கள் உள்ளது. ஆனால் இதனால் இன்னும் பல்வேறு உடல்நல பயன்களும் அடங்கியுள்ளது என்பதும் உங்களுக்கு தெரியுமா? அதுவும் குறிப்பாக பெண்களுக்கு! அதனைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஆண்கள் உடலுறவு கொள்வதற்கு 5 முக்கிய காரணங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய் காலத்தின் போது வலியை குறைக்கும்

மாதவிடாய் காலத்தின் போது வலியை குறைக்கும்

மாதவிடாய் என்ற காரணத்தினால் எத்தனை முறை உடலுறவை தள்ளி வைத்திருப்பீர்கள்? உடலுறவில் ஈடுபடுவது நல்ல ஐடியா தான் என்றாலும் கூட மாதவிடாய் காலத்தின் போது வலியை குறைக்க உதவும். பெண்கள் புணர்ச்சி பரவச நிலையை அடையும் போது, அவர்களின் கர்ப்பப்பை சுருக்கமடையும். இதனால் உடலில் வலியை ஏற்படுத்தும் பொருட்கள் நீங்கும். இந்த செயல்முறையால் உங்கள் உடலில் இருந்து இரத்தமும் திசுக்களும் வேகமாக நீங்கும். இதனால் மாதவிடாய் நீடிக்கும் நாட்களின் எண்ணிக்கையும் குறையும்.

உங்களை இளமையுடன் காட்டும்

உங்களை இளமையுடன் காட்டும்

சும்மா சொல்லவில்லை. வாரத்திற்கு 4 தடவைக்கு மேல் உடலுறவில் ஈடுபடுபவர்கள் தங்கள் உண்மையான வயதை விட 10 மடங்கு இளமையாக தோன்றுவார்கள் என ராயல் எடின்பர்க் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் டேவிட் வீக்ஸ் தனது 10 ஆண்டு கால ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளார். ஆக்சிடாஸின் போன்ற அழற்சி எதிர்ப்பி மூலக்கூறுகள் உள்ளதால், உடலுறவில் ஈடுபடுவது நன்மையை அளிக்கிறது. தோல் மருத்துவரான டாக்டர் ஆமி வெஷ்லெர் "உடலுறவு கொள்ளும் போது, ஆக்சிடாஸின் மற்றும் பீட்டா எண்டோர்பின்கள் போன்ற அழற்சி எதிர்ப்பி மூலக்கூறுகளில் உங்கள் சருமம் குளிக்கும். நமக்கு வயது ஏறும் போது, நமக்கு பழுது ஏற்படும் அளவிற்கு குணமாகும் தன்மை இருப்பதில்லை. ஆனால் உடலுறவு கொள்வதால் இந்த பிரச்சனை நீங்கும்" என கூறியுள்ளார்.

தலை வலியைப் போக்க உதவும்

தலை வலியைப் போக்க உதவும்

தலைவலி என காரணம் காட்டி உடலுறவை தவிர்ப்பது எல்லாம் அந்தக்காலம். ஆனால் உடலுறவு கொள்வதால் ஒற்றைத் தலைவலி பிரச்சனைகள் தடுக்கப்படும் என தற்போதைய ஆய்வுகள் கூறுகிறது. உடலுறவில் ஈடுபடும் போது உற்பத்தியாகும் என்டார்பின்கள் நல்ல உணர்வை உண்டாக்கும். இது வலியை குறைக்க உதவும். அதேப்போல் இது மிக சிறந்த மற்றும் துரிதமான மைக்ரைன் சிகிச்சையாகவும் விளங்கும் என நியூயார்க் தலைவலி மையத்தை சேர்ந்த டாக்டர் அலெக்சாண்டர் மௌஸ்கோப் கூறியுள்ளார்.

அழுத்தத்தைக் குறைக்கும்

அழுத்தத்தைக் குறைக்கும்

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது உடலுறவில் ஈடுபடுபவர்கள் மன அழுத்தம் சூழ்நிலைகளை சிறப்பாக கையாளுவார்கள் என மேற்கு ஸ்காட்லான்ட் பல்கலைகழத்தில் நடந்த ஆராய்ச்சி கூறியுள்ளது. தலைவலிக்கு கூறப்பட்ட அதே காரணம் இதற்கும் பொருந்தும். அதற்கு காரணம் எண்டார்பின்கள் மற்றும் ஆக்சிடாக்சின் போன்ற ஹார்மோன்கள் வெளிப்படும் போது பதற்றம் மற்றும் அழுத்தம் நீங்கும்.

நல்ல தூக்கத்தை அளிக்கும்

நல்ல தூக்கத்தை அளிக்கும்

எண்டார்பின்கள் என்பது சந்தேகமே இல்லாமல் நமக்கு தேவையான ஒரு மிக முக்கியமான ஹார்மோனே. அது வெளிப்படும் போது நாம் சந்தோஷமாகிறோம். இதனால் உடல் ரீதியான தடைகளை தகர்த்து எரிந்து நல்ல தூக்கத்தைப் பெறலாம். மேலும் ப்ரோலாக்டின் என்ற ஹார்மோன் (தூங்கும் போது இயற்கையாகவே இதன் அளவு அதிகமாக இருக்கும்) வெளிப்படும் போது, நல்ல தூக்கத்தை அளிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்

சீரான முறையில் உடலுறவில் ஈடுபட்டால், நோய்வாய் படும் வாய்ப்புகள் குறையும். அதிகமாக உடலுறவு கொள்ளாதவர்களை விட, அதிகமாக உடலுறவு கொள்பவர்களுக்கு ஆன்டிஜென் இம்யூனோக்ளோபின் ஏ 30% அதிகமாக இருக்கும் என பெனிஸ்லேவேனியாவில் உள்ள வில்கெஸ் பல்கலைகழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. சளி மற்றும் காய்ச்சலில் இருந்து ஆன்டிஜென் உங்கள் உடலை பாதுகாக்கும். இதனை உங்கள் உணவிலும் சேர்த்துக் கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கலாம்.

உடல் எடையை சந்தோஷமாக குறைக்கும் வழி

உடல் எடையை சந்தோஷமாக குறைக்கும் வழி

உடல் பருமன் என்பது இன்றைய உலகத்தில் மிக முக்கியமான பிரச்சனையாகும். ஜிம்மில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்றால், ஏன் உடலுறவில் ஈடுபடக் கூடாது? உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு நிமிடத்திலும், ஆண்கள் 4.2 கலோரிகளையும், பெண்கள் 3.1 கலோரிகளையும் எரிக்கின்றனர் என வில்லியம் மாஸ்டர்ஸ் மற்றும் விர்ஜினியா ஜான்சன் நடத்திய ஆய்வு கூறியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Reasons Every Woman Should Love Having Physical Intimacy

Physical Intimacy has its own benefits when it comes to developing intimacy and improves the relationship between a couple. But did you know it has various other health benefits too, especially for the women?
Desktop Bottom Promotion