For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையுமாம்!!!

By Maha
|

ஒவ்வொருவருக்குமே சிக்கென்ற உடல் வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டிருப்போம். ஆனால் உணவுகளின் மீது உள்ள அலாதியான பிரியத்தால், பலரும் உடல் எடையைக் குறைக்க முடியாமல் தவிர்க்கின்றோம். ஒருவருக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், அவர்கள் உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கலோரிகள் குறைவாக இருக்கும், அதே சமயம் கலோரிகளை கரைக்க உதவும் உணவுப் பொருட்களையும் உட்கொள்ள வேண்டும்.

அப்படி உடல் எடையை குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் பீன்ஸ். பீன்ஸில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் உள்ள சத்துக்களால், உடலுறுப்புக்கள் சீராக செயல்படுவதோடு, நோய்களின் தாக்கமும் குறையும். அதிலும் பீன்ஸை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள சத்துக்களை முழுவதுமாகப் பெறலாம். சரி, இப்போது பீன்ஸில் உள்ள சத்துக்களையும், அதனை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானம்

செரிமானம்

வீட்டில் பீன்ஸ் பொரியல் செய்தால் சுவைத்து சாப்பிடுங்கள். ஏனெனில் பீன்ஸ் சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

நார்ச்சத்து

நார்ச்சத்து

பீன்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு, மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமலும் தடுக்கும். இதன் மூலம் கழிவுகள் முறையாக வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறையும்.

புரோட்டீன்

புரோட்டீன்

பீன்ஸில் புரோட்டீன் அதிகம் உள்ளது. உடல் எடையைக் குறைக்க புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆகவே இதனை உட்கொண்டால், உடல் எடையைக் குறைக்கலாம்.

கலோரிகள்

கலோரிகள்

பீன்ஸில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் மிகவும் குறைவாகவும் இருப்பதால், இதனை உட்கொள்வதன் மூலம் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

ஆற்றலை அதிகரிக்கும்

ஆற்றலை அதிகரிக்கும்

பீன்ஸ் சாப்பிடுவதன் மூலம் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். இதனால் உடல் எடையை குறைக்க நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

அசைவ உணவாளர்களுக்கு...

அசைவ உணவாளர்களுக்கு...

உங்களுக்கு அசைவ உணவுகளில் கலோரிகள் அதிகமாக உள்ளது என்று சாப்பிட விருப்பம் இல்லாவிட்டால், எலும்பில்லாத சிக்கன் துண்டு மற்றும் 1 கப் வேக வைத்த பீன்ஸ் சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கும் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.

இன்சுலின் அளவுகள்

இன்சுலின் அளவுகள்

பீன்ஸில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக பராமரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், பீன்ஸ் சாப்பிடுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Reasons To Eat Beans For Weight Loss

From all the veggies, beans has the lowest amount of fats. Therefore, consuming this green veggie will promise not to make you put on weight.
Story first published: Saturday, March 7, 2015, 13:48 [IST]
Desktop Bottom Promotion