கட்டிப்பிடி வைத்தியத்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

By: Viswa
Subscribe to Boldsky

காதல் கொள்வது, முத்தமிடுவது மற்றும் கட்டிப்பிடிப்பது. இவை மூன்றும் ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமான ஒன்றாகும். இம்மூன்றை விடுத்து நீங்கள் ஆரோக்கிய வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள் என்றால் அது எவ்வளவு முழுமையானதாக இருக்கும் என்பது சொல்ல இயலாதது! காதல் கொள்வது, முத்தமிடுவது மன இறுக்கத்தை குறைக்கும் என அறிந்துள்ளோம். கட்டிபிடிப்பது கூட உடல்நலத்திற்கு ஆரோக்கியமானதா என்றால்? ஆம், ஆரோக்கியமானது தான்! கட்டிப்பிடித்துக் கொள்வதும் ஒருவகையான வைத்தியம் தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கட்டிப்பிடிப்பது மந்தமான மனநிலையில் இருப்பவரை உற்சாகம் அடைய செய்கிறது, கவலையில் இருப்பவரை மீண்டெழச் செய்கிறது. இது மட்டுமல்லாது இதயம் சார்ந்த நோய்கள் வராமல் நம்மை காத்திடுகிறது. மேலும் கட்டிபிடிப்பதன் மூலம் அடையும் பயன்களை அறிய தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இதயத்திற்கு நல்லது

ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கொள்ளும் போது இதயம் இதமாக உணரப்படுகிறது இது இதயத்திற்கு நல்லது ஆகும். மற்றும் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இதயத்தில் உள்ள தசைகள் வலுவடைகின்றன.

பயத்தைப் போக்குகிறது

இருவருக்கு மத்தியில் உள்ள பயம் மற்றும் தயக்கத்தை கட்டிப்பிடிக்கும் பழக்கம் போக்குகிறது. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இறப்பைப் பற்றிய கவலையும் கலைகிறது.

இரத்தக் கொதிப்பைக் குறைக்கிறது

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இரத்தக்கொதிப்பு கட்டுக்கடங்குகிறது. இதனால் எப்போது எல்லாம் உங்களுக்கு உயர் இரத்தக் கொதிப்பு வருகிறதோ, அப்போது உங்கள் அருகில் உள்ளவரை கட்டிபிடித்துக் கொண்டால் இரத்தக்கொதிப்பு சமநிலைக்கு வந்துவிடும்.

மன இறுக்கத்தை போக்க...

கட்டிப்பிடிப்பது மன இறுக்கத்தை குறைக்கிறது மற்றும் மனநிலையை அமைதியடைய செய்கிறது. இதனால் நீங்கள் மன அழுத்தத்தின் போது கட்டிப்பிடித்துக் கொண்டால் மனம் இலகுவாக உணர்வீர்கள்.

நேர்மறை எண்ணங்கள்

நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது மூளையில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாய் உருவாகிறது அதனால் கட்டிப்பிடித்துக் கொள்வது உங்களது மனநிலையை நன்றாக வலுவடைய செய்யும்.

அதிக தெம்பூட்டுகிறது

ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உடனடியாக மனதிற்கு தெம்பூட்டப்படுகிறது. இதனால் ஆக்ஸிடாஸின் அதிகரித்து தனிமையை உணர்பவர்களை அதிலிருந்து விடுப்படச் செய்கிறது.

மகிழ்ச்சியான மனநிலை

கட்டிப்பிடிப்பதன் மூலம் நாம் பெறும் மற்றொரு பயன் என்னவெனில் செரோடோனின் அளவு அதிகரிப்பதால் மகிழ்ச்சியான மனநிலை உருவாகிறது.

மனதை அமைதியடைய செய்கிறது

நீங்கள் கவலையாக உணரும் போது உங்களது அன்பிற்குரியவரையோ அல்ல செல்ல பிராணியையோ கட்டிப்பிடித்துக் கொண்டால் மனநிலை அமைதியடையும்.

தசைகளை இலகுவாக செய்யும்

நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது உடல் தசைகள் இலகுவாகிறது மற்றும் உடலில் உள்ள வலி குறைகிறது.

நரம்பு மண்டலத்தை சமப்படுத்துகிறது

கட்டிப்பிடிப்பதன் மூலமாக நாம் அடையும் மற்றொரு பயன் என்னவெனில், இதன் மூலம் நமது நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்த உதுவுகிறது.

சுயமரியாதை அளிக்கிறது

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதன் மூலம் நம்பிக்கை அதிகரிக்கிறது மற்றும் அதன் மூலமாக நல்ல அபிப்ராயம் அளிக்கப்படுகிறது.

நோய்களை நீக்குகிறது

கட்டிப்பிடிப்பதன் மூலம் வெளிப்படும் அன்பும், அக்கறையும் நமது மூளையை நன்கு செயலாக்கம் அடைய செய்கிறது இதன் மூலம் உடலும் நன்கு செயல்பட்டு நோய்களுக்கு எதிராய் போராட முற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

12 Health Benefits Of Hugging

By the by from this article, we are getting more info about the benefits we obtain by hugging each other.
Story first published: Tuesday, February 3, 2015, 18:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter