For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் தயாரிக்கும் தயிரினால் தினசரி வாழ்வில் நாம் பெறும் பயன்கள்!

By VISWA
|

இயற்கையிலேயே தயிரில் நிறைய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துகள் உண்டு. தயிரில் உள்ள சில பாக்டீரியாக்கள் நமது செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. தற்போதைய நிலையில் சந்தையில் கிடைக்கும் பல வகையான தயிர்கள் இரசாயன கலப்புகளோடு தான் தயாரிக்கப்படுகின்றன. அதில் சேர்க்கப்படும் இரசாயன கலப்புகளால் நமது உடலுக்கு பல தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வீட்டில் தயாரிக்கும் தயிரை உணவில் சேர்த்து உட்கொள்வதே சிறந்ததாகும்.

வீட்டில் தயாரிக்கும் தயிரின் மூலமாக பல பயன்கள் அடைய முடிகிறது. அதில் குறிப்பாக முகப்பரு உள்ளவர்கள் வீட்டில் தயாரிக்கும் தயிரினை முகத்தில் இட்டு சிறிது நேரம் கழித்து உலர்ந்த பிறகு முகம் கழுவி வந்தால், முகத்தில் முகப்பரு குறையும் மற்றும் சருமம் பொலிவு பெறும். மேலும் வீட்டில் தயாரிக்கும் தயிரின் மூலம் நாம் அடையும் பயன்களை அறிய தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கலுக்கு நிவாரணம்

மலச்சிக்கலுக்கு நிவாரணம்

வீட்டில் தயாரிக்கும் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகளுக்கும், மலச்சிக்கலுக்கும் நிவாரணம் கிடைக்கும்

எலும்பு பகுதிகள் வலுவடைய..

எலும்பு பகுதிகள் வலுவடைய..

வீட்டில் தயாரிக்கும் தயிரில் உள்ள உயர் ரக வைட்டமின் டி மற்றும் கால்சியம் நமது எலும்பு பகுதிகளை வலுவடைய செய்கிறது. அதுமட்டுமில்லாது நமது உடலுக்கு தேவையான கால்சியம் அளவையும் மேம்படுத்த உதவுகிறது.

புரதச்சத்து

புரதச்சத்து

நீங்கள் சைவம் மட்டுமே உண்பவராக இருந்தால் வீட்டில் தயாரிக்கும் தயிர் மூலமாக உங்களுக்கு சிறந்த வகையில் புரதச்சத்து கிடைக்கும். நீங்கள் தினமும் ஒரு கோப்பை தயிர் உட்கொண்டு வந்தால், இறைச்சிக்கு நிகரான புரதச்சத்து உங்களுக்கு கிடைக்கும்.

இயற்கையான முகப்பொலிவு

இயற்கையான முகப்பொலிவு

தயிரில் ஒரு தேக்கரண்டி கடலை மாவுடன் சிறிதளவு தேன் மற்றும் பன்னீரை கலந்து முகத்தில் இட்டு உலர்ந்த பிறகு முகம் கழுவினால் உங்களது முகம் பன்மடங்கு பொலிவு பெறும்.

பசியை கட்டுப்படுத்தும்

பசியை கட்டுப்படுத்தும்

தயிரின் மூலமாக நமக்கு கிடைக்கும் புரதச்சத்து நமது பசியை கட்டுபடுத்தும். உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் தயிரை எடுத்துக் கொள்வது உங்களது தசைகளையும், எலும்புகளையும் வலுவடைய செய்கிறது.

உடல் எடையை குறைக்க..

உடல் எடையை குறைக்க..

நமது தற்போதைய அன்றாட வாழ்வியலில் உடல் பருமன் என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதில் இருந்து விடுபட்டு உடல் எடையை சரியான முறையில் பராமரிக்க தயிர் ஒரு நல்ல மூலப்பொருளாக உள்ளது. ஏனெனில், இதில் உள்ள சில பாக்டீரியாக்கள் செரிமான கோளாறை சரிசெய்வது மட்டுமில்லாது, தேவையில்லாத கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.

இரத்தக்கொதிப்பை சீராக்க உதவுகிறது.

இரத்தக்கொதிப்பை சீராக்க உதவுகிறது.

வீட்டில் தயாரிக்கும் தயிரில் உள்ள பொட்டாசியம் நமது இரத்தக்கொதிப்பை சீராக்க உதவுகிறது மற்றும் தினமும் ஒரு கோப்பை தயிர் உட்கொள்வது நமது உடல்நலத்தை பேணிட உதவுகிறது.

மென்மையான கூந்தலுக்கு..

மென்மையான கூந்தலுக்கு..

வீட்டில் தயாரிக்கும் தயிரை நேரடியாக கூந்தல் மற்றும் கூந்தலின் அடிவேர்களில் தடவி வருவதால் தயிரில் உள்ள இயற்கை ஈரப்பதமானது நமது கூந்தலை மென்மையானதாகவும் உறுதியானதாகவும் ஆக்குகிறது.

வைட்டமின் மற்றும் கனிமச்சத்து

வைட்டமின் மற்றும் கனிமச்சத்து

வைட்டமின் டி மற்றும் கால்சியம் மட்டுமில்லாது வீட்டில் தயாரிக்கும் தயிரில் உயர் ரக வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகளான வைட்டமின் பி 12, சின்க் (துத்துநாகம்), பாஸ்பரஸ் மற்றும் அயோடின் போன்றவை நிறைந்துள்ளன.

வாய் துர்நாற்றம் குறையும்

வாய் துர்நாற்றம் குறையும்

வீட்டில் தாயரிக்கும் தயிரை சாப்பிடுவதன் மூலமாக வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் உள்ள வலி போன்ற வாய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

வீட்டில் தயாரிக்கும் தயிரின் மூலமாக நாம் அடையும் சிறந்த பயன் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்கிறது. வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து நோய் கிருமிகளை அழிக்க செய்கிறது.

ஊட்டச்சத்துகள்

ஊட்டச்சத்துகள்

சிக்கன் மற்றும் மட்டனில் தயிரை சேர்ப்பதால் ருசி மட்டுமல்லாது, அதில் உள்ள ஊட்டச்சத்துகளையும் அப்படியே தங்க செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Benefits of Homemade Yogurt

This article is about the benefits of homemade yogurt and what are all the advantages we are obtain by having homemade yogurt. It's good to have homemade yogurt in our day today life because it is helps us to maintain our health level and makes us fit.
Desktop Bottom Promotion