For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகள்

By viswa
|

கோபம் ஆண்களின் பிறவி குணம் என்பார்கள். எதற்கு கோபப்பட வேண்டும், கோபப்படக் கூடாது என்றெல்லாம் இல்லாமல் தொட்டதற்கு எல்லாம் கோபம் படும் ஆண்களும் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. இதில் சில ஆண்கள் "ஷார்ட் டெம்பர்" எனப்படும் சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு தேவையின்றி கோபப்படுவார்கள். இவர்களுக்கு இதற்கு பரிசாய் மிஞ்சுவது கெட்ட பெயர் மட்டுமே.

இவ்வாறு கோபப்படும் ஆண்களுக்கு நிறைய மன அழுத்தம் ஏற்படுகிறது என மனநிலை நிபுணர்கள் கூறுகின்றனர். சரி, இவ்வாறு மன அழுத்தம் ஏற்படும் போது அவர்களுக்கு என்ன ஆகிறது, என்ன எல்லாம் குறைபாடுகள், கோளாறுகள் ஏற்படுகின்றன என யாருக்கும் தெரிவதில்லை. ஏன் கோபம் கொள்ளும் அவர்களுக்கே கூட தெரியாது. நமது ஊரில் ஒரு பழமொழி உண்டு, "கோபக்காரனுக்கு புத்தி மட்டம்" என்று. ஆம், எதையும் யோசிக்காமல் கோபம் கொள்பவர்களுக்கு சூழ்நிலை மட்டும் அல்ல உடல்நிலை பற்றியும் யோசிக்க மறந்துவிடுகின்றனர். இனி அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கோளாறுகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடை

உடல் எடை

மன அழுத்தம் ஏற்படுவதினால் நமக்கு ஏற்படும் முதல் உடல்நலக் கோளாறு உடல் எடை குறைவது. மன அழுத்தம் காரணத்தினால் அவர்கள் உணவின் மேல் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதுவே இதற்கான முக்கியக் காரணம்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

ஆண்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் போது அவர்கள் முதலாவதாகத் தொலைப்பது தூக்கம். இது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒருக்கட்டதில் தூக்கமின்மையினால் பாதிக்கப்படுகின்றனர்.

போதைப் பொருள்

போதைப் பொருள்

மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் ஆண்கள் அதிலிருந்து மீது வர தவறுதலாக போதைப் பழக்கத்தை நாடி செல்கின்றனர். ஆனால், இந்த பழக்கம் அவர்களை மேலும் வலுவிழக்க செய்துவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.

மது அருந்துதல்

மது அருந்துதல்

ஆண்கள் செய்யும் பெரிய தவறே, அவர்கள் தளர்ந்து போகின்ற பொழுது தவறான முடிவுகளை எடுப்பதே ஆகும். பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் போது மதுப் பழக்கத்திற்கு அடிமை ஆவது தான்.

வெறி

வெறி

மன அழுத்தம் அதிகரிக்க போது, அவர்களுக்கு வெறியும் அதிகரிக்கிறது. மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர ஆண்களுக்கு தடையை இருப்பதே இந்த பெரும் கோபம் தான்.

எரிச்சல் அடைதல்

எரிச்சல் அடைதல்

கோபம் சில சமயங்களில் எல்லை மீறும் போது அல்லது உச்சமடையும் போது அவர்களுக்குள் எரிச்சல் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் தங்களது வாழ்க்கையின் மீதே விரக்தி அடைகின்றனர்.

உணர்ச்சி கட்டுப்பாடு

உணர்ச்சி கட்டுப்பாடு

மன அழுத்தத்தின் காரணமாக ஆண்களுக்கு கோபம் அதிகரிக்கும் போது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த தெரிவதில்லை. இதனால், பல சமயங்களில் உறவுகளுக்குள் விரிசல் ஏற்பட இதுவே காரணமாகி விடுகிறது.

வெறுப்பு

வெறுப்பு

மன அழுத்தத்ம் கொள்ளும் ஆண்கள் பெரும்பாலும் வாழ்க்கையின் மீது வெறுப்பு கொள்கின்றனர். தங்களுக்கு பிடித்த விஷயங்களை கூட வெறுத்து ஒதுக்கும் தன்மைக்கு தள்ளப்படுகின்றனர்.

தேவையற்ற விபரீதம்

தேவையற்ற விபரீதம்

சில சமயங்களில் தீர்வு காண்பதாக எண்ணி சில விபரீதப் பழக்கங்களுக்கு ஆளாகின்றனர் மன அழுத்தத்தில் இருக்கும் ஆண்கள். அதாவது, கஞ்சா போன்ற பழக்கங்களில் ஈடுப்படுவது.

தற்கொலை

தற்கொலை

தேவையற்ற தீயப் பழக்கங்கள், வீண் கோபம், வாழ்க்கையின் மீது ஏற்படும் சலிப்பு, வெறுப்பு போன்றவை கடைசியாக அவர்களை தற்கொலைக்கு முயற்சிக்கவும் தூண்டுகிறது. இது போன்று ஆண்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது வீட்டு நபர்கள் தான் அவர்களை தனிமையில் விடாது அரவணைத்து, அன்பு பாராட்டி அவர்களை அந்த மன அழுத்தத்தில் இருந்து மீட்டுவர முயல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Ways Men Deal With Depression

here we have discussed with 10 Ways Men Deal With Depression
Story first published: Tuesday, February 10, 2015, 15:19 [IST]
Desktop Bottom Promotion