For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தர்பூசணி நல்ல பழமா? கெட்ட பழமா?

|

தர்பூசணி! கோடையில் அனைவரையும் குளிரவைக்கும் பழம். வெயிலில் காய்ந்து போய் வருபவர்களுக்கு தன் குளுமையினால் கவரிகள் வீசி களைப்பாற்றும் மட்டற்ற கனி, தர்பூசணி! இதில் 92 சதவீதம் நீரின் பங்கு உள்ளது. அதனால், வெயில் காலத்தில் நமது உடலில் நீரின் அளவை கட்டுப்படுத்த பெருமளவு உதவுகிறது தர்பூசணி. மற்றும் ஆண்கள் தர்பூசணியை விரும்புவதற்கு மற்றுமொரு காரணம் இருக்கிறது, பைசா செலவில்லாமல் வயகராவிற்கு இணையான பலன் தரவல்லது தர்பூசணி பழம். இதனால், எப்போது கோடை வரும் ஒரு பிடி பிடிக்கலாம் என ஆண்கள் காத்திருப்பார்கள்.

சருமம் பொலிவாக வேண்டுமா? அப்ப தர்பூசணி யூஸ் பண்ணுங்க...

இங்கு தான் தொடங்குகிறது பிரச்சனை, அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இது தர்பூசனிக்கு நூறு சதவீதம் பொருந்தும். அளவிற்கு அதிகமாக தர்பூசணி சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படும். அதுவும் முக்கியமாக ஆண்கள் மற்றும் கர்ப்பணி பெண்களுக்கு.தர்பூசணி கோடையின் வரப்பிரசாதம் மட்டுமல்ல அதிகமாக உட்கொண்டால் வராத பிரச்னையும் வரவைக்கும் பிரசாதம். எனவே, நீங்கள் தர்பூசணியை சாப்பிடும் முன் சில விஷயங்கள் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டும்....

தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி... ஆண்களுக்கு அவசியமானது !

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகமாக தர்பூசணி சாப்பிட வேண்டாம்

அதிகமாக தர்பூசணி சாப்பிட வேண்டாம்

தர்பூசணி ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் இது 92% நீரின் பங்கு கொண்டிருப்பதால், அஜீரண கோளாறு, வயிற்று போக்கு மற்று வயிறு உப்புசம் அடைதல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

கொழுப்பு

கொழுப்பு

தர்பூசணியில் அதிகம் சர்க்கரையின் அளவு இருக்கிறது. இது நமது உடலினுள் சுலபமாக கொழுப்பாக மாறும் தன்மை உடையது ஆகும். எனவே, உடல் எடை குறைக்க விரும்புவர்கள். தர்பூசணியில் தான் கொழுப்பு இல்லையே என நினைத்து அதிகம் சாப்பிட வேண்டாம்.

 சளித்தொல்லை

சளித்தொல்லை

சளி அல்லது கபம் பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணியை சாப்பிட வேண்டாம். அப்படி மீறி நீங்கள் சாப்பிட முற்பட்டால் அதிகப்படியான காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சிறுநீர் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

கிருமிகள் தொற்று

கிருமிகள் தொற்று

தர்பூசணியை அறுத்த உடன் சாப்பிடவும். பொதுவாகவே பழங்களை நீண்ட நேரும் அறுத்து வைத்த பின் சாப்பிட்டால் கிருமிகளின் தொற்று ஏற்ப்படும். அது, தர்பூசணியில் அதிகமாய் ஏற்படுகிறது.

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் தர்பூசணியை சாப்பிட வேண்டாம். இதில் உள்ள அதிகப்படியான நீரின் அளவு உங்களது சிறுநீரக பிரச்சனையை அதிகப்படுத்திவிடும்.

வாய்ப்புண்

வாய்ப்புண்

பொதுவாகவே மருத்துவத்தில் எதிர்வினை விளைவுகள் பிரச்சனையை ஏற்படுத்தும் என கூறுவார்கள். அதிகப்படியான வெயில் காலங்களில் மிகவும் குளிர்ச்சியான தன்மை உடைய தர்பூசணியை சாப்பிடும் போது, அது எதிர்வினை செயலாக மாறி வாய்ப்புண் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என தெரியவில்லை. எனினும் தர்பூசணியை அளவாக சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

தர்பூசணியில் அதிகமாக சர்க்கரையின் அளவு இருப்பதால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அளவாக தர்பூசணியை சாப்பிடுவது நல்லது. அதிகம் சாப்பிட்டால் உயர் சர்க்கரை அளவு ஏற்பட்டு உடலுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

கர்ப்பணி பெண்கள்

கர்ப்பணி பெண்கள்

அதிகப்படியாக தர்பூசணி உட்கொள்வதன் மூலம் கர்ப்பணி பெண்களுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்புருகிறது.

சாப்பிடுவதற்கு முன்/பின்

சாப்பிடுவதற்கு முன்/பின்

சாப்பாடு சாப்பிடும் முன்/பின் தர்பூசணியை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது உடலில் உள்ள நீரின் அளவை அதிகரிக்க செய்யும். இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சில்லென்று தர்பூசணியை சாப்பிடுவதை தவிர்க்கவும்

சில்லென்று தர்பூசணியை சாப்பிடுவதை தவிர்க்கவும்

வெயில் கொளுத்தும் கோடை காலங்களில் சில்லென்று, ஃபிரிட்ஜில் வைத்து தர்பூசணியை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். வெப்பம் அதிகமாக இருக்கும் போது மிகவும் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ளும் போது உடலின் தட்பவெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் செரிமானம் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 things to know before eating watermelon

Do you know about 10 things to know before eating watermelon, read here.
Desktop Bottom Promotion