For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் டாட்டூ குத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

|

நமது பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்தே பச்சைக்குத்துவது ஓர் பழக்கமாகப் பின்பற்றி வரப்படுகிறது. நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்பு பெண்கள் பலரும் அவர்களது கைகளிலும், தாடை பகுதிகளிலும் பச்சைக்குத்துவதை வழக்கமாக வைத்திருந்தனர், ஆண்களை அவர்களது கைகளில் அவர்களுக்கு பிடித்தமான பெயர்களை பச்சைக்குத்திக் கொள்வார்கள் பெரும்பாலும் அது அவர்களது மனைவியின் பெயராக தான் இருக்கும். 1990-களில் இருந்து இதன் மோகம் குறையத் துவங்கியது. நாகரீகம் அது, இது என கூறி பச்சைகுத்துவதை அன்றைய இளைஞர்கள் தவிர்த்து வந்தனர்.

கிளுகிளுப்பு டாட்டூக்களுடன் கலகலக்க வைக்கும் பிரபலங்கள்..!

பின் 2010-களில் இதன் மோகம் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்தது, பச்சைக்குத்துவது டாட்டூவாக உருமாறியது, பல வண்ணங்களில் பல டிசைன்களில் உடல் எங்கிலும் டாட்டூ குத்த துவங்கினர் நமது இளைய சமுதாயத்தினர். திரையுலக நடிகர்களின் மூலமாக இது மிக வேகமாக வைரஸ் போல பரவியது என்ற கூறலாம். பெண்கள் மத்தியில் இந்த டாட்டூ பழக்கம் பரவ த்ரிஷா ஒரு முக்கிய காரணம் என கூறலாம். த்ரிஷா அவரது மார்பில் குத்திக் கொண்ட டாட்டூ டிசைன் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலர் மத்தியிலும் பிரபலமாக இருந்தது.

சரும பிரச்சனைகளும்... அதற்கான இயற்கை தீர்வுகளும்...

மிகவும் ஃபேஷனாக பரவி வரும் இந்த டாட்டூ மோகத்தினால் உடல் நலம் பாதிக்கப்படுவது, பல சரும கோளாறுகள் ஏற்படுவது மற்றும் உங்களது இரத்தத்தின் திறன் குறைவது என பல உடல்நல பிரச்சனைகள் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் டாட்டூ குத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள். நீங்கள் குத்திக் கொள்ளாவிட்டாலும், உங்களது நண்பர்களில் யாராவது இதில் விருப்பம் உடையவர்களாக இருந்தால், அவர்களிடம் இதைப் பற்றி நீங்கள் பகிர்ந்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்....

சரும கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய் தொற்று

நோய் தொற்று

டாட்டூ குத்தும் போது ஒருமுறை பயன்படுத்திய ஊசியை மறுமுறை உபயோகிக்கும் போது நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதன் மூலமாக ஒரு சிலருக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்று கூட பரவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சரும அழற்சி

சரும அழற்சி

பல வண்ணங்களில் டாட்டூக்கள் குத்திக்கொள்ள இரசாயன சாயங்கள் உபயோகிக்கப்படுகின்றன இதன் காரணத்தினால் சரும அழற்சிகள் ஏற்படுகிறது. முக்கியமாக டாட்டூ குத்திக்கொண்ட இடத்தில் சூரிய ஒளிப்படும் போது தான் அழற்சி அதிகமாகிறது.

வடுக்கள்

வடுக்கள்

டாட்டூக்கள் குத்துவதனால் தோலில் வடுக்கள் வருகிறது. பெரும்பாலானோருக்கு டாட்டூவிற்கு உபயோகப்படுத்தப்படும் அந்த இரசாயன சாயத்தினை அழிக்கும் போது தான் வடுக்கள் ஏற்படுகிறது.

சரும தொற்றுகள்

சரும தொற்றுகள்

டாட்டூ குத்த பயன்படுத்தப்பட்ட ஸ்டெர்லைட் ஊசியில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்கள் மூலமாக சரும தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. தோல் வீக்கம், வலி, சிவந்து தடித்தல் போன்றவை நோய் தொற்றுக்கு அறிகுறிகளாக இருக்கும். இந்த அறிகுறிகள் தோன்றுவதற்கே இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஆர்.ஐ எடுக்கும் போது தொல்லைகள்

எம்.ஆர்.ஐ எடுக்கும் போது தொல்லைகள்

ஏதாவது காரணத்திற்க்காக நீங்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன்னிங் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு டாட்டூ குத்திய இடத்தில வீக்கமும், எரிச்சலும் ஏற்படும்.

தோலின் நிறம் மாறுதல்

தோலின் நிறம் மாறுதல்

நீங்கள் டாட்டூ குத்திய இடத்தில் நிரந்தரமாக சரும நிறம் மாறிடும் வாய்ப்பிருக்கிறது. நிறைய வருடங்களுக்கு பிறகு இந்த நிறம் மாற்றம் குறையலாம் எனினும், டாட்டூ குத்திவதற்கு முன் இதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்வது அவசியம்.

இரத்த தானம்

இரத்த தானம்

பச்சைக் குத்தியவர்கள் ஒரு வாரத்திற்கு இரத்த தானம் செய்யக்கூடாது. நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருப்பதனால் இது தவிர்க்கப்படுவதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரத்தத்தின் அடர்த்தி மெலிகிறது

இரத்தத்தின் அடர்த்தி மெலிகிறது

டாட்டூ குத்துவதனால் உங்களது இரத்தத்தின் தன்மை மெலிவடைவதாக கூறப்படுகிறது. இரத்தம் மீண்டும் அதன் பழைய தன்மையை பெற நீண்ட நாட்கள் ஆகுமாம்.

இரத்தக்கட்டி

இரத்தக்கட்டி

டாட்டூ குத்தும் போது இரத்த நாளங்களில் இரத்தக்கட்டிகள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

நிணநீர் அமைப்பு சுமை

நிணநீர் அமைப்பு சுமை

நிணநீர் அமைப்பில் வீக்கம் அல்லது கட்டிகள் ஏற்படலாம், இதன் மூலம் அப்பகுதியில் பளு அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Side Effects of Tattoos

Tattoos is all time fashionable thing for both male and female. But, you people should know about side effects of tattoos before doing it
Desktop Bottom Promotion