For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவில் உப்பை அளவாக சேர்த்துக் கொள்வதால் பெறும் நன்மைகள்

|

உப்பில்லாமல் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதா? நமது சரித்திர பக்கங்கள் அப்படி ஏதும் நமக்கு சொல்லவில்லையே. நமது பழமொழிகளில் கூட "உப்பிட்டவரை உயிருள்ளவரை நினை" என்று தான் நமது புராண காலங்களில் இருந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால், உப்பை சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் உடல்நல தீங்குகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம்! அதை நீங்கள் தெரிந்துக் கொண்டால், உப்பிட்டவரை உயிரெடுக்கும் வரை பகைப்பீர்கள்! உப்பு நமது உணவின் ருசியை மட்டும் தான் அதிகரிக்கிறது. மற்றபடி உடல்நலத்தின் ருசியை பெரும்பாலும் கெடுக்கத்தான் செய்கிறது. அறுசுவைக்கும் தலைவனாய் திகழும் உப்பு, நம் உயிரையும் சுவைப் பார்க்க காத்திருகிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

அட! என்னப்பா சொல்றீங்க நீங்க? ஒன்னும் புரியலையே, உப்புல அப்படி என்னய்யா குத்தம் அப்படி'னு கேட்பவர்களா நீங்கள்? கட்டாயம் இந்த கட்டுரையை படிக்க வேண்டும். ஆம், உப்பில்லாத சாப்பாட்டை யாரும் தப்பித்தவறி கூட தொட்டுவிட மாட்டார்கள். ஆனால், உப்பில்லாத உணவை நீங்கள் உட்கொள்வதன் மூலம் உங்கள் உடல்நலத்திற்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா? தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் வறட்சி

உடல் வறட்சி

உப்புச்சத்து நமது உடலில் அதிகரிக்கும் போது உடல் வறட்சியடைகிறது. அதனால் உப்பு இல்லாமல் நீங்கள் சாப்பிடும் போது உடலின் நீரளவை சமப்படுத்த முடியும். எனவே, நீங்கள் உடல் வறட்சியை இருப்பது போல் உணர்ந்தால், நீங்களாகவே ஒருசில நாட்களுக்கு உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.

உடல் எடை குறைக்க

உடல் எடை குறைக்க

உணவில் நீங்கள் உப்பின் அளவை குறைத்து உட்கொள்ளும் போது உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.. ஒரு வேலை நீங்கள் உடல் எடையை குறைக்க ஏற்கனவே உணவு கட்டுப்பாட்டில் இருக்கின்றீர்கள் எனில், அந்த உணவிலும் உப்பின் அளவை குறைத்துக் கொண்டால், மிக விரைவில் உடல் மெலிந்து ஸ்லிம்மாக காட்சியளிக்க முடியும்.

உடலில் சக்தி அதிகரிக்கும்

உடலில் சக்தி அதிகரிக்கும்

உங்களது உடலில் உப்புச்சத்து அதிகமாகும் பட்சத்தில் பல உடல்நல கோளாறுகள் வர வாய்ப்பிருக்கிறது. அதனால், நீங்கள் உங்களது உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடல்நலன் பெற முடியும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் உங்களது உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள் இது உங்களது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மற்றும் உங்கள் உடல்நிலையை கட்டுக்குள் வைக்கவும் பயன்தரும்.

புற்றுநோய் பாதிப்பு

புற்றுநோய் பாதிப்பு

உங்கள் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வதன் மூலமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். இது மற்றுமின்றி சிறுநீரகம், வயிறு சார்ந்த கோளாறுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

பக்கவாதம்

பக்கவாதம்

உங்களது உடலில் உப்புச்சத்து அதிகரிக்கும் போது பக்கவாதமும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, உங்களது உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.

எலும்புகள் வலுவடையும்

எலும்புகள் வலுவடையும்

உப்புச்சத்து அதிகரிக்கும் போது நம் உடலில் உள்ள கால்சியம் சத்து குறைக்கிறது. எனவே, நீங்கள் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளும் போது, உங்கள் எலும்புகள் வலுவடையும்.

நீரிழிவு

நீரிழிவு

உங்களது உடலில் உப்புச்சத்து அதிகரிக்கும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும் , இதன் காரணமாக உங்களுக்கு நீரிழிவு நோய் அதிகரிக்கும். எனவே, இரத்த கொதிப்பு இருப்பவர்கள் உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.

குமட்டல்

குமட்டல்

உங்களது உடலில் உப்புச்சத்து அதிகரிக்கிறது என்பதற்கான அறிகுறியாய் குமட்டல் ஏற்படும். எனவே அவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு தோன்றும் போது, உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.

சிறுநீரகம்

சிறுநீரகம்

உடலில் உப்பின் அளவு அதிகரிப்பதால் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களுக்கு அவர்களது உடலில் உப்புச்சத்து அதிகமாக காணப்படுகிறது. எனவே, முடிந்த வரை உங்களது உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Health Facts Of Not Eating Salt

Do you know about the 10 health facts of not eating salt, read here.
Desktop Bottom Promotion