For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காயத்ரி மந்திரம் கூறுவதால் ஏற்படும் 10 உடல்நல பயன்கள்!!!

By Babu
|

காயத்ரி மந்திரத்தில் உள்ள வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, படிக்கும் போது வலிமை வாய்ந்த சக்தி உருவாகும் வகையில் அந்த வார்த்தைகளை ஒரு மந்திரமாக உருவாக்கியது ரிஷிகளும், முனிவர்களும் ஆவார்கள். காயத்ரி மந்திரத்தில் பல முக்கியத்துவங்கள் அடங்கியுள்ளது. சரியான முறையில் உச்சரிக்கும் போது காயத்ரி மந்திரத்தின் சக்தியை உங்களாலேயே உணர முடியும். காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் போது, கண்களை மூடிக்கொண்டு, நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வாரத்தையின் மீது மனதை ஒருமுனைப்படுத்த வேண்டும். அதன் பின் பாருங்கள் நடக்கபோகும் அதிசயங்களை.

முதன் முதலில் வேதங்களில் எழுதப்பட்ட இந்த மந்திரம் 24 அசைகளை கொண்டுள்ளது. இவைகள் நம் உடலின் மீது உளவியல் ரீதியான தாக்கத்தையும், உடலியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். இந்த மந்திரத்தால் அப்படி என்ன தான் நன்மைகள் கிடைக்க போகிறது என வியப்பாக உள்ளது தானே! அதைத் தான் பார்க்க போகிறோம். காயத்ரி மந்திரம் கூறுவதால் ஏற்படும் 10 உடல்நல பயன்களைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனதை அமைதியாக்கும்

மனதை அமைதியாக்கும்

இந்த மந்திரம் ஓம் எனும் சொல்லோடு தொடங்கும். இந்த ஒலியின் விளக்கக் கூற்று உங்கள் உதடு, நாக்கு, மேல் வாய், நாக்கின் பின்புறம் மற்றும் மண்டை ஓட்டின் வழியாக அதிர்வை ஏற்படுத்தும். இது மனதை மிகவும் சாந்தப்படுத்தும் என்றும் ஹார்மோன்களை அமைதிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஒருவர் மனதை ஒருமுனைப்படுத்தி அதனால் அவர் மனம் அமைதியடையும் வண்ணம் காயத்ரி மந்திரத்தின் அசைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதால் உங்கள் தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் அதிர்வால் நாக்கு, உதடு, குரனாண், மேல் வாய் மற்றும் மூளையில் உள்ள இணைக்கும் பகுதிகள் ஆகியவற்றில் அழுத்தம் ஏற்படும். இந்த அதிர்வுகள் மூளையின் அடிப்பகுதியான ஹைப்போதலாமஸை (நோய் எதிர்ப்பு சக்தி உட்பட உடலில் உள்ள பல செயல்பாடுகளையும் சுரப்பதையும் சீராக வைத்திருக்கும் பொறுப்பை கொண்டுள்ள சுரப்பி) மிகவும் சிறப்பாக செயல்பட வைக்கும். சந்தோஷ ஹார்மோன்கள் சுரப்பதற்கும் இந்த சுரப்பியே காரணமாக உள்ளது எனவும் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதனால் இதுவே உடலையும் மனதையும் இணைக்கும் முக்கிய பங்கை வகிக்கிறது. நீங்கள் எந்தளவுக்கு சந்தோஷமாக உள்ளீர்களோ அந்தளவிற்கு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும்.

இது போக, இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், உங்களுடலில் உள்ள சக்கரங்களை ஊக்குவிக்க உதவும். உடலில் உள்ள குறிப்பிட்ட சில முக்கியமான நிணநீர் கணுக்கள் மற்றும் ஒட்டுமொத்த உடலின் செயற்பாடுகள் சீராக நடைபெற உதவும் உறுப்புகளில் இந்த சக்கரங்கள் ஒழுங்குப்படுத்திக் கொள்ளும். இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும். அதற்கு காரணம், அனைத்து சக்கரங்களும் ஒழுங்குப்படுத்தி கொள்வதால், நோய்கள் இல்லாமல் இருக்கும் உங்கள் உடல்.

ஒருமுனைப்படுத்துதலும் கற்பதும் அதிகரிக்கும்

ஒருமுனைப்படுத்துதலும் கற்பதும் அதிகரிக்கும்

மந்திரங்களை உச்சரித்தவர்களின் ஒருமுனைப்படுத்தும் ஆற்றலும் நினைவாற்றலும் சிறப்பாக இருந்ததாக, இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் யோகா வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணம், காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் போது, அதனால் ஏற்படும் அதிர்வு முதலில் உங்கள் முகத்திலும் தலையிலும் உள்ள முதல் மூன்று சக்கரங்களை (துரியம், ஆக்கினை மற்றும் விசுத்தி) மற்றும் செயல்பட வைக்கும். இந்த மூன்று சக்கரங்களும் உங்கள் ஒருமுனைப்படுத்தும் ஆற்றலை மேம்படுத்த உதவும். அதற்கு காரணம், அவைகள் உங்கள் மூளை மற்றும் கூம்புச் சுரப்பி (துரியம் சக்கரம்), கண்கள், சைனஸ், கீழ் தலை, கபச் சுரப்பி (ஆக்கினை சக்கரம்) மற்றும் தைராய்ட் சுரப்பி (விசுத்தி சக்கரம்) ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையது. இவைகளை செயல்பட தொடங்கினால், அதனால் உண்டாகும் அதிர்வுகள் சம்பந்தப்பட்ட சுரப்பிகளை ஊக்குவிக்கும். இதனால் ஒருமுனைப்படுத்துதலும் கவனமும் மேம்படும்.

சுவாசத்தை மேம்படுத்தும்

சுவாசத்தை மேம்படுத்தும்

மந்திரத்தை உச்சரிக்கும் போது, ஆழமாகவும் கட்டுப்படுத்தப்பட்ட வகையிலும் மூச்சு விட வேண்டும். இதனை சீரான முறையில் செய்து வந்தால் உங்கள் நுரையீரல் செயல்பாடு மேம்பட அது உதவிடும். இதனால் நீங்கள் சுவாசிப்பதும் மேம்படும். ஆழமாக சுவாசிப்பது போக, உடல் முழுவதும் ஆக்சிஜெனை அளிக்கவும் உதவும். அதனால் நீங்கள் ஆரோக்கியமாக விளங்கலாம்.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால் ஒருவர் சுவாசிப்பது மெதுவாகும். இதனால் அவரின் இதயத் துடிப்புகள் ஒத்திசைத்து சீராக உதவுவதால், ஆரோக்கியமாக இருக்கலாம் என பிரிட்டிஷ் ஜர்னல் நடத்திய ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் படி, ஒத்திசைத்த இதயத்துடிப்பு, இதய செயல்பாடு மற்றும் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த உதவும் இயக்க அமைப்பான பாரோப்ளக்ஸ் ஆகியவைகள் தான் இதய நோய்கள் வராமல் இருப்பதற்கான அளவுருக்கள்.

நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும்

நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும்

இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது, உங்கள் நாக்கு, உதடு, குரனாண், மேல் வாய் மற்றும் மூளையையும் அதனை சுற்றியுள்ள இணைக்கும் பகுதிகள் மீது ஏற்படும் அழுத்தத்தினால் அதிர்வு உண்டாகும். இது உங்கள் நரம்பு செயல்பாடுகளை வலுவடைய செய்து ஊக்குவிக்கவும் உதவிடும். இது போக, சரியான அளவில் நரம்பியத்தாண்டுவிப்பி சுரக்கவும் ஊக்குவிக்கும். இதனால் கணத்தாக்கக் கடத்துகையில் உதவிடும்.

அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்க உதவும்

அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்க உதவும்

மந்திரத்தை உச்சரித்தால் அழுத்தம் தொடர்பான விஷத்தன்மை பாதிப்பை தடுக்க உதவும். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைவதற்கு மட்டும் உதவுவதோடு மட்டுமல்லாது, தொடர்ச்சியான அழுத்தத்தால் உடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்யவும் உதவும். சீரான முறையில் உச்சரித்து வந்தால் அழுத்தம் ஏற்படாமல் இருப்பதால், காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மனதை வலுவடைய செய்து மன அழுத்தத்தைப் போக்கும்

மனதை வலுவடைய செய்து மன அழுத்தத்தைப் போக்கும்

இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உங்கள் மூளை ஊக்குவிக்கப்படும். இதனால் அமைதி கிட்டும், அதிக கவனத்துடனும் இருக்கலாம். மன அழுத்தத்தை போக்கி அதிலிருந்து மீண்டு வரவும் காயத்ரி மந்திரம் உதவுகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் சஞ்சாரி நரம்பின் செயல்பாடு ஊக்குவிக்கப்படும்; மன அழுத்தம் மற்றும் வலிப்பு நோய்க்கான பொதுவான சிகிச்சை இதுவாகும் என இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் யோகா தன ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. இது போக, இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் அதிர்வுகளால், எண்டார்பின்ஸ் மற்றும் இதர அமைதிப்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பதற்கும் உதவிடும். இதனால் மன அழுத்தம் வராமல் இருக்கும்.

பளிச்சிடும் சருமத்தை அளிக்கும்

பளிச்சிடும் சருமத்தை அளிக்கும்

இந்த அதிர்வுகளால் முகத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் ஊக்குவிக்கப்படும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, அதனால் சருமத்தில் இருந்து நச்சுகள் நீங்கும். இது போக, ஆழமாக சுவாசிக்கும் போது, உங்கள் சருமத்திற்கு அதிகமாக ஆக்சிஜென் கிடைக்கும். உங்கள் உங்கள் சருமம் இளமையுடனும் பொழிவுடனும் காணப்படும்.

ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்

ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்

இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது, ஒருவர் ஆழமாக சுவாசித்து, சிறிது நேரத்திற்கு மூச்சை அடக்க வேண்டும். இதனால் நுரையீரல் வலுவடையும். அதனால் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கும் நிவாரணமாக விளங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 health benefits of chanting the Gayatri Mantra

Originally written in the Vedas, the gayatri mantra is made up of 24 syllables that are meant to have both a psychological and physiological effect on our body. Here are 10 reasons chanting the Gayatri Mantra is good for your health.
Story first published: Tuesday, January 13, 2015, 8:59 [IST]
Desktop Bottom Promotion