For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பரவி வரும் உயிரைப் பறிக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்!

By Maha
|

சமீப காலமாக இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் எனப்படும் மூளையழற்சி நோயால் அதிகம் தாக்கப்படுகின்றனர். மேலும் இந்த நோய் தாக்கி கிழக்கு பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 700-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இதுவரை ஜப்பானில் பரவி பல மக்களை கொன்ற இந்த மூளைக்காய்ச்சலானது, தற்போது இந்தியாவில் பரவி வருவதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் காய்ச்சல்கள்!!!

மேலும் இந்த நோயானது மூளையைத் தாக்குவதால், மூளையானது காயமடைந்து வீக்கமடைந்துவிடும். ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்பது வைரஸ் மூலம் பரவும் வகையைச் சேர்ந்தது. இந்த நோயின் ஆரம்ப அறிகுறியே காய்ச்சல் தான். அதுமட்டுமின்றி, தலைவலி, அதிக குழப்பம், கழுத்து வலி, எரிச்சல், பசியின்மை போன்றவையும் இதர அறிகுறிகளாகும்.

பொதுவாக குழந்தைகள் தான் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது பெரியவர்களும் இந்த நோய்க்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது கொசுக்களின் மூலம் பரவும் ஒரு தொற்றுநோய். அதனால் இந்த ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வந்தால் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் மூளைக்காய்ச்சல் தாக்கி போதிய தடுப்பூசியை போட்டுக் கொள்ளாவிட்டால், உயிரை இழக்க நேரிடும்.

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

இப்போது ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஏன் உயிரைப் பறிக்கிறது என்பதற்கான காரணங்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைரஸ் தாக்குதல்

வைரஸ் தாக்குதல்

ஜப்பானிய மூளைக்காய்ச்சலானது வைரஸ் தாக்குதலால், மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் காய்ச்சல் மற்றும் தலை வலி வரும். பொதுவாக மூளையில் பிரச்சனை வந்தாலே, அது உயிருக்கே ஆபத்து தான். அதிலும் மூளையிலேயே காய்ச்சல் வந்தால், பிறகு பாருங்கள் இதன் ஆபத்தை.

அறிகுறியை கண்டறிவது கடினம்

அறிகுறியை கண்டறிவது கடினம்

ஜப்பானிய மூளைக்காய்ச்சலின் அறிகுறியை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இது சாதாரண காய்ச்சல் போன்று வருவதோடு, கழுத்துப் பிடிப்புக்களும் ஏற்படுவதால், இதனை பலர் சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவார்கள்.

காய்ச்சல் அதிகம் இருக்காது

காய்ச்சல் அதிகம் இருக்காது

ஒருவேளை காய்ச்சல் அளவுக்கு அதிகமாக இருந்தால், மருத்துவரை சந்திப்போம். ஆனால் இந்த மூளைக்காய்ச்சல் வந்தால், காய்ச்சல் அதிகமாகவோ அல்லது கடுமையாகவோ இருக்காது. குறைவாகத் தான் இருக்கும். அப்படி நீண்ட நாட்கள் காய்ச்சலுடன் இருக்கும் போதே சித்தப்பிரமை, குழப்பம் மற்றும் வலிப்பு போன்றவையை சந்திக்கக்கூடும்.

கண்டுபிடிக்கும் முறை கடினம்

கண்டுபிடிக்கும் முறை கடினம்

இந்த ஜப்பானிய மூளைக்காய்ச்சலை கண்டறிய ஒரே வழி இடுப்புப்பகுதியில் ஓட்டை போட்டு சிகிச்சை தருவது மற்றும் இரத்த பரிசோதனை செய்வது. அப்படி இரத்த பரிசோதனை செய்யும் போது, இரத்தத்தில் வெள்ளையணுக்கள் மற்றும் புரோட்டீன் அளவுக்கு அதிகமாக இருந்தால், இந்த நோயின் தாக்கத்தைக் கண்டறியலாம்.

CT ஸ்கேன் மூலம் கூட கண்டுபிடிக்க முடியாது

CT ஸ்கேன் மூலம் கூட கண்டுபிடிக்க முடியாது

குறிப்பாக இந்த ஜப்பானிய மூளைக்காய்ச்சலை CT ஸ்கேன் மூலம் கூட கண்டுபிடிக்க முடியாது.

குழந்தைகள் நிலை தான் மோசம்

குழந்தைகள் நிலை தான் மோசம்

முக்கியமாக இந்த நோயால் தாக்கப்படும் குழந்தைகளின் நிலை தான் மிகவும் மோசமாச இருக்கும். ஏனெனில் அவர்களால் எதையும் வெளிப்படுத்த முடியாததால், குழந்தைகளுக்கு இந்த நோய் வந்தால் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகிவிடும்.

15 வயதிற்கும் குறைவான குழந்தைகள்

15 வயதிற்கும் குறைவான குழந்தைகள்

அதிலும் 15 வயதிற்கும் குறைவான குழந்தைகள் தான் இந்த மூளைக்காய்ச்சலுக்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருப்பது தான் காரணம்.

கொசுக்கள் மூலம் பரவும்

கொசுக்கள் மூலம் பரவும்

ஜப்பானிய மூளைக்காய்ச்சலானது கொசுக்களின் மூலம் தான் பரவும். அதிலும் ஒரு கொசு கடித்தால் போது, இந்த காய்ச்சல் உடலை தாக்கி, உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும்.

போதிய தடுப்பூசிகள் இல்லை

போதிய தடுப்பூசிகள் இல்லை

ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் அந்த தடுப்பூசிகளானது குழந்தைகளுக்கு அவ்வப்போது போடுவதில்லை. இருப்பினும் இதனை குழந்தைகளுக்கு சீரான இடைவெளியில் போட்டால், குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சலின் தாக்குதலைத் தடுக்கலாம். எனவே இதைப் பற்றி மருத்துவரிடம் கேளுங்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Encephalitis Fever Can Kill You?

This special type of fever, encephalitis is becoming an epidemic in India. Encephalitis symptoms are hard to detect. Encephalitis in children is usually common. Here are some important reasons that make this disease life threatening.
Desktop Bottom Promotion