For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடைகளில் சாப்பிடுவது ஏன் ஆரோக்கியமற்றது என்பதற்கான காரணங்கள்!!!

By Maha
|

இன்றைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையினால், பலரால் வீட்டில் சமைத்து சாப்பிடவே முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் ஹோட்டல்களில் உணவுகளை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. சொல்லப்போனால் வீட்டில் சமைப்பதை விட, ஹோட்டல் உணவானது மிகவும் சுவையாக இருக்கும். இருப்பினும், எப்போதும் ஹோட்டல்களில் சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கக்கூடும்.

அதுமட்டுமின்றி பலர் நான் நன்கு சுத்தமாக இருக்கும் ஹோட்டலில் தான் சாப்பிடுகிறேன் என்று சொல்வார்கள். என்ன தான் ஹோட்டல் சுத்தமாக இருந்தாலும், சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களானது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவே இருக்கும். அதிலும் அதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நீரிழிவு, வயிற்றுப் பிரச்சனைகள், சிலவகை புற்றுநோய்களுக்கு கூட உள்ளாகக்கூடும்.

மேலும் இது ஹோட்டல் சாப்பாடுகளுக்கு மட்டுமின்றி, இதர ஸ்நாக்ஸ் வகைகளை வாங்கி சாப்பிடும் போதும் சந்திக்கக்கூடும். சரி, இப்போது எப்போதும் கடைகளில் வாங்கி சாப்பிட்டால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் நிறைந்தது

கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் நிறைந்தது

பெரும்பாலான ஹோட்டல்களில் சமைக்கப்படும் உணவுகளில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளானது அதிக அளவில் இருக்கும். எனவே இவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் போது, உடலானது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்படும்.

கழுவாத காய்கறிகள்

கழுவாத காய்கறிகள்

ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுகளில் பயன்படுத்தும் காய்கறிகளானது முற்றிலும் சுத்தமானது என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் காய்கறிகளை பெரும்பாலும் கழுவாமல் தான் பயன்படுத்துகிறார்கள். இப்படி கழுவாமல் காய்கறிகளைப் பயன்படுத்தினால், அது வயிற்றில் குறிப்பாக குடலில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

அசுத்த எண்ணெய்கள்

அசுத்த எண்ணெய்கள்

கடைகளில் பயன்படுத்தும் எண்ணெயானது சுத்தமாக இருக்கவே வாய்ப்பில்லை. அவர்கள் ஒரு பாக்கெட் எண்ணெயை 1-2 வாரம் வரைப் பயன்படுத்துவார்கள். இப்படி எண்ணெயை பலமுறைப் பயன்படுத்தினால், அதனால் ஆரோக்கியம் தான் பாழாகும். குறிப்பாக வயிற்றுப் போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலியை சந்திக்கக்கூடும்.

அசுத்தமான இறைச்சிகள்

அசுத்தமான இறைச்சிகள்

அசைவ உணவுகளை கடைகளில் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். இப்படி அதிகம் சாப்பிடுவதால், உடல்நலம் மோசமான நிலையை வந்தடையும். ஏனெனில் கடைகளில் விற்கப்படும் அசைவ உணவுகளில் பயன்படுத்தும் இறைச்சிகளானது பல நாட்கள் இருப்பதோடு, சரியாக சமைக்காததால், அதில் உள்ள புழுக்கள் மற்றும் இதர பாக்டீரியாக்கள் வயிற்றில் சென்று வயிற்றை அரிக்க ஆரம்பிக்கும். இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

அதிகப்படியான ட்ரான்ஸ் ஃபேட்டி ஆசிட்டுகள்

அதிகப்படியான ட்ரான்ஸ் ஃபேட்டி ஆசிட்டுகள்

பொதுவாக எண்ணெய்களில் ட்ரான்ஸ் ஃபேட்டி ஆசிட்டுகள் இருக்கும். அதிலும் கடைகளில் பயன்படுத்தும் எண்ணெயான வனஸ்பதியில் ட்ரான்ஸ் ஃபேட்டி ஆசிட்டுகளானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், இதனை அதிக அளவில் உட்கொண்டால், கொலஸ்ட்ரால், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்றவற்றால் பாதிக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Eating Out Is Unhealthy

Eating out is unhealthy, period. If you are leading a busy lifestyle and dining out frequently, you should make a point to eat at home more often.
Desktop Bottom Promotion