For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண், பெண் இருவரில் ஃபிட்டானவர் யார்...?

By Boopathi Lakshmanan
|

உடலமைப்பைப் பொறுத்த வரையில் மாறுபட்டிருந்தாலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்ககங்களாகவே ஆண் மற்றும் பெண் இருவரும் உள்ளனர். ஆனால், இருவரில் யார் உடற்தகுதியுடன் ஃபிட்டாக இருக்கிறார் என்று கேட்டால் அந்த கேள்வி குழப்பத்தையே பதிலாகத் தருகிறது.

சமீபத்தில் வாழ்நாள் பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவில் ஆண்களை விட பெண்கள் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. இதை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கும் போது, ஒவ்வொரு பாலினத்திற்கும் வரும் நோய்களிலும், அவற்றின் தாக்கத்திலும் சிற்சில வேறுபாடுகள் உள்ளன.

இவ்வாறாக இருபாலருக்கும் நோய்கள் வரும் வாய்ப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, ஆண், பெண் இருவரில் யார் ஃபிட்டாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்புருக்கி நோய் (Osteoporosis)

எலும்புருக்கி நோய் (Osteoporosis)

எலும்பை உருக்கும் இந்த நோய் பெண்களுடன் தான் அதிக தொடர்பு கொண்டுள்ளது. ஏனெனில், இந்த நோயால் தாக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் பெண்கள் தான். எனினும், 50 ஆண்களில் 5 பேருக்கு என்ற வகையில் இந்த நோய் வளர்ந்து வந்தாலும், இது பெண்பால் நோயாகக் கருதப்படுவதால் ஆண்கள் இதில் பெரியதாகக் கவனம் செலுத்துவதில்லை.

ஏன்?

ஏனெனில் ஆண்களை விட பெண்களின் எலும்புகள் ஆண்களை விட குறைவான அடர்த்தியைக் கொண்டிருப்பதும் மற்றும் மூப்பின் காரணமாக அதிகமான அளவு எலும்பின் அடர்த்தி குறைந்து விடுவதும் தான் காரணம். குறிப்பாக மாதவிடாய்க்குப் பின்னர் எலும்பைப் பாதுகாக்கும் ஈஸ்ட்ரோஜனின் அளவுகள் குறையத் துவங்குகின்றன.

எலும்புருக்கி நோய் (Osteoporosis)

எலும்புருக்கி நோய் (Osteoporosis)

எப்படிக் குறைப்பது?

கால்சியம் மிகவும் நிறைந்திருக்கும் பால் பொருட்கள் மற்றும் வைட்டமின் டி இணை உணவுகள் போன்றவற்றை அதிகளவில் சாப்பிடத் தொடங்கவும். பெரும்பாலான இந்தியர்கள் எலும்பை வலுப்படுத்தும் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை என்பது அறியப்பட்ட உண்மை. ஒரு நாளுக்கு 30 நிமிடங்கள் எடை தூக்கும் பயிற்சிகளை செய்வதன் மூலம், உங்களுடைய உடல் எடையை தானாகத் தூக்க முயற்சி செய்யலாம். ஏரோபிக்ஸ் அல்லது வேகமாக நடத்தல் போன்றவை உடற்பயிற்சிகள் உறுதியான எலும்புகளைக் கொடுக்கும்.

இதய நோய்

இதய நோய்

ஆண்களை விட பெண்களுக்கு மாரடைப்பு வருவது அதிகமாக இருந்தாலும், மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதம் இருபாலருக்கும் சமமாகவே உள்ளது. ஏனெனில், மாரடைப்பால் ஆண்களை விட பெண்கள் இறப்பது அதிகமாக உள்ளது.

ஏன்?

மாதவிடாய்க்கு முன்னர் இதயத்தைப் பாதுகாக்கும் ஈஸ்ட்ரோஜன்கள் பெண்களுக்கு சுரந்தாலும், பின்நாட்களில் அதே வயதுடைய ஆண்களை விட அதிகமாக ஆபத்துகளை எதிர்கொள்கின்றன. 45 வயதுக்குள் இருப்பவர்களில், இதய நோய் வரக் காரணமாக இருக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் பெண்களை விட ஆண்கள் அதிகமாக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். ஆனால் 70-களில் இருக்கும் போது, சராசரியாக பெண்களுக்கே அதிக இரத்த அழுத்தம் இருக்கிறது.

இதய நோய்

இதய நோய்

எப்படிக் குறைப்பது?

தேவைப்பட்டால் எடையைக் குறையுங்கள், புகைப்பழக்கத்தை விட்டொழியுங்கள் மற்றும் 40 வயதுக்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். உங்கள் குடும்பத்தில் இளம் வயதிலேயே இதய நோய் வந்திருந்தால், இந்த பரிசோதனைகளை முன் கூட்டியே செய்வது நல்லது.

பால்வினை நோய்கள்

பால்வினை நோய்கள்

பால்வினை நோய்களால் ஆண்களை விட பெண்கள் அதிகளவிலான ஆபத்துக்குள்ளாகிறார்கள்.

ஏன்?

ஆணுறுப்பின் தோல் பகுதியை விட, பெண்ணுறுப்பின் தோல் பகுதி மெலிதானது மற்றும் மென்மையாது. இதன் காரணமாக பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பெண்களில் உடலுக்குள் எளிதில் ஊடுருவி விடுகின்றன.

பால்வினை நோய்கள்

பால்வினை நோய்கள்

எப்படிக் குறைப்பது?

ஒவ்வொரு முறை உடலுறவு வைத்துக் கொள்ளும் போதும் ஆணுறைகளை பயன்படுத்துங்கள்.

கல்லீரல் நோய்

கல்லீரல் நோய்

கல்லீரல் நோயினால் மரணமடைபவர்களில் 60 சதவீதம் ஆண்களும், 40 பெண்களும் உள்ளனர். எனினும், குறைவான ஆல்கஹாலை சேர்த்துக் கொள்வதால் ஆண்களை விட அதிகமான கல்லீரல் நோய் பாதிப்பு பெண்களுக்கு ஏற்படுகிறது.

ஏன்?

பெண்களை விட ஆண்கள் அதிகமாக ஆல்கஹால் குடித்து வருகிறார்கள் என்பது பழைய பழமொழி என்று சொல்லும் அளவிற்கு பெண்களும் இப்பொழுது போட்டி போட்டு வருகிறார்கள்! அதிகளவிலான கொழுப்புச் சத்து உள்ளவர்களின் உடலில் ஆல்கஹாலை கரைக்கும் திறனம் குறைவாகவே இருக்கும். குடிக்கு குடி என்ற பெயரில், அதிகமான ஆல்கஹாலை பெண்களும் குடித்து வருதல், கொழுப்பின் அளவுகள் கல்லீரலில் அதிகரித்து விடுகின்றன. ஆபத்தும் அதிகரித்து விடுகிறது.

கல்லீரல் நோய்

கல்லீரல் நோய்

எப்படிக் குறைப்பது?

ஆண்கள் ஒரு வாரத்திற்கு 21 யூனிட்டிற்கு மிகாமலும், பெண்கள் 14 யூனிட்டிற்கு மிகாமலும் ஆல்கஹால் அருந்தலாம். அதாவது, ஒரு நாளைக்கு 3 அல்லது நான்கு யூனிட்களை ஆண்களும் மற்றும் 2 அல்லது 3 யூனிட்களை பெண்களும் குடிக்கலாம். அதே போல, ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடிக்காலும் இருக்க வேண்டும்.

ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ காய்ச்சல்

ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ காய்ச்சல்

பெண்களை விட ஆண்களுக்கே ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ ஜீரம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஏன்?

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு செய்த ஆய்வின் படி, பெண்களின் உடலில் அதிகளவிலான நோய் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளன. இதற்காக அவர்கள் உடலில் அதிகளவில் உள்ள ஈஸ்ட்ரோஜன்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த ஹார்மோன்கள் தான் பாட்டில் ஃப்ளூ பூச்சிகளிடமிருந்து போராட பெண்களுக்கு உதவுகின்றன. ஆண்களில் உடலில் உள்ள டெஸ்டோட்ரானின் மோசமான விளைவுகளால் அவர்கள் மேல் வைரஸ் தாக்குதல்கள் எளிதில் நடக்கின்றன.

ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ காய்ச்சல்

ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ காய்ச்சல்

எப்படிக் குறைப்பது?

உங்களுடைய கைகளை அடிக்கடி கழுவுங்கள். ஜலதோஷசத்தால் பாதிக்கப்பட்ட நபரின் கைகளைத்தொட்டு விட்டோ அல்லது கிருமியால் பாதிக்கப்பட்ட இடங்களைத் தொட்டு விட்டோ (கதவின் கைப்பிடிகள்) கைகளைக் கழுவாமல் இருந்தால் வைரஸீக்கு கதவைத் திறந்து விட்டு விடுவீர்கள்.

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஆபத்தான எண்களை நோக்கி அதிகரித்து வருகிறது.

ஏன்?

இன்றைய காலத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக புகைப்பிடிக்கும் இடங்கள் பெருகி வருகின்றன. அதே போல, புகைப்பழக்கத்தை விட முயற்சி செய்து விட்டு விடுவதில், ஆண்களை விட பெண்கள் பின்தங்கியே உள்ளனர். மேலும், பெண்களிடம் அதிகரித்து வரும் ஈஸ்ட்ரோஜன்கள் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் பெருக்கி விடுகின்றன. இதன் காரணமாக, ஆண்களை விட மும்மடங்கு ஆபத்தைப் பெண்கள் எதிர்கொள்கின்றனர்.

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

எப்படிக் குறைப்பது?

10 இல் 9 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு புகைப்பழக்கமே காரணமாக உள்ளது. உடனடியாக புகைப்பழக்கத்தை நிறுத்துங்கள். இதன் மூலம் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் உடனடியாக குறையும், 10 வருடங்களுக்கு புகைப்பிடிக்காமல் இருந்தால் நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு பாதியளவு குறைந்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Who Is More Fitter: Men Or Women?

Men and Woman are two sides of a coin althought their physical appearence is different. But who is more fitter is a common confusing question. The latest research on life expectancy shows that women are still living longer than men. 
Desktop Bottom Promotion