For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீருக்கு சைடு டிஷ்ஷா எது நல்லா இருக்கும்ன்னு தெரியுமா...?

By Maha
|

தற்போது பீரை ஜூஸ் போன்று குடிப்போர் நிறைய பேர் உள்ளனர். அதுமட்டுமின்றி, பல ஆய்வுகளும் பீரை அளவாக சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் என்று சொன்னதும், மக்கள் இதனை ஒருவித குளிர்பானம் போன்று குடிக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் பீர் சாப்பிட்டால், அதற்கு சைடு டிஷ்ஷாக நிறைய ஸ்நாக்ஸ்கள் உள்ளன.

இதுப்போன்று சுவாரஸ்யமானவை: ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

அத்தகைய ஸ்நாக்ஸ்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் ஏன் சீஸ் கூட எடுத்துக் கொள்ளலாம். இப்படி இவற்றை எடுத்துக் கொள்வதால், இது பீர் குடிப்பதால் வயிற்றில் ஏற்படும் மெலிதான லேயர் உருவாவதைத் தடுப்பதோடு, குடித்தப் பின்னர் ஏற்படும் தலைபாரத்தையும் தடுக்கும். அதுமட்டுமின்றி, இந்த உணவுப் பொருட்களை சைடு டிஷ்ஷாக எடுத்துக் கொள்ளும் போது, அது ஆல்கஹால் பருகுவதால் ஏற்படும் தொண்டை எரிச்சலைத் தடுக்கும்.

பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்!!!

ஆகவே அடுத்த முறை பீர் குடிக்கும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக ஆரோக்கியமான உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு சாப்பிட்டு பாருங்கள். இவை பீர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை தடுப்பதோடு, சூப்பராகவும் இருக்கும்.

சரி, இப்போது பீர் சாப்பிடும் போது அதற்கு சைடு டிஷ்ஷாக எந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் சூப்பராக இருக்கும் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ்

உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ்

பீர் சாப்பிடும் போது, அத்துடன் உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.

சீஸ்

சீஸ்

சீஸை சேர்த்து சாப்பிட்டால், அது வயிற்றில் மெலிதான லேயர் ஏற்படுவதை தடுத்து, குடிப்பதனால் வயிற்றில் ஏற்படும் பிரச்சனையை தடுப்பதோடு, பீருக்கு சரியான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழத்தை பீர் சாப்பிடும் போது சாப்பிட்டால், அது பீரின் சுவையை அதிகரித்து காட்டுவதோடு, உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

சிப்ஸ்

சிப்ஸ்

பொதுவாக பீர் சாப்பிடும் போது சிப்ஸ் எடுத்துக் கொள்வது வழக்கம். இப்படி எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களை உட்கொள்வது ஆரோக்கியமற்றதாக இருந்தாலும், பீருக்கு சிப்ஸ் சரியான பொருத்தமாக உள்ளது.

பிரெஞ்சு ஃப்ரைஸ்

பிரெஞ்சு ஃப்ரைஸ்

இது ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளில் ஒன்றாக இருந்தாலும், இதுவும் பீருக்கு சூப்பராக இருக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இதுவும் உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படுவது தான். ஆனால் இதனை எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக வேக வைக்கப்படும்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

உப்புள்ள மாட்டிறைச்சி கூட பீருக்கு அருமையான ஒரு சைடு டிஷ். மேலும் நிறைய மக்கள் பீர் சாப்பிடும் போது, சைடு டிஷ்ஷாக சில்லி பீஃப் வாங்கி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால், இது உடலில் கொழுப்புக்கள் சேர்வதை தடுப்பதோடு, மறுநாள் தலை பாரம் ஏற்படுவதையும் தடுக்கும்.

ஸ்பகெட்டி

ஸ்பகெட்டி

ஸ்பகெட்டி ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். அதிலும் இதனை பீர் சாப்பிடும் போது சாப்பிட்டால், இது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும்.

சாக்லெட்

சாக்லெட்

ஒரு டம்ளர் பீர் குடிக்கும் போது, டார்க் சாக்லெட் சாப்பிட்டால், அது வயிற்று உப்புசம் ஏற்படுவதைத் தடுக்கும்.

மூலிகைகள்

மூலிகைகள்

துளசி, தைம் மற்றும் ரோஸ்மேரி போன்ற மூலிகைகளை பீர் குடிக்கும் போது எடுத்துக் கொண்டால், அது ஆல்கஹால் குடிக்கும் போது ஏற்படும் தொண்டை எரிச்சலைத் தடுக்கும்.

சாலட்

சாலட்

ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, காய்கறிகள் மற்றும் முளைக்கட்டிய பயிர்கள் சேர்த்து செய்யப்பட்ட சாலட்டை பீருடன் சேர்த்து சாப்பிட்டால், அது இன்னும் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What To Eat With Beer: Food Pairings

Beer which is a trademark beverage is usually enjoyed with a lot of snacks on the side. Many are unaware that beer can be consumed with healthy snacks like fruits, vegetables and even cheese. When you eat healthy food along with a glass of beer, it forms a thin lining around the inside of the stomach preventing a hangover.
Desktop Bottom Promotion