For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹான்ஸ் என்னும் போதைப் பழக்கத்தை நிறுத்தும் வழிகள்!!!

By Ashok CR
|

ஹான்ஸ் எனப்படும் புகையிலையை மெல்லும் பழக்கத்துடன் பலதரப்பட்ட உடல்நல பிரச்சனைகள் தொடர்பில் உள்ளது. அதில் மிக முக்கியமானது தான் புற்றுநோய். அதிலும் வாய், தொண்டை, நாக்கு, கன்னம் மற்றும் உணவுக் குழாய்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு இந்த பழக்கமே முக்கிய காரணமாக விளங்குகிறது. புகையிலை மெல்லும் பலருக்கும் வாயில் புண் மற்றும் சிதைவுகள் ஏற்படுகிறது. இவையனைத்தும் புற்றுநோய் வருவதற்கான அறிகுறியாகும்.

புகையிலையை மெல்லும் போது அதில் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ளது. அது எவ்வளவு தீமையை தரும் என்பது நமக்கு தெரியாமல் இல்லை. ஊண் நோய்கள் ஏற்படுவதற்கும், பற்களின் எனாமல் தேய்வதற்கும் கூட இது வழிவகுக்கிறது. இதனால் பற்கள் சொத்தையாகவும் செய்கிறது. புகையிலை மெல்லுவதை நிறுத்தினால், நெஞ்சு வலி மற்றும் வாதம் ஏற்படும் அபாயம் குறையும்.

புகையிலை மெல்லும் பழக்கத்தை நிறுத்த நினைத்தால், அதனை முழுமையாக நிறைவேற்ற பாருங்கள். இல்லயென்றால் அதனை செயல்படுத்துவதில் நீங்கள் சிரமப்படுவீர்கள். இதனை கைவிட கஷ்டமாக இருக்கும் நேரத்தில், இந்த பழக்கத்தை கைவிடுவதற்கான காரணத்தை பட்டியலிட்டு கொள்ளுங்கள்.

புகையிலை மெல்லும் பழக்கத்தை நிறுத்துவதற்கு நீங்கள் செய்ய வேண்டியவைகளை முதலில் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அவைகள் கீழ் வருமாறு:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவரிடம் பேசுங்கள்

மருத்துவரிடம் பேசுங்கள்

புகையிலை மெல்லும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்றால், அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் மருத்துவரை அனுகுங்கள். இந்த பழக்கத்தை நிறுத்துவதற்கு சுலபமான வழிகள் இருக்கிறதா என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

புகையிலை மெல்லும் பழக்கத்தை நிறுத்த, அதற்கு அடிமையாவதை பற்றியும், அதனால் உங்கள் உடல் நலனுக்கு ஏற்பட போகும் தீமையை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பழக்கத்தை நிறுத்துவதற்கான வழிகளை பற்றியும் ஒரு அலசு அலசுங்கள். இதைப் பற்றி இணையதளத்திலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரே நாளில் நிறுத்துவது

ஒரே நாளில் நிறுத்துவது

ஒரே நாளில் இந்த பழக்கத்தை கைவிட நினைத்தால், கண்டிப்பாக உங்கள் முயற்சியில் நீங்கள் தோற்று தான் போவீர்கள். முதலில் இந்த பழக்கத்தை நிறுத்த போவதாக முடிவு எடுங்கள். அதன் பின் முதல் வாரம் அதன் பயன்பாட்டை மெதுவாக குறைக்கவும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கடைசியாக இந்த பழக்கத்தை நிறுத்திடுங்கள்.

ஒரு நாளைக்கு ஒரு முறை

ஒரு நாளைக்கு ஒரு முறை

புகையிலை மெல்லும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது. "இனி கண்டிப்பாக தொட மாட்டேன்." என்று மட்டும் கண்டிப்பாக நினைக்காதீர்கள். இது உங்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்கும். ஒவ்வொரு நாளின் தொடக்கத்தின் போதும் இனி புகையிலை பயன்படுத்த மாட்டேன் என கூறிக் கொள்ளுங்கள். வரப்போகும் ஒவ்வொரு நாளையும் மகிழ்வுடன் கொண்டாடிடுங்கள்.

உங்களை தூண்டி விடுவதை தெரிந்து கொள்ளுங்கள்

உங்களை தூண்டி விடுவதை தெரிந்து கொள்ளுங்கள்

இந்த பழக்கத்திற்கு உங்களை மீண்டும் தூண்டி விடும் காரணங்கள் பல உள்ளது. புகையிலை மெல்லும் பழக்கத்தை கைவிட்டால், மீண்டும் உங்களை தூண்டும் விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள் - சோர்வு, அழுத்தம், செயல்படாமல் இருத்தல், நண்பர்கள் போன்ற காரணங்களை கூறலாம்.

மாற்று

மாற்று

புகையிலை மெல்லும் பழக்கத்தை கைவிடும் ஆரம்ப கட்டத்தில், இது பயனுள்ளதாக இருக்கும். அதனால் சூயிங் கம் அல்லது பழங்கள் உண்ணுதல் போன்ற பழக்கங்களால் உங்கள் மனதை அதிலிருந்து திசை திருப்பலாம். ஆனால் அதிலிருந்து மனதை திசை திருப்ப புகைப்பிடித்தல் அல்லது இனிப்புகள் உண்ணுவது போன்ற தீய பழக்கங்களை தேர்ந்தெடுத்து விடாதீர்கள்.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

உங்கல் முன்னேற்றத்தை குறித்துக் கொண்டே வாருங்கள். அதே போல் பிற விஷயங்களில் உங்களை சுறுசுறுப்புடன் வைத்திருந்ததை பற்றியும் குறித்துக் கொண்டு வாருங்கள். உங்கள் மன நிலையையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அந்த பழக்கத்தை கையில் எடுத்தால் கவலைப் படாதீர்கள். மாறாக, என்ன தவறு நடந்தது என்று ஆய்வு செய்யுங்கள்.

நண்பர்களிடம் கூறுங்கள்

நண்பர்களிடம் கூறுங்கள்

உங்களை சுற்றியுள்ளவர்கள் இல்லாமல் உங்கள் வாழ்க்கை முறையிலோ அல்லது பழக்க வழக்கத்திலோ எந்த ஒரு மாற்றமும் வந்து விடாது. அதனால் நீங்கள் புகையிலை மெல்லும் பழக்கத்தை நிறுத்தி விட்டதை உங்கள் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் தெரிவியுங்கள். உங்கள் முயற்சியில் உங்களை ஊக்குவிக்கவும் உங்களுக்கு துணை நிற்கவும் அவர்களை கேட்டுக் கொள்ளுங்கள்.

ஆதரவு குழுவில் சேர்ந்திடுங்கள்

ஆதரவு குழுவில் சேர்ந்திடுங்கள்

இந்த பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க அதற்கு ஆதரவு அளிக்கும் குழுக்கள் பல உள்ளது. அப்படிப்பட்ட ஒரு குழுவில் சேர்ந்து கொள்ளுங்கள். பழக்கத்தை கைவிட்ட பின் நீங்கள் சந்திக்கும் மாற்றங்கள், தூண்டுகோல்கள், குணாதிசய பிரச்சனைகள், அழுத்தங்கள் மற்றும் மீண்டும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுவோமா என்ற பயம் என அனைத்தைப் பற்றியும் அவர்களிடம் பேசலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Stop Tobacco Chewing Addiction

When you first decide to stop tobacco chewing habit, make sure that you are completely committed, or you will struggle to stick to a plan.
Desktop Bottom Promotion