For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவில் உப்பைக் குறைக்க நினைக்கிறீங்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!!

By Karthikeyan Manickam
|

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்று பழமொழி இருக்கிறது. உப்பே இல்லாத ஒரு உணவை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கும். சிறு வயதிலிருந்தே உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வருவதால், அதன் ருசிக்கும் நாம் அடிமையாகி இருக்கிறோம் என்பது தான் உண்மை.

ஆனால், உணவில் உப்பு அதிகமாக அதிகமாக உடலுக்குக் கெடுதலும் அதிகமாகிறது. இதனால் உடலில் உப்பின் அளவைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது அவசியமாகும். உணவில் உப்பை நன்றாகக் குறைத்து விட வேண்டும்; அல்லது, உப்பே இல்லாமல் சாப்பிட்டாலும் நல்லதே!

இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள சில இயற்கையான வழிகள்!!!

பெரும்பாலானவர்கள் உப்பின் சுவைக்கு அடிமையாகி இருப்பதால், அதைக் குறைக்க முடியாமல் தவித்து வருவார்கள். அப்படி உப்பைக் குறைப்பதற்கான முயற்சிகளில் நீங்களும் ஈடுபட்டுள்ளீர்களா? உணவின் சுவையே குறையாமல் உப்பைக் குறைப்பதற்கான சில ஐடியாக்களை இங்கு தருகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு நாளைக்கு எவ்ளோ?

ஒரு நாளைக்கு எவ்ளோ?

ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 5 கிராம் (சுமார் ஒரு டீ ஸ்பூன்) உப்பு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. அதற்குத் தக்கவாறு ஒவ்வொரு உணவிலும் நீங்கள் உப்பைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உப்பு குறைவான ரெசிபி

உப்பு குறைவான ரெசிபி

எந்த உணவில் உப்பு குறைவாகச் சேர்த்தால் போதுமானது என்று இன்டர்நெட்டில் ஒரு அலசு அலசுங்கள். அவற்றில் உங்களுக்குப் பிடித்த உணவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அடிக்கடி சோதனை

அடிக்கடி சோதனை

சமைக்கும் போது முதலில் மிகவும் சிறிதளவு உப்பு மட்டுமே சேருங்கள். ஆனால் சமைத்துக் கொண்டிருக்கும் போது அடிக்கடி உப்பு போதுமா என்று சோதித்து, தேவையானால் மட்டும் எக்ஸ்ட்ரா உப்பைச் சேர்த்துக் கொள்ளலாம்.

ருசி குறைவை ரசி!

ருசி குறைவை ரசி!

எல்லாம் ருசியில் தான் அடங்கியுள்ளது! அதிக ருசியை நாடுவதால் தான் அதிக உப்பை உணவில் சேர்க்க வேண்டியுள்ளது. உப்பு குறைவால் ஏற்படும் ருசியின் குறைவையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உப்புக்கு மாற்று?

உப்புக்கு மாற்று?

உணவின் ருசிக்கு எப்போதுமே உப்பைத் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. உப்புக்குப் பதிலாக ஏதாவது மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா என்று யோசித்து, முயற்சித்துப் பாருங்கள். சில மூலிகைப் பொருட்கள் கூட உப்புக்கு மாற்று என்று கூறப்படுகிறது. ஏன் சோயா சாஸ் கூட உப்புக்கு சிறந்த மாற்றுப் பொருள் தான்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Trying To Reduce Salt From Food, Try These Tips

Here are five tips to help ensure you're enjoying healthy food with great taste.
Desktop Bottom Promotion