For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அளவுக்கு அதிகமான தூக்கம் ஆரோக்கியமற்றது: ஏன்?

By Ashok CR
|

எவ்வளவு அதிமாக தூங்குகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரமாக உங்கள் உடல் சிதையத் தொடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிக நேரம் தூங்குவது சில நேரம் நல்லது தான் என்றாலும் கூட, அது அதிகரிக்கையில் நம் உடலில் மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கி விடும். அதிகமாக தூங்கினால் உடலில் சோம்பல் ஏற்படும். இதனால் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கண்களுக்கு கீழ் கனத்த வீக்கங்கள் ஏற்படும்.

அளவுக்கு அதிகமாக தூங்குவது இதயத்திற்கு நல்லதல்ல. அதற்கு காரணம் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் இருப்பதாலே. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அளவுக்கு அதிகமாக நீங்கள் தூங்குவதை கடைப்பிடிக்க கூடாது. சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் இதய நோய்களே அதிகமாக தூங்குவதற்கு காரணமாக உள்ளது.

நீங்கள் அளவுக்கு அதிகமாக தூங்கும் போது, உங்கள் உடல் ஒரே நிலையில் தான் பல மணி நேரம் இருக்கும். நாளடைவில் உங்கள் உடல் இதற்கு பழக்கமாகி விடும். அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை கொள்வது கடினமாகி விடும். அதிகமாக தூங்குவதால் ஏற்படும் சில பக்க விளைவுகளை தான் இப்போது பார்க்க போகிறோம். இந்த விளைவுகளை பற்றி தெரிந்து கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோய் உண்டாகும் வாய்ப்பு

சர்க்கரை நோய் உண்டாகும் வாய்ப்பு

தினமும் 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு சர்க்கரை நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது.

சுறுசுறுப்பான வாழ்க்கையை இழப்பீர்கள்

சுறுசுறுப்பான வாழ்க்கையை இழப்பீர்கள்

அதிகமாக தூங்குவதால், நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதில்லை. இதனால் ஆற்றல் திறனை எரிக்க உடலுக்கு குறைவான நேரமே கிடைக்கும். அதனால் அது கொழுப்பாக உங்கள் உடலில் தேங்கி விடும். அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் முக்கியமான பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.

உடல் பருமன்

உடல் பருமன்

ஆய்வின் படி, அதிகமாக தூங்காதவர்களை விட, அதிகமாக தூங்குபவர்களில், 21% பேர்களுக்கு உடல் பருமன் ஏற்படும் இடர்பாடு அதிகமாக உள்ளது.

அதிக தலைவலி

அதிக தலைவலி

அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பொதுவான மற்றும் விரும்பத்தகாத பக்க விளைவுகளில் ஒன்று தான் தலைவலி. அதிகமாக தூங்குவதால் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் தாக்கம் ஏற்படும்.

முதுகு வலி உண்டாகும்

முதுகு வலி உண்டாகும்

முது வலி அதிகமாக இருக்கும் காரணத்தினாலும் கூட அதிக நேரம் தூங்குவார்கள். ஆனால் நீங்கள் ஃபிசியோதெரபி செய்யாமல் சும்மா படுத்துக் கிடந்தால், உங்கள் ஆரோக்கியம் மோசமடைய தான் செய்யும்.

அழுத்தத்தை உண்டாக்கும்

அழுத்தத்தை உண்டாக்கும்

அழுத்தம் ஏற்படும் காரணத்தினால் அதிக நேரம் தூக்கம் உண்டாகும். ஆனால் கூடுதலான மணி நேரத்திற்கு தூங்கினால், அது எரிச்சலூட்டும் அழுத்தத்தை உண்டாக்கும். அதிகமாக தூங்குவதால் உடல் ஆரோக்கியமில்லாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இதயத்திற்கு ஆபத்தானது

இதயத்திற்கு ஆபத்தானது

அதிகமாக தூங்குவதால் முக்கியமாக பாதிக்கப்பட போவது உங்கள் இதயமே. ஆய்வுகளின் படி, அளவுக்கு அதிகமான மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம்.

தூக்க போதை

தூக்க போதை

உங்களுக்கு தூக்க போதை என்றொரு பிரச்சனை இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால், நீங்கள் தூக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் நடுவே இருப்பீர்கள். அதனால் தான் அதிகமாக தூங்குவது உடலுக்கு நல்லதல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Oversleeping Is Unhealthy: Why?

Oversleeping is not at all healthy for you, if you thought! Here are some of the causes of oversleeping with its side effects.
Story first published: Saturday, September 27, 2014, 16:16 [IST]
Desktop Bottom Promotion