For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 வயதில் கட்டாயம் செய்ய வேண்டிய சில முக்கியமான மருத்துவ பரிசோதனைகள்!!!

By Ashok CR
|

நீங்கள் 30 வயதை நெருங்கி கொண்டிருப்பவரா? அப்படியானால் 30 வயதை தொடும் முன் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு பெரிய பட்டியலே உள்ளது. இவைகளுக்கெல்லாம் நேரமே இல்லாமல் இருந்திருக்கும்... விடுமுறை எடுப்பது, நடனம் கற்பது, வானத்தில் பறப்பது... கடைசியாக மருத்துவ பரிசோதனையும் கூட!

ஆனால் மருத்துவ சோதனை என்று வரும் போது, எந்த சோதனைகளை எல்லாம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாது. கவலை வேண்டாம் - 30 வயதில் எடுக்க வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் பற்றி மருத்துவர்கள் த்வனிகா கபாடியா மற்றும் பிரகாஷ் லுல்லு நமக்கு விவரமாக கூறியுள்ளார்கள்.

சுவாரஸ்யமான வேறு: கூச்சப்படாம வீட்டுக்குள்ள 'சும்மா' சுத்துங்க.. உடம்புக்கு ரொம்ப நல்லதாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிப்படை இரத்த சோதனை

அடிப்படை இரத்த சோதனை

அனைவரும் தங்களின் உடலில் உள்ள இரத்தத்தின் எண்ணிக்கை, ஹீமோகுளோபின் அளவு மற்றும் இரத்தவெண் செல்லெண்ணிக்கை போன்றவைகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். வைட்டமின் பி12 அல்லது டி3 போன்ற ஊட்டச்சத்து குறைபாடு ஏதேனும் இருந்தாலும் கூட, அதனை இரத்த சோதனை வெளிப்படுத்தும்.

இரத்த சர்க்கரை சோதனை

இரத்த சர்க்கரை சோதனை

சர்க்கரை நோயை கண்டறிவதற்கு இரத்த சர்க்கரை சோதனை தேவைப்படும். அதிலும் ஹீமோகுளோபின் க்ளைகேஷனை (இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குளுகோஸின் அடர்த்தியை தெரியப்படுத்தும்) சோதனை செய்யலாம். சர்க்கரை நோய் மற்றும் இதயகுழலிய நோய்களுடன் சம்பந்தப்பட்டது ஹீமோகுளோபின் க்ளைகேஷன்.

சிறுநீர் பரிசோதனை

சிறுநீர் பரிசோதனை

உடலில் ஏதேனும் தொற்றுக்களை கண்டறிய சிறுநீர் பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.

யூரிக் அமில பரிசோதனை

யூரிக் அமில பரிசோதனை

மூட்டு வலி இருக்கும் போது இது முக்கியமாக தேவைப்படும். யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் போது, இளவயது ஆண்களுக்கு கீல்வாதம் ஏற்படும்.

கல்லீரல் மற்றும் சிறுநீரக சோதனை

கல்லீரல் மற்றும் சிறுநீரக சோதனை

இவைகள் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு இந்த சோதனையாகும். உங்கள் உடலின் ஹார்மோன் அளவுகளும், என்சைம் செயல்பாடுகளும் சரியாக உள்ளதா என்பதையும் தெளிவுப்படுத்தும்.

க்ரியேடினைன் அளவுகளை சோதித்தல்

க்ரியேடினைன் அளவுகளை சோதித்தல்

உங்கள் சிறுநீரகம் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள இந்த சோதனை தேவைப்படுகிறது. அதற்கு க்ரியேடினைன் சோதனையை மேற்கொள்ள வேண்டும். இதுவும் ஒருவகையான இரத்த பரிசோதனை தான்.

கொழுப்பு சோதனை/ஈசிஜி

கொழுப்பு சோதனை/ஈசிஜி

"நீங்கள் உடல்ரீதியாக அதிக வேலை பார்ப்பதில்லை என்றால், கொழுப்பு சோதனையை மேற்கொள்ளுங்கள்" என்று டாக்டர் கபாடியா கூறுகிறார். ட்ரைகிளைசெரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ராலை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், வருங்காலத்தில் ஏற்படும் இதய சம்பந்த பிரச்சனைகளில் இருந்து தப்பலாம். அளவுக்கு அதிகமான சோர்வு, வியர்த்து கொட்டுதல், பதற்றம் மற்றும் நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் தான் ஈசிஜி (எக்கோ கார்டியிக்ராம்) சோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார். எனவே வருங்காலத்தை மனதில் வைத்து செய்யப்படுவது இந்த சோதனை.

பொதுவான உடல் பரிசோதனை

பொதுவான உடல் பரிசோதனை

இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை போன்ற பிற முக்கியமானவைகளையும் சோதித்து கொள்ள வேண்டும்.

தைராய்டு சோதனை

தைராய்டு சோதனை

பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை தான் தைராய்டு. தைராய்டு பிரச்சனை அல்லது தைராய்டு நோய் என்பது போதுமான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பிகள் சுரக்கவில்லை என்றால் உண்டாகும். இதனால் அளவுக்கு அதிகமான உடல் பருமன் அல்லது மெலிதல் உண்டாகும். அதனால் கீழ்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் அதற்கான சோதனையை மேற்கொள்ளுங்கள். அவையாவன மிகுதியான சோர்வு, உடல் பருமன், உடல் எடை குறைதல்.

சோனோகிராஃபி

சோனோகிராஃபி

சோனோகிராஃபி செய்து கொண்டால் உங்கள் கல்லீரல், சிறுநீரகம், சினைப்பை மற்றும் கர்ப்பப்பை சீராக செயல்படுகிறது என்பதை தெரியப்படுத்தும். உங்கள் உடலில் உள்ள அனைத்து என்சைம்களும் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதையும் தெரியப்படுத்தும். பாலிசிஸ்டிக் ஒவேரி சிண்ட்ரோம் (PCOD) அல்லது கர்ப்பப்பை கட்டி உண்டாவதையும் வெளிக்காட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Must Do Medical Test At 30

When you think of medical tests, you don’t know which ones you need to take. Worry not - Dr. Dhwanika Kapadia and Dr Prakash Lulla tell us everything we need to know about must-do medical tests for 30 year olds.
 
Desktop Bottom Promotion