For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொன்னுக்கு வீங்கி வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!

By SATEESH KUMAR S
|

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று சொல்வார்கள். ஆனால் கிருமிகள் பெருகிவிட்ட இந்த கால கட்டத்தில் பலவித நோய்கள் நம்மை தாக்குகின்றன. ஆரோக்கிய வாழ்வு வாழ நோய்கள் நம்மை அண்டாமல் காத்து கொள்ள வேண்டும். அந்த வகையில் பொன்னுக்கு வீங்கி நோய் குறித்தும், அதற்கான அறிகுறிகள், தடுக்கும் முறை ஆகியவை குறித்தும் காணலாம்.

நாம் உடலில் எளிதில் பரவி நோயினை ஏற்படுத்தும் பொன்னுக்கு வீங்கி ஒரு வைரஸ் தொற்று நோயாகும். குறிப்பாக நமது ஒவ்வொரு கன்னத்திலும் பின்னோக்கி காது மற்றும் தாடை ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ள உமிழ்நீர் சுரப்பிகளை அதிகம் பாதிக்கிறது. இந்‌நோயினால் வீக்கம் மற்றும் உமிழ்நீர் சுரப்பிகளில் வலி ஆகியவை தோன்றும். இப்போது இந்த பொன்னுக்கு வீங்கி பற்றி விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொன்னுக்கு வீங்கி ஏற்பட முக்கிய காரணம்

பொன்னுக்கு வீங்கி ஏற்பட முக்கிய காரணம்

பொன்னுக்கு வீங்கி நோய் ஏற்பட முக்கிய காரணம் வைரஸ் ஆகும். இது பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவருக்கு உமிழ் நீர் மற்றும் இருமல், தும்மல் ஆகியவற்றின் போது வெளிப்படும் கிருமிகள் மூலம் எளிதில் பரவும். மேலும் இது வைரஸ் நோயினை ஏற்படுத்திய பிறகு 14-18 நாட்கள் வரை அறிகுறிகள் காணப்படும்

பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள்

பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள்

காய்ச்சல், தலைவலி, பசியின்மை, பலவீனம், மெல்லும் போது அல்லது விழுங்கும் போது வலி, வீங்கிய கன்னங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய லேசான அறிகுறிகளே காணப்படும்.

பொன்னுக்கு வீங்கி நோயினை உறுதிப்படுத்தும் வழிகள்

பொன்னுக்கு வீங்கி நோயினை உறுதிப்படுத்தும் வழிகள்

நமது காதுகளுக்கு சற்று முன்பாக தாடை பகுதியில் காணப்படும் வீக்கதின் மூலம் இந்‌நோயினை எளிதாக உறுதி செய்யலாம். இரத்த பரிசோதனை அல்லது கல்சர் எனப்படும் சோதனையின் மூலமும், நாம் இந்‌நோயினை உறுதி செய்ய முடியும். பொன்னுக்கு வீங்கி வைரஸ் நோய்க்கு எதிரான ஆன்டிபாடிகள் (antibodies) இரத்தத்தில் இருப்பதை உறுதி செய்வதன் மூலமும் கூட, இந்‌நோயினை உறுதி செய்ய முடியும்.

பொன்னுக்கு வீங்கி நோய்க்கான சிகிச்சைகள்

பொன்னுக்கு வீங்கி நோய்க்கான சிகிச்சைகள்

பொன்னுக்கு வீங்கி ஒரு வைரஸ் நோயாக இருந்தாலும் கூட, அதனை ஆன்டி-பயாடிக் (பாக்டீரியாக்களை அழிக்க வல்ல பெனிசிலின் போன்ற பொருள்) சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியாது. இது வெறும் இரண்டு வாரத்திற்குள் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும். மேலும் ஐப்யூப்ரோஃபென் மற்றும் பாரா சிட்டமால் போன்ற வலி நிவாரணிகளையும் பயன்படுத்தலாம் மற்றும் வீக்கம் ஏற்பட்ட பகுதிகளில் குளிரான பொருட்கள் கொண்டு ஒற்றி எடுத்தல் ஆகியவற்றின் மூலம் இந்‌நாயின் தாக்கத்தை குறைக்க முடியும்.

கை வைத்தியங்களான முழுமையான ஓய்வு, வீங்கிய இடங்களில் குளிரான பொருட்களைக் கொண்டு ஒற்றி எடுத்தல், அதிகம் மெல்ல தேவையில்லாத மென்மையான உணவினை உண்ணுதல், அதிகமான திரவ உணவு வகைகளை வழங்குதல், புளிப்பான சிட்ரஸ் வகை பழங்களை தவிர்த்தல் போன்றவையும், நோய் பரவுவதை தவிர்க்க நோயாளியினை தனிமைப்படுத்துதல் ஆகியவையும் இந்நோய்க்கான சிகிச்சைகள் ஆகும்.

பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பு முறைகள்

பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பு முறைகள்

* எம்எம்ஆர்(அம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா) தடுப்பூசி முறை இந்நோயினை தடுக்க பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பு முறை ஆகும்.

* எம்எம்ஆர் தடுப்பூசி இரண்டு முறையாக, அதாவது 12-15 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும், 4-6 வயதுள்ள சிறார்களுக்கும் போட வேண்டும். ஆரம்ப வயதுகளில் தடுப்பூசி போடவில்லை என்றால் 11-12 வயதுக்குள் தடுப்பூசியினை போட வேண்டும்.

'வரும் முன் காப்பதே சிறந்தது' என்பதால், தடுப்பூசியினை பயன்படுத்தி நோய் வராமல் காப்போம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mumps: Causes, Symptoms And Treatment

Mumps is a viral infection, which spreads easily and can infect many parts of the body, but mainly affects the salivary glands which are situated toward the back of each cheek in between the ear and jaw.
Desktop Bottom Promotion