For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விரல் நுனியில் இருக்கும் அதிசயிக்க வைக்கும் சிகிச்சைகள்!!!

By Ashok CR
|

இன்றைய வாழ்க்கை சூழலில் வசதி வாய்ப்புகளும் தொழில் நுட்பங்களும் பெருக பெருக நோய்களும் அதற்கு சமமாக பெருகி வருகிறது. இன்றைய தேதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்குவது மருத்துவமனை. அத்தை வியாதிகள். ஏன், சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட நாம் மருத்துவமனைக்கு தானே செல்கிறோம்.

இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள்!!!

மாத்திரைகள் மற்றும் நவீன காலத்து மருந்துகள் வருவதற்கு முன்பாகவே, வியாதிகளை போக்க இயற்கை அன்னை நமக்காக பல வீட்டு சிகிச்சைகளை அளித்திருக்கிறது. பொதுவாக ஏற்படும் வலிகளுக்கான சில வீட்டு சிகிச்சைகளை பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கமின்மை

தூக்கமின்மை

தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டால், சிறிது பாதாமை பொடியாக்கி, அதனை உங்கள் பாலில் கலந்து, சூடு போவதற்குள் குடித்து விடுங்கள். மேலும் வெறும் பாலை குடித்தாலே போதும், இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். படுக்க செல்லும் முன், உங்கள் பாதங்களில் தூய்மையான பசுவின் நெய்யை தடவிக் கொண்டாலும் நல்ல தூக்கம் வரும் அல்லது தண்ணீருடன் தேங்காய் எண்ணெயை கலந்து, தலை, உள்ளங்கை மற்றும் பாதங்களில் தேய்த்துக் கொண்டு படுங்கள். இது நல்ல தூக்கத்தை அளிக்கும்.

சதை பிடிப்பு/சுளுக்கு

சதை பிடிப்பு/சுளுக்கு

தினமும் காலையில், கடுகு எண்ணெயை கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் உள்ளங்கையில் சிறிது எண்ணெயை ஊற்றி உடல் முழுவதும் நன்றாக தேய்க்கவும். பின் நன்றாக குளித்து விடுங்கள். குளிர் காலத்தில் இது முக்கியமாக தேவைப்படும். சிறிது கடுகு பொடியை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை உங்கள் உள்ளங்கை மற்றும் பாதங்களில் தடவலாம்.

சன் ஸ்ட்ரோக்

சன் ஸ்ட்ரோக்

சிறிதளவு மாங்காய் சாறுடன் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து பருகினால், சன் ஸ்ட்ரோக்குக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும். ஒரு நாளைக்கு இதனை இரண்டு அல்லது மூன்று முறை பருகவும். வெங்காய துண்டுகளில் குளிர்ச்சியூட்டும் தன்மை அடங்கியுள்ளதால், அவைகளை உங்கள் தலை மற்றும் நெற்றியில் தடவி கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் பருகுங்கள்.

தலைவலி

தலைவலி

உங்களுக்கு அடிக்கடி மைக்ரைன் பிரச்சனை ஏற்பட்டால், உங்கள் தினசரி உணவோடு 5 பாதாம் மற்றும் சூடான பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், பால் அல்லது தேனுடன் சிறிது மிளகாய் தூவி அதனை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பருகுங்கள்.

இதில் பல வெளிப்புற பயன்பாடும் அடங்கியுள்ளது. அதனால் பல நன்மைகளும் கிட்டுகிறது. ஈரப்பதமான பாதாம்களை கல்லில் தேய்த்து பேஸ்ட் தயார் படுத்திக் கொள்ளுங்கள். இதனை உங்கள் நெற்றியில் தடவலாம். மேலும் வேப்ப பொடியை மெதுவாக நெற்றியில் தடவினாலும் நல்ல உணர்வை ஏற்படுத்தும் அல்லது ஒரு ஈர துணியில் கொஞ்சம் நறுமண நீர் சேர்த்து நெற்றியில் வைத்தாலும் நல்ல பயனை அளிக்கும்.

முதுகு வலி

முதுகு வலி

உங்களுக்கு தீவிரமான முதுகு வலி இருந்தால், உங்கள் உடலை வெதுவெதுப்புடன் வைத்து சூடான உணவுகளை உட்கொள்ளுங்கள். தினசரி உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். யூகலிப்டஸ் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்தாலும் நல்ல பலனை அளிக்கும். கொதிக்க வைத்த பெருஞ்சீரகம் விதைகளுடன் கொஞ்சம் கடுகு எண்ணெயை கலந்தும் பயன்படுத்தலாம். 5 கருப்பு மிளகு, 5 கிராம்பு, 1 கிராம் காய்ந்த இஞ்சி பொடியை உங்கள் தேநீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகுங்கள்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

உங்கள் உணவில் எப்போதும் குளிர்ந்த மற்றும் புளிப்பான பொருட்களை சேர்த்துக் கொள்ளாதீர்கள். ஓமத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீருடன் கொதிக்க வையுங்கள். இதனுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து, தினமும் ஒரு முறையாவது குடித்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மூக்கில் இரத்தக்கசிவு

மூக்கில் இரத்தக்கசிவு

இப்பிரச்சனை தீவிரமாக இருந்தால், தினமும் குல்கந்து எடுத்துக் கொள்ளுங்கள். அது தீவிர பயனை அளிக்கும் அல்லது நெல்லிக்காயில் இருந்து ஊறுகாய் செய்து, தினமும் காலையில் அதனை உண்ணுங்கள். உடனடி நிவாரணத்திற்கு, குளிர்ந்த நீரில் நனைத்த துணியை நெற்றி மற்றும் மூக்கின் மீது வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Magic Remedies At Your Fingertips

Much before the existence of pills and the modern antibiotics, Mother Nature offered a bountiful home remedies to cure all ills. Some home remedies to take care of your regular aches and pains.
Desktop Bottom Promotion