For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லீரல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள்!!!

By Ashok CR
|

கல்லீரல் என்பது மனித உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். கல்லீரல் என்பது நம் உடம்பில் இருக்கும் மிகப்பெரிய சுரப்பி மற்றும் இரண்டாவது பெரிய உறுப்பு. ஆரோக்கியமான வாழ்விற்கு கல்லீரலின் செயல்பாடு மிகவும் அவசியமானது. கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் பல முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது கல்லீரல் புற்றுநோய். இது உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கலாம்.

கல்லீரலின் செயல்பாடு ஒழுங்காக இருக்கிறதா என்ற சந்தேகம் ஒருவருக்கு ஏற்பட்டால், அதுவே கல்லீரல் புற்றுநோய்க்கான முதல் கட்ட அறிகுறியாகும். கல்லீரல் புற்றுநோயின் முதல் கட்ட அறிகுறிகளை தெரிந்து கொண்டால், ஒரு மருத்துவரின் உதவியை சீக்கிரத்திலேயே நாடலாம். முதல் கட்ட அறிகுறிகளை காட்டும் போது சிகிச்சையை தொடங்கினால், சிகிச்சை நன்மையில் முடியும்.

அவசியம் படிக்க வேண்டியவை: நுரையீரல் புற்றுநோய்க்கான சில ஆரம்ப அறிகுறிகள்!!!

அதனால், கல்லீரல் புற்றுநோயின் முதல் கட்ட அறிகுறிகள் தென்படும் போது, உங்கள் நோய்களை சந்தேகிக்க பரிந்துரைக்கப்படுகிறது. சரி, அப்படிப்பட்ட அறிகுறிகளைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடர்ந்த நிற சிறுநீர்

அடர்ந்த நிற சிறுநீர்

இரத்தத்தில் பித்தச்செம்பசை அதிகரிக்கும் போது, அது சிறுநீர் வழியாக வெளியேறும். இதனால் சிறுநீரகத்தின் நிறம் கருமையான மஞ்சள் முதல் பழுப்பு நிறம் வரை இருக்கும். சிறுநீரின் நிறத்தில் நாற்றம் ஏற்பட்டால், உடனே மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.

உடல் எடை குறைதல்

உடல் எடை குறைதல்

கல்லீரல் என்பது நம் உடம்பில் உள்ள முக்கியமான உறுப்பு. உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க இது உதவுகிறது. வலுக்குறையான கல்லீரல் செயல்பாட்டினால் உடல் எடை குறையும். இதுவும் கூட கல்லீரல் புற்றுநோய்க்கான முதல் கட்ட அறிகுறியாகும்.

குமட்டல் மற்றும் வாந்தி

குமட்டல் மற்றும் வாந்தி

என்ன காரணம் என்று தெரியாமலேயே குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுகிறதா? அப்படியானால் அது வலுக்குறையான கல்லீரல் செயல்பாட்டின் காரணமாகவும் இருக்கலாம். குமட்டலும் வாந்தியும் கூட கல்லீரல் புற்றுநோயின் முதல் கட்ட அறிகுறிகளாகும்.

சோர்வு

சோர்வு

நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? அதுவும் குறைவான கல்லீரல் செயல்பாட்டின் மற்ற அறிகுறிகளோடு இதுவும் தொடர்ச்சியாக நீடித்து நிற்கிறதா? அப்படியானால் அது புற்றுநோயாக இருக்கலாம். பொதுவாக சோர்வு என்பது பொதுவான அறிகுறி என்றாலும் கூட, கல்லீரல் புற்றுநோயாளிகளிடம் அதனை கவனிக்க முடியும்.

பெரிதாகிய கல்லீரல்

பெரிதாகிய கல்லீரல்

உங்கள் மேல் வயிற்றின் வலது புறமாக ஆரம்பித்து நாடு பகுதி வரை நீடித்து இருக்கும் கல்லீரல். கல்லீரல் பெரிதாகும் போது இந்த அமைப்பில் அதனை தொட்டு உணர முடியும். அதற்கு உடனே மருத்துவ ஆலோசனையை பெறுவது அவசியம். ஏனென்றால் ஈரல் பெருக்கம் என்பது கல்லீரல் புற்றுநோய்க்கான முதல் கட்ட அறிகுறியாகும்.

அரிப்பு

அரிப்பு

அரிப்பும் கூட ஒரு பொதுவான அறிகுறியே. ஆனால் கல்லீரல் புற்றுநோயின் முதல் கட்ட அறிகுறிகளில் இதுவும் ஒன்று. உங்கள் உடலில் பித்தச்செம்பசை அதிகரிக்கும் தாக்கத்தால் தான் இந்த அரிப்பு உண்டாகிறது. கல்லீரல் செயல்பாடு பழுதாகி விட்டால், பித்தச்செம்பசை அதிகரிக்கும். இதனால் சருமத்தில் அரிப்பு ஏற்படும்.

வயிற்று வலி

வயிற்று வலி

கல்லீரல் வீக்கம் மற்றும் அதன் வலுக்குறைவான செயல்பாடும் வயிற்று வலியை ஏற்படுத்தும். கல்லீரல் வீக்கத்துடன் வயிற்று வலியும் ஏற்பட்டால், கல்லீரல் நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பெருவயிறு

பெருவயிறு

பெருவயிறு அல்லது வயிற்றில் நீர்த்தேக்கம் ஏற்படுவது கூட கல்லீரல் புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறியே. கல்லீரல் வீக்கம் மற்றும் வயிற்றுப் பொருமல் சேர்ந்து இருக்கும் போது, கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இது இருக்கும்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை என்பது வியாதி அல்ல; கல்லீரல் செயல்பாட்டின் வலுக்குறையால் ஏற்படும் பிணி சார்ந்த தாக்கலே அவை. வலுக்குறையான கல்லீரல் செயல்பாடு ஏற்படும் போது, பித்தச்செம்பசை உடலிலேயே தங்கி விடும். கல்லீரல் புற்றுநோயின் முதல் அறிகுறியாக மஞ்சள் காமாலை பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Liver Cancer: Know The First Symptoms And Signs

Liver cancer's first signs will help you with early diagnosis of the disease. Read more about the early warning signs of liver cancer. 
Desktop Bottom Promotion