For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆட்கொல்லி எய்ட்ஸை விட மோசமான ஹெபடைடிஸ் நோயை தவிர்க்கும் வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

ஹெபடைடிஸ் என்பது கல்லீரல் அழற்சி நோயாகும். நம்முடைய கல்லீரலில் ஏதேனும் எரிச்சலோ அல்லது கல்லீரல் செல்களில் ஏதேனும் காரணத்தால் வீக்கமோ ஏற்பட்டிருக்கும் நிலையை தான் ஹெபடைடிஸ் என்று அழைக்கிறோம். ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி மற்றும் ஈ என்று அழைக்கப்படும் வைரஸ்களின் தொகுப்புகளால் தான் இந்த நோய் வருகிறது.

'இவற்றின் விளைவுகளும் மற்றும் அறிகுறிகளும் கல்லீரலில் ஒரே மாதிரியாக தோற்றமளித்தாலும், பல்வேறு வகையிலான ஹெபடைடிஸ் நோய்கள், வேறு வேறு வழிமுறைகளில் பரவி வருகின்றன. வைரல் ஹெபடைடிஸ் நோயின் தீவிரத்தையும், காலத்தையும் அது தாக்கியுள்ள வைரஸைப் பொறுத்தே அளவிட முடியும்' என்கிறார் இரைப்பை மற்றும் குடல் இயல் மருத்துவ நிபுணர் (Gastro-Enterologist) ஒருவர்.

நோய் தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்த உணவுப்பொருட்கள்!

ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி-ஐ தவிர்த்திட தடுப்பு மருந்துகள் உள்ளன. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியை போட அனுமதிக்கப்படவில்லை. இந்த இனக்கலப்பு வைரஸ் தடுப்பூசியை போடுவதால் 95%-க்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. பிறந்த 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டால், பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுவதை தவிர்த்திட முடியும். 40 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களிடம், இந்த தடுப்பூசிக்கான நோய்எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது.

கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

ஹெபடைடிஸ் பி சாதாரணமாக இருக்கக் கூடிய நாடுகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், குறிப்பாக புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுவது தடுக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹெபடைடிஸ் ஏ தடுக்கும் வழிமுறைகள்

ஹெபடைடிஸ் ஏ தடுக்கும் வழிமுறைகள்

1. கழிப்பறைக்கு சென்று வந்த பின்னர், உங்களுடைய கைகளை சோப் போட்டு கழுவுங்கள்.

2. உணவை சூடாக சாப்பிடுங்கள்.

3. குடிக்கும் தண்ணீர் சுகாதாரமானதா என்று சந்தேகம் இருந்தால், கொதிக்க வைத்த நீரையோ அல்லது பாட்டில்களில் விற்கும் தண்ணீரையோ குடிக்கவும்.

4. நீங்கள் இருக்கும் இடத்தில் சுகாதாரம் சரியாக இல்லையென்று நினைத்தால், தோலை உரித்து சாப்பிடும் பழங்களை சாப்பிடுங்கள்.

5. காய்கறிகள் சரியாக சுத்தம் செய்யப்பட்டதாகவும் மற்றும் தொற்றுகள் இல்லாததாகவும் இருந்தால் மட்டும் அப்படியே சாப்பிடுங்கள்.

6. ஹெபடைடிஸ் ஏ நோயின் தாக்கம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்லும் போது, தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

ஹெபடைடிஸ் பி தடுக்கும் வழிமுறைகள்

ஹெபடைடிஸ் பி தடுக்கும் வழிமுறைகள்

1. பாதுகாப்பான உடலுறவை பின்பற்றுங்கள்.

2. உங்களிடமோ அல்லது உங்களுடைய துணையிடமோ நோய்த்தொற்று உள்ளதா என்பதை தெரிவியுங்கள் மற்றும் கண்டறியுங்கள்.

3. வேறு யாருக்கும் பயன்படுத்தாத சுத்தமான ஊசிகளை பயன்படுத்துங்கள்.

4. டூத் பிரஷ், பிளேடுகள் அல்லது பிற வெட்டும் கருவிகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

5. நீங்கள் ஆபத்தான நிலையில் இருந்தால் ஹெபடைடிஸ் பி தொடர்களை போட்டுக் கொள்ளுங்கள்.

6. தோலில் பச்சை குத்தவோ அல்லது படம் வரையவோ பயன்படுத்தும் கருவிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்டதாக இருப்பதை உறுதி செய்யவும்.

ஹெபடைடிஸ் சி தடுக்கும் வழிமுறைகள்

ஹெபடைடிஸ் சி தடுக்கும் வழிமுறைகள்

1. டூத் பிரஷ், பிளேடுகள் அல்லது பிற வெட்டும் கருவிகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

2. உங்களுக்கு தொற்று ஏற்பட்டிருந்தால், திறந்திருக்கும் காயங்களை மூடி வைக்கவும்.

3. மதுவை குறைவாக சேர்த்துக் கொள்ளவும்.

4. மருந்துக்கான கருவியை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

5. உங்களுடைய தோலை கிழிக்க வேண்டியிருந்தால், அதற்கு பயன்படுத்தும் கருவி கிருமி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.

ஹெபடைடிஸ் டி தடுக்கும் வழிமுறைகள்

ஹெபடைடிஸ் டி தடுக்கும் வழிமுறைகள்

ஹெபடைடிஸ் பி-க்கு பயன்படுத்திய அதே வழிமுறைகளை ஹெபடைடிஸ் டி-க்கும் பயன்படுத்தவும். ஹெபடைடிஸ் பி-யினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே ஹெபடைடிஸ் டி வரும்.

ஹெபடைடிஸ் ஈ தடுக்கும் வழிமுறைகள்

ஹெபடைடிஸ் ஈ தடுக்கும் வழிமுறைகள்

ஹெபடைடிஸ் ஏ தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையே இதற்கும் செய்யவும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Prevent Hepatitis A, B, C, D and E

Here are some tips on how to prevent hepatitis A, B, C, D, and E. Hepatitis Treatment is very easy to follow.
Desktop Bottom Promotion