For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் வேகமாக எழும் நபராக மாற வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

By Ashok CR
|

காலையில் அலுவலகத்திற்கு நேரம் கழித்து செல்கிறீர்களா? அரைகுறையாக காலை உணவை உண்ணுகிறீர்களா? தூக்க கலகத்தில் அலாரத்தை மீண்டும் மீண்டும் அனைத்து விடுகிறீர்களா? ஆனால் உங்கள் சக பணியாளரோ தன் காலை வேளையை எப்படி பயனுள்ளதாக கழித்தார் என்று கூறுவதை கேட்டு ஆச்சரியப்படுவீர்கள். அவர்களை குத்த வேண்டும் என்று தோன்றினால் கூட அவர்களை போல் நீங்களும் உங்கள் காலை பொழுதை உருப்படியாக கழிக்க நினைப்பீர்கள்; ஒரு காலை விரும்பியாக மாற ஆசைப்படுவீர்கள்.

இரவில் கவலையை மறந்து நிம்மதியாக தூங்க வேண்டுமா? இதோ சில வழிகள்!!!

அதற்கு மன உறுதியும், ஆற்றலும் தேவைப்பட்டாலும் கூட, காலையில் வேகமாக எழ வேண்டும் என்று மனதையும் உடலையும் பழக்கப்படுத்த முடியும். அதற்கான 6 டிப்ஸ் இதோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரவு நீண்ட நேரம் விழிக்காதீர்கள்

இரவு நீண்ட நேரம் விழிக்காதீர்கள்

கண்டிப்பாக இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது தான் உண்மையும் கூட. உங்கள் உடலையும் மனதையும் வேகமாக தூங்க பழக்கப்படுத்துங்கள். இதனால் மறுநாள் காலை வேகமாக எழுந்திருக்கலாம். எப்போதும் எழுந்திருக்கும் நேரத்தை விட அரை மணி நேரம் முன்னதாக எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். அதனால் நீண்ட நேரம் விழித்து படம் பார்ப்பது அல்லது வேலை பார்ப்பதை தவிர்க்கவும். ஏன் அதனை மறு நாள் செய்யலாம் தானே?

காலை உணவை உண்ணுங்கள்

காலை உணவை உண்ணுங்கள்

காலையில் புரதம் அதிகமுள்ள உணவை வயிறு நிறைய உண்ணுங்கள். காலை உணவை தவிர்ப்பது நல்லதல்ல. காலை உணவை உண்ணுவதால் உங்கள் ஆற்றல் அதிகரிப்பதோடு மட்டுமல்லமால் காலை சோம்பலும் உங்களை விட்டு நீங்கும். பழங்களுடன் கூடிய ஓட்ஸ், குறைந்த கொழுப்புள்ள யோகர்ட், அல்லது தானியங்களுடன் கூடிய ரொட்டியை உண்ணலாம்.

மனதை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்

மனதை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்

எளிய, ஊக்கமூட்டும் சுய உரையாடல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உதாரணத்திற்கு "நான் எழுந்திருக்க வேண்டும்" என்பதற்கு பதிலாக "நான் எழுந்திருக்க போகிறேன்" என்ற நேர்மறையான சிந்தனையுடன் இருங்கள். உங்கள் மனதை ஏதேனும் ஒன்றின் மீது செலுத்தி அதனை முதன்மையான ஒன்றாக கருதி, அதனை அடைய மந்தை ஒருமுகப்படுத்த வேண்டும். கண்டிப்பாக உங்கள் இலக்கை அடைவீர்கள்.

காலையில் எழுந்திருக்கும் போது நடை கொடுத்தல்

காலையில் எழுந்திருக்கும் போது நடை கொடுத்தல்

காலையில் எழுந்திருக்க கஷ்டமாக இருந்தால், இதனை முயற்சி செய்து பாருங்கள். முந்தைய நாள் இரவு அலாரம் வைக்கும் போது, படுக்கைக்கு அருகில் வைக்காதீர்கள். மாறாக அறைக்கு வெளியே வைக்கவும். அப்போது தான் அதனை அணைக்க காலையில் எழுந்து நடக்க வேண்டி வரும். இதனால் தூக்கமும் களையும் அல்லவா?

காலையில் வெளிச்சத்தை கொண்டு வாருங்கள்

காலையில் வெளிச்சத்தை கொண்டு வாருங்கள்

உங்கள் மூளைக்கு சுறுசுறுப்பு தன்மையை கொண்ட வருவதற்கு வெளிச்சத்தை விட வேறு என்ன வேண்டும்? உங்கள் ஜன்னல் வழியாக வரும் சூரிய ஒளி இதற்கு உதவும் அல்லவா? உங்களுக்கு ஜன்னலை மூட வேண்டுமானால், இதற்கென வழக்குகள் உள்ளது. இது காலையில் வெளிச்சத்தை உண்டாக்கி பிரகாசிக்கும். இதன் விலை 3000 ரூபாயிலிருந்து 12000 ரூபாய் வரை கிடைக்கிறது. உங்களுக்கு பணம் ஒரு பிரச்சனை என்றால் ஜன்னலை திறந்து வைத்து தூங்குங்கள்.

இதற்கென கைப்பேசி ஆப் உள்ளது

இதற்கென கைப்பேசி ஆப் உள்ளது

ஸ்மார்ட்ஆப் அல்லது மாத் அலாரம் என கேள்வி பட்டிருக்கிறீர்களா? இரண்டுமே உங்களை படுக்கையில் இருந்து எழ வைக்கும். அலாரத்தை அணைக்க ஒரு கணிதத்தை முடிக்க வேண்டும். அப்படி செய்யும் போது, ஆழ்ந்த நித்திரை களைந்து உங்கள் மூளை தெளிவை பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Become A Morning Person

If you want to know how to become a morning person tham it takes will power and dedication, but training your mind and body to wake up early is possible. Here are 6 tips to wakeup early morning.
Desktop Bottom Promotion