For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க சில சூப்பரான வழிகள்!!!

By Ashok CR
|

இரத்த அழுத்தம் என்பது நமது உடலின் முறையான இரத்த ஓட்டத்தில் ஏற்படக்கூடிய அழுத்தம். இந்த இரத்த அழுத்தமானது சராசரியாக இருக்க வேண்டிய அளவை விட சில நேரங்களில் குறைய வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் கூடவும் வாய்ப்பு உள்ளது. இந்த அழுத்தமானது, உடல் இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மிக அதிக அளவிலான இரத்த அழுத்தம் அல்லது மிக குறைந்த இரத்த அழுத்தம், நமது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

குறைந்த இரத்த அழுத்தத்தால், மயக்க உணர்வு, குமட்டல் போன்றவை ஏற்படும். சில நேரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தம் என்பது மன அழுத்தம், மன வேதனை, குழப்பம், எதிலும் ஒரு கடின உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். மிக அதிக அளவிலான உயர் அழுத்தத்தால், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் நாம் அனைவரும் இரத்த அழுத்தத்தில் சரியான கவனம் செலுத்த வேண்டும். சரியான இடைவெளியில் இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குறை இரத்த அழுத்தத்தை விட மிகை இரத்த அழுத்தம் ஆபத்தானது. உயர் இரத்த அழுத்தம் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்து வாய்ந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக நாட்பட்ட மன அழுத்தம் மற்றும் அதிக அளவிலான உழைப்பு போன்றவற்றால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இதற்கு தீர்வாக பல மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகளால் நமது உடலில் ஏற்படும் இரத்த அழுத்த வேறுபாட்டில் நல்ல நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இவற்றை வழக்கமாக, சரியான முறையில் எடுத்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் இது முன்னிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு சில வீட்டு தயாரிப்புகளையே மக்கள் பயன்படுத்தலாம். இவை மிகவும் பாதுகாப்பானது. எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாதது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தக்கூடிய, வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய வழிகளை கீழே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழக்கமான உடற்பயிற்சி

வழக்கமான உடற்பயிற்சி

வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்தம் மற்றும் மன வேதனையை குறைக்கிறது. உடற்பயிற்சியானது, நல்ல உணர்வுகளை தூண்டக்கூடிய ஹார்மோன்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தம் குறைந்து, உயர் இரத்த அழுத்தம் குறைகிறது. வழக்கமான உடற்பயிற்சியால், உடல் எடை குறைகிறது.அதிக அளவிலான எடையாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் வழக்கமான உடற்பயிற்சியானது, உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

அதிக அளவிலான கொலஸ்ட்ரால் உள்ள உணவுப் பொருட்கள், உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்து விடும். இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை உயர் இரத்த அழுத்தத்தை 2-5 மி.மீ பாதரசம் அளவு குறைக்கும் தன்மை கொண்டவை. முழு தானியங்களால் ஆன ப்ரெட், சத்து நிறைந்த காய்கறி கலவை, சூப் மற்றும் பழங்கள் போன்றவை நமது தினசரி உணவில் இடம் பெற வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவு முறை மற்றும் நல்ல பழக்க வழக்கங்களால் 2-5மி.மீ பாதரசம் அளவிலான இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். இதுவே இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு ஏற்ற சிறந்த டிப்ஸ்.

போதை வஸ்த்துகளை தவிர்த்தல்

போதை வஸ்த்துகளை தவிர்த்தல்

போதை வஸ்த்துகளான சிகரெட், ஆல்கஹால் மற்றும் புகையிலை போன்றவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவை. மிக குறைந்த அளவிலான மது, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வல்லது. ஆனால் இதுவே அதிக அளவில் செல்லும் போது, மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஆல்கஹால் எடுத்து கொள்வதால், 5-10மி.மீ பாதரசம் அளவிலான இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதே அளவிலான பாதிப்பையே புகையிலை, சிகிரெட் போன்றவையும் ஏற்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம் உடலில் உள்ள காஃபின் அளவை பாதிக்கிறது.

குறைந்த அளவு உப்பை எடுத்துக் கொள்ளுதல்

குறைந்த அளவு உப்பை எடுத்துக் கொள்ளுதல்

உப்பில் சோடியம் அடங்கி உள்ளது. சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அதிக அளவிலான சோடியம், நம் உடலுக்கு உப்பின் மூலமே கிடைக்கிறது. எனவே இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு உப்பை தவிர்ப்பதே சிறந்தது. ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பை எடுத்து கொள்வதே நல்லது. சோடியம் அடங்கி உள்ள மற்ற உணவு பொருட்களையும் தவிர்ப்பதே சிறந்தது.

குறிப்பிட்ட இடைவெளியில் இரத்த அழுத்தத்தை பரிசோதித்தல்

குறிப்பிட்ட இடைவெளியில் இரத்த அழுத்தத்தை பரிசோதித்தல்

இரத்த அழுத்த பரிசோதனையை எப்போ வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்க கூடாது. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் இரத்த அழுத்த வேறுபாட்டை எளிதில் கண்டறியலாம். தேவை ஏற்படின் உடனடி சிகிச்சையை மேற்கொள்ளலாம். இது போலவே குறிப்பிட்ட இடைவெளியிலான பரிசோதனையின் மூலம், இயற்கையான வீட்டு வைத்தியத்தின் மேன்மையையும் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறாக, மேற்கண்ட வழிமுறைகளின் மூலம் இயற்கை முறையிலேயே இரத்த அழுத்தத்தை குறைத்து, மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Lower BP Naturally

Homemade remedies to lower BP are also useful for people suffering from high BP problems. These are safe and do not have any side effects. A few homemade tips to control high BP are given below:
Desktop Bottom Promotion