For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க ரொம்ப குண்டாக இருக்கிறீங்களா? அதை குறைக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்!!

By Nobert Thivyanathan
|

உடலில் கொழுப்பு அதிகமாவதன் காரணமாக அளவுக்கு அதிகமாக உடல் எடை அதிகரித்து காணப்படும் ஒரு நிலை தான் உடல் பருமன் எனப்படும். உடல் எடை குறியீடு (BMI) மூலமாக ஒருவரின் உடல் பருமன் அளவிடப்படுகிறது. ஒருவரது உடல் எடையை (கிலோகிராமில்) அவரது உயரத்தினால் (மீட்டரில்) வகுப்பதன் மூலம் BMI கணக்கிடப்படுகிறது. ஒருவருக்கு BMI அளவு 25-29 ஆக இருந்தால் அவர் அளவுக்கு அதிகமான எடை கொண்டவர் என கருதப்படுகிறார். ஒருவரது BMI அளவு 30 மற்றும் 40 ஆக இருந்தால், அவருக்கு கொழுப்பு அதிகம் அல்லது உடல் பருமன் கொண்டவர் எனப்படுகிறார்.

இந்த உடல் பருமன் என்ற நிலை, சர்க்கரை நோய், இதய நோய்கள், சிலவகைப் புற்றுநோய்கள், பக்கவாதம் போன்ற வாழ்க்கை அச்சுறுத்தும் நோய்களுக்கு வழிவகுக்கும். அதிகளவு கலோரி உட்கொள்ளுதல், உட்கார்ந்த நிலையில் வேலை செய்தல் ஆகியவை உடல் பருமன் ஏற்படுதற்கான காரணங்களாகும்.

உடல் எடையை குறைக்க முயலும் போது அடிக்கடி பசிக்குதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

ஆனால் பல்வேறுபட்ட வீட்டு வைத்தியங்கள் மற்றும் வாழ்க்கை மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் உடல் பருமனை கட்டுபடுத்த முடியும். மரபுவழி பண்புகள் கூட உடல் பருமன் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உடல் பருமனைக் குறைக்க பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் கூட, அவை சிறந்த பாதுகாப்பான வழிமுறைகளாக இல்லை. எனவே பின்வரும் வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றி உடல் பருமனை கட்டுப்படுத்தி மகிழ்ச்சியாக வாழுங்கள்.

பின்வரும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உடல் பருமனை குறைப்பது மட்டுமல்லாது, ஆரோக்கியமான உடலையும், மனநிலையையும் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Treat Obesity Naturally

There are lots of home remedies to treat obesity naturally. Here are some of the natural way to get rid of obesity.
Desktop Bottom Promotion