For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாய் துர்நாற்றத்தைத் தடுக்க சில எளிய இயற்கை வைத்தியங்கள்!!!

By Maha
|

இன்று பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வாய் துர்நாற்றம். இத்தகைய வாய் துர்நாற்றத்தினால் யாருடனும் நிம்மதியான உரையாடலைக் கொள்ள முடியாது. ஏனெனில் நம் வாய் துர்நாற்றமானது நமக்கே வீசும் போது, நம்முடன் பேசுபவர்களுக்கு வீசாமலா இருக்கும். இந்நேரத்தில் அனைவருமே சங்கடமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்...

பொதுவாக வாய் துர்நாற்றமானது வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றினால் தான் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி நாக்கிலோ, மூக்கிலோ, ஈறுகளிலோ, செரிமான மண்டலத்திலோ, வயிற்றிலோ பிரச்சனைகளானது இருந்தாலும் ஏற்படும். இப்போது நாம் வாய் துர்நாற்றத்தைத் தடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

வாயை பராமரிப்பதில் இந்திய ஆண்கள் செய்யும் 8 தவறுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரஷ், பிரஷ், பிரஷ்

பிரஷ், பிரஷ், பிரஷ்

தினமும் பற்களை இரண்டு முறை தவறாமல் துலக்குவதோடு, மேலே, கீழே என்று நன்கு துலக்குவதோடு, ஈறுகளையும் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பற்களின் இடுக்குகளில் தங்கியுள்ள உணவுப் பொருட்கள் முற்றிலும் வெளியேறி, வாய் துர்நாற்றம் ஏற்படுவது தடுக்கப்படும்.

ப்ளாஷ்

ப்ளாஷ்

உண்ணும் உணவுப் பொருட்களானது பற்களின் இடுக்குகளில் தங்கி சரியாக வெளிவராமல் இருந்தால், வாய் துர்நாற்றம் ஏற்படும். ஆகவே தினமும் இரண்டு முறை பிரஷ் செய்வதுடன், ப்ளாஷ் என்னும் பல்லிடுக்கு நூல் கொண்டும் சுத்தம் செய்ய வேண்டும்.

வாயை கொப்பளிக்கவும்

வாயை கொப்பளிக்கவும்

ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும் பற்களை துலக்க முடியாது. ஆகவே எந்த ஒரு உணவை உட்கொண்ட பின்னரும், தவறாமல் நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும்.

மௌத் வாஷ்

மௌத் வாஷ்

pH அளவானது குறைந்ததால், வாய் துர்நாற்றம் ஏற்படும். ஆகவே பற்களை துலக்கி, ப்ளாஷ் பயன்படுத்திய பின் நல்ல மௌத் வாஷ் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் pH அளவானது சீராக இருக்கும். அதிலும் மௌத் வாஷ் கொண்டு ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும் வாயைக் கொப்பளித்தால், வாய் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

வெங்காயம், பூண்டை தவிர்க்கவும்

வெங்காயம், பூண்டை தவிர்க்கவும்

உணவின் சுவையை அதிகரிக்க பயன்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் வெங்காயம் மற்றும் பூண்டு. இதனை நம்மால் முற்றிலும் தவிர்க்க முடியாது. இருப்பினும் இதனை பச்சையாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால் இல்லாத மௌத் வாஷ்

ஆல்கஹால் இல்லாத மௌத் வாஷ்

அனைத்து வகையான மௌத் வாஷ்ஷும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆல்கஹால் இல்லாத மௌத் வாஷ் பயன்படுத்தினால் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கலாம். அதுவே ஆல்கஹால் உள்ள மௌத் வாஷ் பயன்படுத்தினால், அது வாயை வறட்சியடையச் செய்து வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கும். ஆகவே ஆல்கஹால் இல்லாததை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

சீரான இடைவெளியில் உண்ணவும்

சீரான இடைவெளியில் உண்ணவும்

நீண்ட நேரம் எதுவும் உட்கொள்ளாமல் இருந்தால், வாயானது வறட்சியடைந்து துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். குறிப்பாக எந்நேரத்திலும் உணவைத் தவிர்க்கக் கூடாது. மேலும் அவ்வப்போது பழங்கள் அல்லது சாலட்டுகளை வாங்கி உட்கொண்டவாறே இருங்கள். இதனால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

உடலில் அசிடிட்டியின் அளவைக் குறைத்து, pH அளவை நிலையாக வைத்திருக்க பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே தினமும் பிரஷ் செய்யும் போது, பேஸ்ட் உடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து பின் பற்களை துலக்குங்கள். இதனால் வாய் எப்போதும் நன்கு புத்துணர்ச்சியுடன் துர்நாற்றமின்றி இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு அல்லது எலுமிச்சையை உட்கொண்ட பின்னர் வாய் துர்நாற்றம் நீங்கியிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இதற்கு காரணம், அவற்றில் உள்ள சிட்ரிக் ஆசிட், வாயில் எச்சிலை அதிகம் உற்பத்தி செய்கிறது. எச்சில் தான் உடலின் pH அளவை சீராக வைத்துக் கொள்வதோடு, பாக்டீரியாக்களை நீக்கி, வாயை எப்போதும் வறட்சியின்றி வைத்துக் கொள்ளும். ஆகவே சிட்ரஸ் பழங்களை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. எனவே பற்களை துலக்கும் போது, டூத் பேஸ்ட்டில் சிறிது டீ-ட்ரீ ஆயிலை சேர்த்து பற்களை தேய்க்க வேண்டும். இப்படி காலையும், இரவும் செய்து வந்தால், வாய் புத்துணர்ச்சியுடன் துர்நாற்றம் இல்லாமல் இருப்பதை நன்கு உணரலாம்.

பார்ஸ்லி

பார்ஸ்லி

உணவில் பார்ஸ்லியை சேர்த்துக் கொள்வதால் செரிமானம் சீராக நடைபெறுவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும். எனவே முடிந்தால் தினமும் இதனை சிறிது வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் அதில் உள்ள குளோரோஃபில் ஆன்டி-பாக்டீரியா போன்று செயல்பட்டு, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

புதினா, துளசி

புதினா, துளசி

புதினா, துளசி போன்றவற்றை வாயில் போட்டு அவ்வப்போது மென்று விழுங்கினால், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களானது அழிந்து, வாய் துர்நாற்றமானது நீங்கும்.

கொய்யா

கொய்யா

கொய்யாப் பழத்தை விட, கொய்யா காயில் தான் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் சக்தி உள்ளது. அதுமட்டுமின்றி, இது வாயில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைத் தரக்கூடியது. ஆகவே முடிந்த அளவில் கொய்யா கிடைக்கும் போதெல்லாம் வாங்கி சாப்பிட்டு நன்மையைப் பெறுங்கள்.

ஒரு கப் டீ

ஒரு கப் டீ

தினமும் அதிகாலையில் பால் டீ குடிப்பதற்கு பதிலாக, ப்ளாக் அல்லது க்ரீன் டீ குடித்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையானது, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றிவிடும்.

வெந்தயம்

வெந்தயம்

இரவில் படுக்கும் போது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதன் நீரை குடித்தால், அது வாயில் உள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

சோம்பு

சோம்பு

சோம்பு மிகவும் சிறந்த நறுமணமிக்க மசாலாப் பொருள். இதுவும் வாய் துர்நாற்றத்தைத் தடுத்து, வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். அதனால் தான் ஒவ்வொரு உணவிற்கு பின்னும் ஹோட்டல்களில் இது கொடுக்கப்படுகிறது.

சர்க்கரையில்லாத சூயிங் கம்

சர்க்கரையில்லாத சூயிங் கம்

வாய் வறட்சியடையாமல் இருக்க வேண்டுமானால், சர்க்கரை இல்லாத சூயிங் கம்மை வாயில் போட்டு மென்ற படியே இருக்கலாம். அதிலும் புதினா ப்ளேவர் கொண்ட சூயிங் கம் மிகவும் சிறந்தது. இதனால் வாயில் எச்சில் அதிகம் உற்பத்தி செய்யப்படும். இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

காம்ப்ளக்ஸ் கார்ப்ஸை குறைக்கவும்

காம்ப்ளக்ஸ் கார்ப்ஸை குறைக்கவும்

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் தான் வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கிறது. ஆகவே காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்த வெள்ளை பிரட், சர்க்கரை, வெள்ளை சாதம் மற்றும் மைதா போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, எளிதில் செரிமானமாகாமலும் இருக்கும்.

உப்பு

உப்பு

உப்பு மிகவும் சிறப்பான வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருள். அதற்கு உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதனைக் கொண்டு தினமும் 2 முறை வாயைக் கொப்பளித்தால், வாய் துர்நாற்றமானது நீங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் குளிர்ச்சியான நீரில் கலந்து, அதனை வாயில் ஊற்றி 3-5 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். இப்படி காலை மற்றும் இரவில் செய்து வந்தால், வாய் துர்நாற்றம் விரைவில் போய்விடும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Halitosis/Bad Breath

It is very easy and possible to treat bad breath at home with simple home remedies. All these remedies are easy to follow and work for most people.
Desktop Bottom Promotion