For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்று வலிக்கான சில வீட்டு சிகிச்சைகள்!!!

By Ashok CR
|

வயிற்று வலி என்பது பல தரப்பட்ட காரணங்களால், வயது வித்தியாசம் பார்க்காமல் பலரையும் பாதிக்கும் ஒரு பொதுவான உடல் நல பிரச்சனையாகும். வயிறு வலி தீவிரமாக இருந்தாலும் சரி, மிதமாக இருந்தாலும் சரி அல்லது குறைவாக இருந்தாலும் சரி, அதற்கான சில பொதுவான காரணங்களாக இவைகள் பார்க்கப்படுகிறது. செரிமானமின்மை, உணவு நஞ்சேறல், உணவு அலர்ஜிகள், சிறுநீர் பாதை தொற்று, குடல்வால் அழற்சி மற்றும் இன்னும் சில.

ஆரோக்கியம் என்பது எது? பழங்களா அல்லது பழச்சாறுகளா...?

வலி கடுமையாக இருக்கும் நேரத்தில் மருத்துவரை சந்திக்க வேண்டும். ஆனால் வழியில் இருந்து நிவாரணம் பெற உங்களுக்காக சில வீட்டு சிகிச்சைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றினால், நிச்சயம் வயிற்று வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதினா

புதினா

வயிற்று வலியை நீக்க புதினா ஒரு நல்ல நிவாரணியாக விளங்குகிறது. புதினா இலைகளை கொஞ்சம் எடுத்துக் கொண்டு வாயில் போட்டு மெல்லுங்கள். மாற்று வழியாக, புதினா இலைகளை போட்டு தேநீர் தயார் செய்து பருகினால், வயிற்று வலி நீங்கும். ஒரு கப் நீரை சுட வைத்து, சிறிதளவு புதினா இலைகளை அதன் மீது தூவுங்கள். அதனை சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். பின் அதனை வடிகட்டி, அதன் பின் பருகுங்கள். ஒழுங்கான செரிமானத்திற்கும் புதினா உதவுகிறது. பசியின்மை மற்றும் மாதவிடாய் வலியை நீக்கவும் இது பயன்படுகிறது.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ்

உடலின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் திறனை கொண்டுள்ளது கற்றாழை. அதிலுள்ள மருத்துவ குணங்கள் நோய் நுன்மங்களுக்கு எதிராக போராடுவதால், வயிற்று வலியை போக்கும். அரை கப் சோத்துக் கற்றாழை சாற்றை பருகினால் பல வகையான குடலுக்குரிய பிரச்சனைகள் குறையும். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாய்வு, வயிற்று பொருமல் மற்றும் தசைப்பிடிப்புக்கள் போன்ற வயிற்று பிரச்சனையை தீர்க்க கற்றாழை பரிந்துரைக்கப்படுகிறது.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை ஜூஸை கலந்து பருகினால் வயிற்று வலியை நீக்க உதவும். அரை எலுமிச்சை பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிழிந்து, அதனை நன்றாக கலக்கி, பின் குடிக்கவும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானமின்மையை குறைக்க உதவும் அல்கா-செல்ட்செரின் செயல்பாட்டை போலவே அனைத்து அமில எதிர்ப்பியும் செயல்படும். பொதுவாக, அமில எதிர்ப்பி என்றால் பேக்கிங் சோடா போன்ற சோடியம்-பை-கார்பனேட்டாகும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து குடித்தால் உடனடி பயன் கிடைக்கும்.

இஞ்சி

இஞ்சி

அழற்சி எதிர்ப்பி குணங்கள் மற்றும் இதர உடல்நல பயன்கள் அடங்கிய இஞ்சியால், உங்கள் செரிமானம் சீராகி, வயிற்று வலி குறையும். அதிலும் காய்ந்த இஞ்சியை விட, நற்பதமாக இருக்கும் இஞ்சியே சிறப்பாக செயல்படும். இஞ்சி துண்டுகள் சிலவற்றை வெதுவெதுப்பான நீரில் போட்டு, அந்த நீரை வடிகட்டி, பின் அமைதியாக பருகுங்கள். ஆனால் உங்களுக்கு மசாலா பொருட்கள் ஆகாது என்றால், ஆரோக்கியமான உணவுகள் விற்கப்படும் கடைகளில் இருந்து, இஞ்சி அடங்கியுள்ள உணவுகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

சூடான அரிசி ஒத்தடம்

சூடான அரிசி ஒத்தடம்

வலி இருக்கும் இடத்தில் சூட்டு ஒத்தடம் கொடுத்தால், வலியை நீக்க சிறந்த வீட்டு சிகிச்சையாக அது விளங்கும். உங்களுடன் ஹீட் பேட் இல்லையென்றால், பருத்தி துணி மற்றும் அரிசியின் உதவியை நாடிடுங்கள் ஒரு கப் அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து, பின் அதனை பருத்தி துணியில் போடுங்கள். பின்பு அதனை வயிற்றில் ஒத்தடம் கொடுங்கள். துணியை மிகவும் இறுக்கமாக மூடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் நெகிழ்வுத் தன்மையோடு இருந்தால் தான் அரிசியால் நகர முடியும். சூட்டின் மீதும் கவனம் தேவை. அதிக சூட்டுடன் இருந்தால், சிறிது நேரம் காத்திருக்கவும். சற்று சூடு தணிந்தவுடன் மேற்கூறிய அனைத்தையும் செய்யுங்கள். வாசனையை உண்டாக்க அதனுடன் காய்ந்த லாவெண்டர் அல்லது சீமைச்சாமந்தி பூக்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Stomach Pain

Stomach pain is a common health problem that affects all walks of ages due to various reasons. If the pain is too sharp and acute one must need to consult their doctor but inorder to get some relief from the pain there are few home remedies described below.
Story first published: Thursday, May 1, 2014, 13:26 [IST]
Desktop Bottom Promotion