For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான வழிகளில் சிக்கனை சாப்பிட சில டிப்ஸ்...

By Ashok CR
|

கோழியை ஆரோக்கியமான முறையில் எப்படி பக்குவப்படுத்த வேண்டும் என உங்களுக்கு தெரியவில்லையா? அப்படியானால் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே அதனை பக்குவப்படுத்த தயங்காதீர்கள். இதனால் உங்கள் உணவு பொருள் பேணிகள், உப்புப் பொருட்கள் அல்லது செயற்கை சுவையூட்டு பொருட்கள் இல்லாமல் இருக்கும்.

இயற்கையான மற்றும் ஆரோக்கியமான வழிகளில் கோழியை பக்குவப்படுத்தினால், அதனால் உடல் நலத்திற்கும் கூடுதல் பயன் அளிக்கும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் உங்கள் பணத்தையும் இது மிச்சப்படுத்தும்.

சுவையின் தேர்வுகள் ஒவ்வொருத்தரை பொருத்தும் மாறுபடும். அதனால் சுவை விரும்பிகளுக்கு இந்த பக்குவப்படுத்துதல் திருப்தியை ஏற்படுத்தும். உங்கள் விருப்பத்திற்கேற்ப கூட்டு பொருட்களை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். சிக்கனைப் பதப்படுத்தி சாப்பிட சுலபமான மற்றும் ஆரோக்கியமான சில வழிகளை இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூலிகையால் ஊற வைத்த சிக்கன்

மூலிகையால் ஊற வைத்த சிக்கன்

1 டேபிள் ஸ்பூன் வினிகர், 2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த மூலிகைகள், 1/4 கப் கூடுதல் ஆலிவ் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் பூண்டு அல்லது வெங்காய பொடி, 1-2 டேபிள் ஸ்பூன் கடுகுடன் கலந்து கொள்ளுங்கள். பின் கோழியின் நெஞ்சை இதனுடன் கலந்து ஒரு பையில் போட்டு கொள்ளுங்கள். பின் அதனை அவித்தோ அல்லது கிரில் செய்தோ உண்ணலாம்.

பிரஷ்ஷான ஹெர்ப் ரப்

பிரஷ்ஷான ஹெர்ப் ரப்

1 டேபிள் ஸ்பூன் பொடியாக வெட்டிய தைம், 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கப்பட்ட சேஜ், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மிளகுத் தூள், 1 டீஸ்பூன் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கப்பட்ட ரோஸ்மேரி இலை மற்றும் 2 கிராம்புடன் அரைத்த இஞ்சியை கலந்து கொள்ளவும். இந்த கலவையை கோழியின் மீது தடவி, நன்கு ஊற வைத்து, பின் க்ரில் செய்து சாப்பிடலாம்.

சிட்ரஸில் ஊற வைத்த சிக்கன்

சிட்ரஸில் ஊற வைத்த சிக்கன்

1/4 டீஸ்பூன் நறுக்கப்பட்ட சேஜ், 1 1/2 இன்ச் இஞ்சி, 1/க கப் எலுமிச்சை ஜூஸ், 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ், 1/2 கப் ஆரஞ்சு ஜூஸ், 2 கிராம்பு கலந்த இஞ்சி மற்றும் 1/4 டீஸ்பூன் சூடான சாஸ் ஆகியவற்றை கலந்திடவும். பின், அதில் சிக்கனை போட்டு கலந்து, இரவு படுக்கும் போதே பிரட்டி வைத்து, மறுநாள் சமைத்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

காரமான பார்பிக்யூ ரப்

காரமான பார்பிக்யூ ரப்

1 டீஸ்பூன் பொடி செய்த மசாலாப்பொருட்கள், 2 டேபிள் ஸ்பூன் பழுப்பு சீனி, 1 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிப் பொடி, 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, ஊற வைத்து, பின் க்ரில் செய்து சாப்பிடுவது நல்லது.

ப்ரைன்ட் கோழி

ப்ரைன்ட் கோழி

4 அவுன்ஸ் தேன், 2 கிராம்பு கலந்த பூண்டு, 1/4 கப் தண்ணீர், 4 அவுன்ஸ் உப்பு மற்றும் 2 அவுன்ஸ் ஆலிவ் எண்ணெய்யை ஒன்றாக கலந்திடுங்கள். பின் சமைக்கும் முன் ஆலிவ் எண்ணெய் அதன் மேல் தடவி சமைத்தால், இன்னும் சுவையாக இருப்பதுடன், ஆரோக்கியமானதும் கூட.

அடித்த முட்டை

அடித்த முட்டை

2 கப் மைதா மாவு, டேபிள் ஸ்பூன் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள், 1/4 கப் பால் ஆகியவைகளை கலந்திடுங்கள். அத்துடன் 2 முட்டையை அடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதில் சிக்கனை போட்டு பிரட்டி, பின் அடித்த முட்டையை அதனுடன் சேர்த்திடுங்கள்.

தயிர் மற்றும் துளசி

தயிர் மற்றும் துளசி

எலும்பில்லாத சிக்கனில் தயிர், நறுக்கிய துளசி மற்றும் சிறிதளவு கார்ன் ஸ்டார்ச்சுடன் சேர்த்து கலந்து, 4-5 மணிநேரத்திற்கு ஊற வைத்து அதன் மேல் பிரட் தூள் தூவி விடுங்கள். அதன் மேல் கொஞ்சம் சீஸ் தூவி விடுங்கள். இதனை 185 டிகிரி வெப்பத்தில் 30 நிமிடங்கள் வேக வையுங்கள்.

இந்திய முறைப்படி பக்குவப்படுத்துதல்

இந்திய முறைப்படி பக்குவப்படுத்துதல்

6 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள், சீரகப் பொடி, உப்பு மற்றும் 1 டேபிள் டீஸ்பூன் மிளகுத் தூள், இஞ்சி, சர்க்கரை, குங்குமப்பூ, லவங்கப்பட்டையை கலந்து கொள்ளுங்கள். கோழியை பக்குவப்படுத்த இதுவும் ஒரு ஆரோக்கியமான வழியாகும்.

பூண்டு பக்குவப்படுத்ததல்

பூண்டு பக்குவப்படுத்ததல்

கோழியை உப்பில்லாமல் பக்குவப்படுத்த இதுவும் ஒரு சிறந்த ஆரோக்கியமான வழியாகும். பூண்டு பேஸ்ட், மிளகுத் தூள், எள், எலுமிச்சை தோலின் பொடி ஆகியவைகளை கலந்து ஊற வைத்து, க்ரில் செய்து சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Ways To Season Chicken

Here are some easy and healthy ways to season chicken with ingredients that you can find easily in your kitchen shelf.
 
Story first published: Saturday, June 28, 2014, 16:59 [IST]
Desktop Bottom Promotion