For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்நாளை அதிகரிக்க ஆசையா? அப்ப விஸ்கி குடிங்க...

By Maha
|

மதுபானத்தில் பிரபலமான ஒன்று தான் விஸ்கி. இந்த விஸ்கியானது தானியங்களால் தயாரிக்கப்படுவதாகும். இந்த விஸ்கியில் பல வெரைட்டிகள் கிடைக்கின்றன. பொதுவாக மதுபானங்கள் குடித்தால் உடலுக்கு கேடு என்று தான் சொல்வோம். ஆனால், எந்த ஒரு பொருளையும் அளவாக சேர்த்து வந்தால், உடலுக்கு கேடு விளைவிப்பதற்கு பதிலாக நன்மைகளை விளைவிக்கும்.

பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்!!!

அந்த வகையில் விஸ்கியில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் ஒரு பெக் விஸ்கியில் 65 கலோரிகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், கொழுப்புக்கள் சுத்தமாக இல்லாதது. எனவே இதனை அவ்வப்போது அளவாக எடுத்து வந்தால், உடலில் ஏற்படும் ஒருசில பிரச்சனைகளைத் தடுக்கலாம். சரி, இப்போது விஸ்கி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும்

விஸ்கியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் இருப்பதால், அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் இதில் எலாஜிக் ஆசிட் இருப்பதால், இவை டி.என்.ஏ-வை புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்களில் இருந்து சிறந்த பாதுகாப்பு அளித்து, புற்றுநோய் வருவதைத் தடுக்கும். எனவே அளவாக உட்கொண்டு புற்றுநோயில் இருந்து விலகி இருங்கள்.

காய்ச்சல் மற்றும் சளி

காய்ச்சல் மற்றும் சளி

காய்ச்சலுடன், தொண்டைக் கரகரப்புடன் கூடிய சளி இருந்தால், அப்போது கடைகளில் அதற்காக விற்கப்படும் மருந்துகளை எடுத்துக் கொண்டும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லையா? அப்படியானால், விஸ்கியுடன் சுடுநீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு சிறிய பெக் அடித்துப் பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்

இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்

விஸ்கி இதயத்திற்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கும். குறிப்பாக தமனிகளில் இரத்தம் உறைந்து, பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும். ஏனெனில் இதில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், அவை இரத்தத்தில் லிப்போ-புரோட்டினின் அடர்த்தியை குறைத்து, இதய நோய் வராமல் தடுக்கும். மேலம் இவை உடலில் நல்ல கொலஸ்ட்ராவின் அளவை அதிகரித்து, தமனிகளில் உள்ள கொழுப்புக்களை குறைக்கும்.

எடையை பராமரிக்கும்

எடையை பராமரிக்கும்

எடையைப் பற்றி கவலைப்படுவோருக்கு விஸ்கி மிகவும் சிறப்பான ஒரு பானம். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாகவும், கொழுப்புக்களின்றியும் இருப்பதால், இது செரிமான உறுப்புக்களை சீராக செயல்பட வைத்து, அளவுக்கு அதிகமாக உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளும். இதன் மூலம் எடையை சீராக பராமரிக்கலாம்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்

ஞாபக சக்தியை அதிகரிக்கும்

விஸ்கியானது மூளையின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவி புரியும். அதிலும் இதனை அளவாக பருகி வந்தால், ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுத்து, மூளையை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ளும்.

மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம்

மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம்

மன அழுத்தம் இருப்பவர்கள், ஒரு சிறிய பெக் விஸ்கியை பருகினால், நரம்புகளானது ரிலாக்ஸாகி, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தில் இருந்து விடுதலை அளிக்கும்.

வாழ்நாளை அதிகரிக்கும்

வாழ்நாளை அதிகரிக்கும்

விஸ்கியை அவ்வப்போது அளவாக பருகி வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால், நோய்களானது உடலை தாக்காமல், நீண்ட நாட்கள் நோயின்றி வாழ முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Whiskey

Whiskey is a popular alcoholic drink consumed all over the world. It is prepared from grains. Different varieties of whiskey are available providing unique flavour, aroma and elegant colour. Whiskey has various health and nutritional effects. So, let’s have a look at the health benefits of whiskey.
Desktop Bottom Promotion