For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு பிரியர்களே! உருளைக்கிழங்கு சாற்றின் மகத்துவத்தை படிச்சு பாருங்க...

By SATEESH KUMAR
|

மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் உணவிற்கு என்றுமே முதல் இடம் உண்டு. உணவுகளை பல வகைகளில், பல விதங்களில், பல பெயர்களில் நாம் தயாரிக்கிறோம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உருளைக்கிழங்கு மலைப்பகுதிகளில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

உலக மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவு வகைகளுள் உருளைக்கிழங்கும் ஒன்று. உருளைக்கிழங்கை பயன்படுத்தி மொறுமொறுப்பான சிற்றுண்டி உணவு வகைகள் பல தயாரிக்கப்படுவதே இதற்கு காரணமாகும். உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் சி, பி மற்றும் ஏ வைட்டமின்கள், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், புரதம் மற்றும் நார்ச்சத்து முதலிய உயிர்ச்சத்துகளும் உருளைக்கிழங்கில் உள்ளன.

இதுப்போன்று சுவாரஸ்யமானவை: முட்டைகோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் 10 நன்மைகள்!!!

சுவையையும், எண்ணற்ற நன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டுள்ள உருளைக்கிழங்கின் ஆரோக்கிய குண நலன்களை அறிந்துள்ள மக்கள் குறைவே. ஆகவே தான் உருளைகிழங்கின் ஆரோக்கிய நலன்களை தொகுத்து உள்ளோம்.

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

* வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டவர் உருளைக்கிழங்கு சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு சாறு குடிக்கும் போது சில நேரங்களில் வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
* புதிய, புள்ளிகளற்ற, முதிர்ந்த, முளை விடுத்துள்ள உருளைக்கிழங்கினை பயன்படுத்தி சாறு தயாரிக்கும் போது அதன் சுவை அதிகம்.
* உருளைக்கிழங்கு சாற்றின் சுவையை கூட்ட, அதனுடன் சிறிதளவு கேரட் சாற்றினையும், சேஜ் (sage), நெட்டில் (nettle) மற்றும் ஸ்பைருலீனா (spirulina) முதலிய மூலிகைகளையும் சேர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Potato Juice

Potatoes are one of the favorite food for many people in the world. Besides its taste the numerous health Benefits of potato juice are less known by the people.
Desktop Bottom Promotion