For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆளி விதையும்... அதன் ஆழமான ஆரோக்கிய பலன்களும்...

By Boopathi Lakshmanan
|

இந்த உலகத்திலேயே உள்ள மிகவும் சக்தி மிக்க உணவுகளில் ஒன்று என சிலர் இதை சொல்கிறார்கள். அதிலும் இந்த விதை இதய நோய், புற்றுநோய், வலிப்பு மற்றும் நீரிழிவுக்கு அருமருந்து என்றும் சொல்கிறார்கள். சின்னஞ்சிறு விதையின் புகழ் பல நூற்றாண்டுகளாகவே உயர்ந்து-வளர்ந்து-நீண்டு-விரிந்து சென்று கொண்டிருக்கிறது. அது என்ன விதை?

கிமு. 3000 ஆண்டுகளின் துவக்கத்தில் பாபிலோனில் பயிரிடப்பட்டு வந்த ஆளி விதை தான் இவ்வளவு மருத்துவ பலன்கள் கொண்ட விதை. கி.பி. 8-ம் நூற்றாண்டில் ஆளி விதையின் ஆரோக்கிய பலன்களை அறிந்த சார்லெமாக்னே என்ற மன்னர், தனது குடிமக்கள் அனைவரும் ஆளி விதையை சாப்பிட வேண்டும் என சட்டம் இயற்றினார்! பதிமூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இந்த பலன்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வாளர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

ஆளி விதையில் ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானவை மூன்று குணங்கள்:

ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள்: இவை இதயத்திற்கு உகந்த நண்பனாக இருக்கும் அமிலங்கள் ஆகும். ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஒமேகா-3 உள்ளது.

லிக்னான்ஸ் (Lignans): ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜன் எதிர்ப்பு குணங்கள் பிரசித்தி பெற்றவையாகும். பிற தாவர உணவுகளை விட 75 முதல் 800 மடங்குகள் அதிக அளவிலான லிக்னான்ஸ்கள் ஆளி விதையில் உள்ளன.

நார்ச்சத்து: ஆளி விதையில் கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

இப்போது ஆளி விதையின் ஆழமான ஆரோக்கிய பலன்களைப் பற்றிப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோய் எதிர்ப்பு

புற்றுநோய் எதிர்ப்பு

மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளி விதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

உடலில் உள்ள துடிப்பு மிக்க ஹார்மோன்களை தாக்கும் புற்றுநோய்கள் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு சாப்பிடும் மருந்தான டாமோக்ஸிபென்னின் (Tamoxifen) பாதையில் குறுக்கிடாமல் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் ஆளி விதையில் உள்ள லிக்னான்ஸ்கள் செயல்படுகின்றன.

இதயத்தின் நண்பன்

இதயத்தின் நண்பன்

எரிச்சலை தவிர்த்தல் மற்றும் இதயத் துடிப்பை சமனப்படுத்துதல் போன்றவற்றை செய்யும் திறன் மிக்க மருந்தாக ஒமேகா-3 உள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒமேகா-3 நிரம்பியுள்ள ஆளி விதைகள் தமனிகள் கெட்டிப்படுவதை தவிர்க்கின்றன. வெள்ளை அணுக்களை இரத்த நாளங்களின் உள் வளையங்களுடன் இணைத்து வைப்பதன் மூலம் தமனிகளில் கழிவுகள் சேருவதையும் ஒமேகா-3 தவிர்க்கிறது. இந்த ஒமேகா-3 ஆளி விதைகளில் பெருமளவு குவிந்துள்ளது.

நீரிழிவு

நீரிழிவு

ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மேம்படுகிறது என்று முன்னோடி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஹீமோகுளோபின் A1c ஆய்வுகளின் போது, இரத்தத்தில் 2 வகையான நீரிழிவு நோய்கள் கணடறியப்படுகின்றன)

எரிச்சலும், எதிர்ப்பும்

எரிச்சலும், எதிர்ப்பும்

ஆளி விதையில் உள்ள ALA மற்றும் லிக்னான்ஸ் ஆகிய இரண்டு பொருட்களும் பர்கின்ஸன் நோய் (Parkinson's Disease) மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுடன் வரக் கூடிய எரிச்சலை தவிர்க்கும் குணத்தை கொண்டுள்ளன. இந்த விதைகள் எரிச்சலைத் தூண்டக் கூடிய சில பொருட்கள் வெளிப்படுவதைத் தவிர்க்கின்றன என்று பிட்ஸ்பாட்ரிக் (Fitzpatrick) குறிப்பிடுகிறார்.

மனிதர்களுக்கு ஏற்படும் எரிச்சலை தவிர்க்கும் குணம் ALA-விற்கு உண்டு. மேலும், விலங்குகளின் மேல் செய்யப்பட்ட ஆய்வுகளில் ஆளி விதையின் லிக்னான்கள் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களின் அளவை குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

தமனிகளின் எரிச்சலை தவிர்ப்பதன் மூலம் அவற்றில் கழிவுகள் சேர்வது தவிர்க்கப்படுகிறது. இந்த வகையில் ஆளி விதைகள் மாரடைப்பு ஏற்படுவதையும், வலிப்பு ஏற்படுவதையும் தவிர்க்கும் அருமருந்தாக உள்ளது.

ஹாட் ஃப்ளாஷ் (Hot Flashes)

ஹாட் ஃப்ளாஷ் (Hot Flashes)

2007-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வில், மாதவிடாயின் இறுதி பருவத்தில் உள்ள பெண்கள், தினமும் 2 தேக்கரண்டிகள் ஆளி விதையை உணவு, பழரசம் அல்லது தயிரில் கலந்து சாப்பிடுவதன் மூலம் தங்கள் உடலில் உள்ள ஹாட் ஃப்ளாஷ்களை (Hot Flashes) குறைத்திட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையில் சுமார் 57% அளவிற்கு ஹாட் ஃப்ளாஷ்களை குறைத்திட முடியும். இந்த வகையான பலன்களை குறைந்தபட்சம் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்களிலோ பெண்கள் அடைந்து, ஆச்சரியப்படும் சூழலை ஆளி விதை உருவாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Flaxseed

Flaxseed was cultivated in Babylon as early as 3000 BC. In the 8th century, King Charlemagne believed so strongly in the health benefits of flaxseed that he passed laws requiring his subjects to consume it. Now, thirteen centuries later, some experts say we have preliminary research to back up what Charlemagne suspected.
Desktop Bottom Promotion