For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜவ்வரிசி சாப்பிடுங்க... ஆரோக்கியமா இருங்க!!

By Karthikeyan Manickam
|

ஜவ்வரிசி என்றாலே ஒரு திருமணப் பந்தியில் சாப்பிடக் கூடிய பாயாசம் நம் மனக் கண்களுக்கு முன் சட்டென்று வந்து போகும். ஜவ்வரிசிப் பாயாசம் இல்லாத கல்யாண வீடே இல்லை என்று கூறலாம்.

சாகோ பாம் என்ற ஒரு வகைப் பனைமரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள ஜவ்வரிசி ஒரு ஆரோக்கியமான உணவாகும்.

பாயாசம் தவிர, கேக், பிரட், உப்புமா மற்றும் சூப்புகளிலும் ஜவ்வரிசி பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் தயாரிக்கும் உணவுகள் கொஞ்சம் 'திக்'காக இருப்பதற்காக ஜவ்வரிசி சேர்க்கப்பட்டாலும், செரிமானத்திற்கு ஏற்றதாகவும் இது விளங்குகிறது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதை ஒரு லைட் மீல் டயட்டாக எடுத்துக் கொள்ளலாம்.

நம் உடலுக்கு ஜவ்வரிசி எவ்வளவு ஆரோக்கியமானது என்பது குறித்த மேலும் சில விவரங்கள் இதோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானத்திற்கு...

செரிமானத்திற்கு...

சில உணவுகள் நம் குழந்தைகளுக்குச் செரிக்காமல் போய், பயங்கர எரிச்சலையும் கொடுத்துவிடும். அப்போது, ஜவ்வரிசியை பால் அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை அல்லது உங்களுக்குப் பிடித்த மசாலாக்களை சேர்த்து, அதைக் குழந்தைக்குக் கொடுத்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும்.

எண்ணற்ற சத்துக்கள் கொண்டவை

எண்ணற்ற சத்துக்கள் கொண்டவை

ஒரு ஜவ்வரிசியின் விட்டம் 2 மி.மீ. மட்டுமே. ஆனால் அதில் உள்ள சத்துக்களைப் பாருங்கள். கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் ஜவ்வரிசியில் உள்ளன. ஒரு 100 கிராம் ஜவ்வரிசி, 94 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் உள்பட 355 கலோரிகள் வரை கொடுக்கிறது.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்

அரிசியுடன் ஜவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். மேலும் அதில் உள்ள கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு அதிக சத்தைக் கொடுக்கிறது. இந்தியாவின் பாரம்பரியமிக்க உணவாகக் கருதப்படும் ஜவ்வரிசி, சில மூலிகை மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

 பல்வேறு உணவுகள் தயாரிக்கலாம்

பல்வேறு உணவுகள் தயாரிக்கலாம்

ஜவ்வரிசி கொண்டு பல வகையான உணவுகளை நாம் தயாரிக்க முடியும். இதில் புரதம், வைட்டமின் மற்றும் மினரல்கள் குறைவாக இருப்பதால், எந்த வகையான உணவுடனும் அதைச் சேர்த்து சத்தான உணவாக மாற்றலாம். கேக், பிரட், உப்புமா மற்றும் சூப்புகளிலும் ஜவ்வரிசி பயன்படுத்தப்படுகிறது. சிலர் இதைக் கிச்சடியாகவும் செய்து சாப்பிடுவார்கள்.

எனர்ஜியைத் தரும்

எனர்ஜியைத் தரும்

ஜவ்வரிசியில் முழுக்க முழுக்க எனர்ஜி தரும் சத்துக்கள் அதிகம் உள்ளன. ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாமாம். மேலும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஒரு சரியான மாற்று உணவாக ஜவ்வரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Eating Sabudana

Sago or sabudana is a food which is full of energy and carbohydrates. It is one food which possess a high cooling effect in the system and it is quite easy to digest. The benefits of eating sago are associated with its starch form.
Desktop Bottom Promotion