For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

காய்கறிகளில் விலை மலிவாக கிடைக்கும் ஒரு காய் தான் பீன்ஸ். ஆகவே பலர் அடிக்கடி பீன்ஸ் பொரியல் செய்வார்கள். இப்படி அடிக்கடி இந்த காய்கறியை செய்வதால், பலர் மிகவும் கோபப்பட்டு சாப்பிட மறுப்பார்கள். ஆனால் இப்படி சாப்பிட மறுப்பதால், அந்த பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்களைத் தான் இழக்கிறோம்.

அதிலும் இன்றைய கால தலைமுறையினர்கள், காய்கறிகளை சரியாக சாப்பிடாமல், ஜங்க் உணவுகளை மட்டும் அதிகம் உட்கொள்வதால், அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இதன் மூலம் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். மேலும் வீட்டில் உள்ளோர் எவ்வளவு தான் காய்கறிகளை வாங்கி நன்கு சமைத்துக் கொடுத்தாலும், அதை சாப்பிடுவதில்லை. குறிப்பாக பீன்ஸ் பொரியல் என்றால், பலர் சாப்பிடாமலேயே இருப்பார்கள்.

இதுப்போன்று வேறு படிக்க: பசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

உண்மையில், விலை மலிவாக கிடைக்கும் பீன்ஸில் நிறைய நன்மைகள் உள்ளன. அந்த நன்மைகளைப் பற்றி தெரிந்தால், நிச்சயம் பீன்ஸை சாப்பிடாமல் இருக்கமாட்டீர்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, பீன்ஸை சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய நன்மைகளை உங்களுக்காக கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும்

பீன்ஸ் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

நீரிழிவை கட்டுப்படுத்தும்

நீரிழிவை கட்டுப்படுத்தும்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால், அது இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.

வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள்

வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள்

பீன்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான பொட்டாசியம், ஃபோலேட், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்பிணிகளுக்கு நல்லது

பீன்ஸில் போலேட் என்னும் கருவில் வளரும் சிசுவிற்கு தேவையான வைட்டமின் இருப்பதால், கர்ப்பிணிகள் இதனை சாப்பிடுவது நல்லது.

இதயத்திற்கு சிறந்தது

இதயத்திற்கு சிறந்தது

பீன்ஸில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், இது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் தடுக்கும்.

எடை குறைய உதவும்

எடை குறைய உதவும்

கொழுப்பு குறைவாக உள்ள பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் வளமாக இருப்பதால், இது உடல் எடையை குறைக்கவும், சீராக பராமரிக்கவும் உதவும். எப்படியெனில் இதனை சாப்பிடுவதால், இதில் உள்ள புரோட்டீன், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். மேலும் பீன்ஸ் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிடலாம்

தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிடலாம்

சிலருக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுடனால் அலர்ஜி ஏற்படலாம். அத்தகையவர்கள் தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிட்டால், தானியங்களால் கிடைக்கக்கூடிய சத்துக்களை பீன்ஸ் மூலம் பெறலாம்.

எலும்புகளை வலுவாக்கும்

எலும்புகளை வலுவாக்கும்

பீன்ஸில் உள்ள சிலிகான் என்னும் கனிமச்சத்து, எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மற்ற காய்கறிகளை விட, இந்த காய்கறியில் உள்ள சிலிகான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும்.

முதுமையை எதிர்த்துப் போராடும்

முதுமையை எதிர்த்துப் போராடும்

பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுகளான லுடீன், நியோசாந்தைன், பீட்டா கரோட்டீன் மற்றும் வியோலாசாந்தைன், சருமத்தின் தரத்தை அதிகரித்து, முதுமையை எதிர்த்துப் போராடும்.

முடி உடைதலைத் தடுக்கும்

முடி உடைதலைத் தடுக்கும்

உடலில் பயோடின் குறைபாடு இருந்தால் தான், முடி உடைய ஆரம்பிக்கும். இத்தகைய பயோடின் பீன்ஸில் உள்ளதால், இதனை உட்கொண்டால், முடி உடைவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Eating Green Beans

Beans are an inexpensive and delicious food that you will want to eat regularly because of their numerous health and longevity benefits.
Desktop Bottom Promotion