For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொளுத்தும் கோடையில் வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Babu
|

கோடைக்காலத்தில் உடலை குளுமையாக வைத்துக் கொள்வதற்கு கடவுள் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் வெள்ளரிக்காய். மேலும் இந்த வெள்ளரிக்காய் உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடியது. இத்தகைய வெள்ளரிக்காயானது பல்வேறு சாலட்டுகளில் பயன்படுத்தப்பட்டாலும், இதில் நிறைந்துள்ள நன்மைகள் அதிகம்.

எப்படி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்தால், நீரிழிவு நோயானது கட்டுப்பாட்டுடன் இருக்குமோ, எப்படி பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இரும்புச்சத்து அதிகரிக்குமோ, அதேப் போல் வெள்ளரிக்காய் ஜூஸை காலையில் குடித்து வந்தால், நாள் முழுவமும் உடலானது மிகவும் எனர்ஜியுடன் இருக்கும்.

பச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

அதுமட்டுமின்றி, வெள்ளரிக்காய் ஜூஸில் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது. இந்த ஜூஸை ஒரு நாளைக்கு ஆண்கள் 3 கப்பும், பெண்கள் 2.5 கப்பும் சாப்பிட்டால், ஒரு கப் காய்கறிகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளானது கிடைக்கும். மேலும் இந்த ஜூஸ் பல்வேறு நோய்களை சரிசெய்யக்கூடியவை.

இப்போது வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீர்ச்சத்தை அதிகரிக்கும்

நீர்ச்சத்தை அதிகரிக்கும்

தினமும் ஒரு டம்ளர் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், ஒரு நாளைக்கு வேண்டிய நீர்ச்சத்தானது கிடைக்கும். இதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

உடல் வெப்பத்தை தணிக்கும்

உடல் வெப்பத்தை தணிக்கும்

கோடையில் உடலின் வெப்பமானது அதிகரிக்கும். எனவே இத்தகைய வெப்பத்தை குறைக்க வெள்ளரிக்காய் ஜூஸை குடித்து வருவது நல்லது.

டாக்ஸின்களை வெளியேற்றும்

டாக்ஸின்களை வெளியேற்றும்

வெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும். அதிலும் இதனை தினமும் தவறாமல் குடித்து வந்தால், டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வைட்டமின்கள் நிறைந்தது

வைட்டமின்கள் நிறைந்தது

வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், சி மற்றும் கே ஆகியவை அதிகம் உள்ளது. உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வாருங்கள்.

கனிமச்சத்து

கனிமச்சத்து

வெள்ளரிக்காயில் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இதனை குடித்து வர, உடலுக்கு வேண்டிய கனிமச்சத்துக்கள் கிடைக்கும்.

எடை குறைவு

எடை குறைவு

வெள்ளரிக்காய் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் காலையில் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வாருங்கள்.

கண்களுக்கு நல்லது

கண்களுக்கு நல்லது

வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ இருப்பதால், இதனை குடித்து வர கண்களில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

பிபி பிரச்சனைகள்

பிபி பிரச்சனைகள்

குறைந்த மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால், இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Cucumber Juice

A cup of cucumber juice provides nutrition equivalent to that provided by one cup of vegetables. This juice helps fight the various diseases and also lowers the risk of obesity. There are various health benefits associated with cucumber juice. Here are a few benefits that will help you understand why cucumber juice is beneficial to your health.
 
Desktop Bottom Promotion