For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்குவதற்கு உதவும் ஜூஸ்கள்!!!

By Boopathi Lakshmanan
|

நம்முடைய தினசரி வாழ்க்கை முறைகள் மற்றும் பழக்க வழக்கங்களால் நமது உடலில் நிறைய நச்சுப் பொருட்கள் சேர்கின்றன. ஆல்கஹால் குடித்தல், சிகரெட் பிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்ககங்கள் ஆகியவை நமது உடலில் தினமும் நச்சுப் பொருட்களை சேர்த்துக் கொண்டே உள்ளன.

இந்த நச்சுப் பொருட்களால் தோலில் அரிப்பு மற்றும் நிறமிகள் உருவாதல், மன அழுத்தம் அதிகரித்தல் மற்றும் செரிமாணம் தொடர்பான பிரச்னைகள் என பலவற்றை நாம் எதிர்கொள்கிறோம். இந்த பிரச்னைகளிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். நச்சுப் பொருட்களை நீக்குதல் (Detoxification) என்றால் உடலை அகமும்-புறமும் வளப்படுத்துவதும் மற்றும் சுத்தம் செய்வதுமே ஆகும்.

இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகள்!!!

நச்சுப் பொருட்களை நீக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. நச்சுப் பொருட்களை உண்டாக்கும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்தல், நச்சுப் பொருட்களை நீக்கும் உணவுகள் மற்றும் சாறுகளை உட்கொண்டு உடலை சுத்தம் செய்தல், இரத்தத்தை சுத்திகரித்தல் மற்றும் உடலை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லுதல் என எந்த வழியை வேண்டுமானாலும் பின்பற்றி பயன் பெறலாம். உங்களுடைய உடல் மன ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் அழுத்தம் பெற்றிருக்கும் வேளைகளில் நச்சுப் பொருட்களை நீக்குவது நல்ல பலன் தரும்.

ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறி உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொண்டும், இரத்தத்தை சுத்திகரிக்கும் குணம் கொண்ட சில சாறுகளை எடுத்துக் கொண்டும், யோகா மற்றும் தியான வழிகளைப் பயன்படுத்தி உடற்பயிற்சி மற்றும் உடலை ஓய்வு நிலைக்கு கொண்டு வந்தும் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்க முடியும். மேற்கண்ட வழிமுறைகளில் சாறுகளைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சிகிச்கைகளில் பச்சைக் காய்கறிகள் அல்லது பழங்களின் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

நம்முடைய உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்குவதற்கு உதவும் சில சாறுகளைப் பற்றி இங்கே பார்ப்போம் :

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசலைக் கீரை

பசலைக் கீரை

பசலைக் கீரைக்கு இயற்கையாகவே உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கும் குணம் உள்ளது. பசலைக் கீரை ஜுஸ் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கும் சாறுகளில் மிகவும் ஆரோக்கியமான ஜுஸ் ஆகும். இந்த சாற்றை பசலைக் கீரை, எலுமிச்சை மற்றும் கருப்பு மிளவு ஆகியவற்றைக் கொண்டு எளிதில் தயாரிக்கலாம். இந்த கீரையின் இலைகளில் சிலவற்றை எடுத்து பசை போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பசையுடன் எலுமிச்சை சாற்றை சில சொட்டுகளும், ஒன்றிரண்டு மிளகையும் கலந்து விடுங்கள். இந்த பானம் சுவையாக இல்லாவிட்டாலும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான பானமாக இருக்கும். பசலைக் கீரையைக் கொண்டு தயரிக்கப்பட்ட பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் வெகுவாக நீங்கி விடுகின்றன.

பச்சை ஆப்பிள்கள்

பச்சை ஆப்பிள்கள்

பச்சை ஆப்பிள்கள் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்குவதற்கும், உடலை சுத்தப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சற்றே காரமான சுவையைக் கொண்டிருக்கும் பச்சை ஆப்பிள்கள், பிற பசுஞ்சாறுகளை விட சிறந்த சுவையை கொண்டிருக்கின்றன. பச்சை ஆப்பிள் ஜுஸை 'ஜுஸர்' கொண்டும் தயாரிக்க முடியும். பச்சை ஆப்பிள் ஜுஸ் உடன் வேறெதையும் கலக்காமல் நீங்கள் அப்படியே குடிக்க முடியும். ஒருவேளை பச்சை ஆப்பிள் ஜுஸ் மிகவும் காரமாக இருந்தால் சிறிதளவு தேனை அந்த சாற்றில் கலந்து குடிக்கலாம். குறிப்பாக தினமும் காலையில் பச்சை ஆப்பிள் ஜுஸ் குடிப்பது அற்புதங்களை நிகழ்த்தும். இதன் மூலம் உடலின் உட்பகுதிகள் மிகப்பெரும் அளவில் சுத்தமாகின்றன.

தேங்காய்

தேங்காய்

புதிய தேங்காய் நீரில் நிறைய எலெக்ரோலைட்ஸ்களும், ஆக்ஸிஜன் எதிர்பொருட்களும் உள்ளதால் அவை உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கி உடலை சுத்திகரிக்க உதவுகின்றன. இளநீருக்கு இந்த உடலை சுத்தப்படுத்தும் குணங்கள் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாகத்தான் எந்தவொரு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளையும் இளநீர் குடிக்கச் சொல்கிறார்கள். தேங்காய் நீரைக் கொண்டு உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வறண்டு போகச் செய்ய முடியும். இந்த சாற்றின் நிறம் பச்சையாக இல்லாவிட்டாலும், இதனை ஒரு பசுமையான சாறாகவே கருதிப் பருகலாம். எனவே, இளநீரைக் குடித்து உடலை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

கேல் இலைகள்

கேல் இலைகள்

நச்சுப் பொருட்களை நீக்கும் குணம் கொண்ட பொருட்களை உடைய கேல் இலைகளை பசலைக் கீரை, ஆப்பிள்கள் மற்றும் பிற பச்சை உணவுப் பொருட்களுடன் கலந்து பயன்படுத்தலாம். கேல் இலைகளை சில சொட்டுகள் எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி இஞ்சி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். நச்சுப் பொருட்களை நீக்க மிகவும் பயன்படும் இந்த சாற்றை தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

புதினாவும், எலுமிச்சையும்

புதினாவும், எலுமிச்சையும்

உடலை சுத்தப்படுத்த விரும்புபவர்கள் எளிதில் தயாரிக்கக் கூடிய சாறுகளாக புதினா மற்றும் எலுமிச்சை சாறுகள் உள்ளன. இந்த சாற்றை தயாரிக்க புதினா இலைகளை தண்ணீரில் போட்டு அரைத்து, சிறிதளவு எலுமிச்சை சாற்றை விடவும். இந்த சாற்றின் சுவையை அதிகரிக்க விரும்பினால் சிறிதளவு மிளகை சேர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Green Juices To Detox Your Body

Detoxifying can be done opting a healthy fruit and vegetable diet, choosing certain juices that would purify the blood, exercising and using relaxation techniques like Yoga and Meditation. Amongst these juices are also very good for removing the unwanted toxins from the body.
Desktop Bottom Promotion