For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவில் நல்ல உறக்கத்தைப் பெற சில அசத்தலான டிப்ஸ்....

By Srinivasan P M
|

ஆழ்ந்த உறக்கமானது உங்களின் ஆரோக்கியமான பழக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். நல்ல உறக்கம் பல உடல் மற்றும் மன நிலைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படும். சில சமயம் நமக்கு நல்ல உறக்கம் தேவைப்பட்டு உறங்க வேண்டும் என்று நினைத்தாலும், உங்களால் உறங்க இயலாது.

எனவே இங்கே நல்ல உறக்கம் பெறுவதற்கான சில இயற்கை வழிகளைப் பற்றி பார்ப்போமா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெலடோனின்

மெலடோனின்

இந்த ஹார்மோன் நம் உடம்பில் இயற்கையாகவே சுரக்கிறது. மேலும் மாத்திரையாகவும் கிடைக்கிறது. பொதுவாக 3 முதல் 5 மிகி ஒர் நல்ல இரவு உறக்கத்திற்குப் போதுமானதாக இருக்கும். இதை வழக்கப்படுத்திக் கொள்ளவில்லையென்றாலும், இது உடலில் இயற்கையாக சுரப்பதை பாதிப்பதால், மிகவும் அவசியம் என்று படும்பொழுது மட்டும் எடுத்துக் கொள்வது உகந்தது (இதுப்பற்றி சிறிதளவே சான்றுகள் இருந்தாலும்). இந்த இயற்கை கூட்டு மருந்து ஜெட்லாக் எனப்படும் விமானக் களைப்பைப் போக்கவும், சத்தம் அதிகமுள்ள அல்லது வசதி குறைவான பேருந்துப் பயணம், விமானப் பயணம் அல்லது வெளியில் தங்குதல் ஆகியவற்றின் போது தூக்கத்தைப் பெற மிகவும் சக்தி வாய்ந்த்து.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

இது ஒரு சாதாரண விஷயம் என்று நீங்கள் கருதலாம். ஆனால், நம்பினால் நம்புங்கள், பலர் உடற்பயிற்சிக்கும் தூக்கத்திற்கும் உள்ளத் தொடர்பை உணர்வதில்லை. தெளிவாகச் சொன்னால், ஒரு நாளில் உடம்பை நல்ல உழைப்பில் ஈடுபத்தினால், மாலையில் சோர்வடைவதுடன் சில தருணங்களில் உறக்கம் வருவதுடன் ஆழந்த உறக்கத்திற்கும் வழிவகுக்கும். மேலும் தொடர்ந்த உடற்பயிற்சி உடல் நலத்தையும், உடல் எடையையும் சரிப்படுத்துவதுடன் இந்த இரண்டும் நம்முடைய தூக்கத்துடனும் தொடர்புடையவை. உறக்கம், உடற்பயிற்சி மற்றும் உணவு எவ்வாறு தொடர்புடையவை என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள தேசிய உறக்க அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ

இந்த மூலிகை பல ஆயிரம் வருடங்களாக உறங்குவதற்கு டீ மற்றும் சூப் அல்லது கஷாயமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அறிவியல் பூர்வமாக இதற்கு சில ஆதாரங்களே உள்ள நிலையில், இந்த ஜெர்மானிய முறைக்குள்ள மருத்துவ குணம் தூக்கம், வயிறு உபாதைகள் மற்றும் தோல் அரிப்பு ஆகியவற்றிற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது கர்ப்பம் கலைய காரணமாக இருக்கும் என நம்பப்படுவதால், கர்ப்பம் தரித்த பெண்கள் இதனை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.

படித்தல் மற்றும் எழுதுதல்

படித்தல் மற்றும் எழுதுதல்

அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றாலும், பெரும்பாலானோர் உறங்குவதற்கு முன் படிப்பது அல்லது எழுதுவது சற்று இளைப்பார உதவுவதாகக் கருதுகின்றனர். எழுதுவது உங்கள் மனதை சற்று அமைதிப்படுத்துவதுடன், உங்கள் நாளை பிரதிபலிக்கவும், உங்கள் மனதில் உள்ள உளைச்சல்கள் மற்றும் உணர்ச்சிகளை வெளியேற்றவும் உதவும். இதை முயற்சி செய்ய தினமும் உறங்கும் முன் இரு வாரத்திற்கு மாறி மாறி படிக்கவும் எழுதவும் செய்யுங்கள். இதற்காக அரை மணி முதல் ஒரு மணி வரை மட்டும் செய்வதோடு அதிகமாகவும் அதைச் செய்யாதீர்கள், அது எவ்வளவு சுவாரஸ்யமான நாவலாக இருந்தாலும்.

செர்ரி

செர்ரி

பல்வேறு ஆய்வுகள் மூலம் செர்ரி போன்ற பழங்கள் மற்றும் மீன் ஆகியவை நன்கு தூக்கத்தை தூண்டக்கூடியவையாக உள்ளது எனத் தெரிய வந்துள்ளது. செர்ரிப் பழங்கள் மெலடோனின் அதிகம் கொண்டுள்ளதால், அவை தூக்கத்தை அடைய உதவும்.

மீன், ஒயின் மற்றும் விஸ்கி

மீன், ஒயின் மற்றும் விஸ்கி

மீன் உணவுடன் சற்று வெள்ளை ஒயினை அருந்துவது அல்லது செர்ரிப் பழங்களை உங்கள் விஸ்கியுடன் சாப்பிடுவது ஒரு ஐடியா. மதுவை சிறிதளவில் உண்ணும் போது, உறக்கத்தைத் தரும் என ஆய்வுகள் கூறுகின்றன. ம்ம்... பேஷ் பேஷ்.. ரொம்ப நல்லா இருக்கே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Get Sleepy The Natural Way: Sleep Aids From Mother Nature

Sleep, sound sleep should be a part of a healthy routine. Good sleep is a remedy for many problems including certains physical and mental conditions. Sometimes we may need sleep, wanted to sleep, but can't sleep. So here we discuss some natural ways to get sleepy.
Desktop Bottom Promotion