For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கான சில பிட்னஸ் டிப்ஸ்...

By Ashok CR
|

இன்றைய சூழலில், தினமும் வேளைப்பளு மிக்க வாழ்க்கை முறையை வாழ்ந்து வருவதால், தற்போதைய தலைமுறையினரின் உடல்நலம் வெகுவாக பாதிப்படைகிறது. அதனால் நம்மில் பலரும் சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் இரத்தக் கொதிப்பு போன்ற பிரச்சனைகளால் சின்ன வயதிலேயே பாதிக்கப்படுகிறோம்.

இதுப்போன்று வேறு: கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்!!!

இன்றைய அங்க அசைவில்லா வாழ்க்கைமுறையில், நாம் அலுவலக நாற்காலியை நீண்ட நேரத்திற்கு தேய்ப்பதை தவிர எதுவும் செய்வதில்லை. குழந்தைகளும் இளவட்டங்களும், வெளியில் சென்று நேரத்தை போக்காமலும் விளையாடாமலும், வீட்டிலேயே தொலைகாட்சி முன் நீண்ட நேரம் அமர்ந்து, கணிப்பொறி விளையாட்டுகளை விளையாடி, சமுதாய வலைத்தளங்களில் நேரத்தை போக்கி கொண்டிருக்கின்றனர்.

அவசியம் படிக்க வேண்டியவை: கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

சரி, அப்படியானால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி அந்த அசுரனை அடக்குவது எப்படி? கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், இதய நோய்கள் வாய்ப்புகளை குறைக்கவும், கீழ்கூறிய டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான உணவுப்பழக்கம்

ஆரோக்கியமான உணவுப்பழக்கம்

உடல் எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள். இயற்கையான முறையில் கொலஸ்ட்ராலின் அளவுகளை கட்டுப்படுத்த இது சிறந்த வழியாக விளங்கும். ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடியுங்கள். டீ, காபி மற்றும் துரித வகை உணவுகளை தவிர்த்து, இயற்கை வளமுடைய, ஆண்டி-ஆக்சிடன்ட்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். நற்பதமான பழங்கள், பீன்ஸ் மற்றும் பச்சை காய்கறிகளை உங்கள் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படி செய்யும் போது உங்கள் உடல் எடையளவிலும் கொலஸ்ட்ரால் அளவிலும், சில நாட்களிலேயே மாற்றத்தை காண்பீர்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

மற்றொரு சிக்கனமான மற்றும் எளிய முறையில், கொலஸ்ட்ராலை இயற்கையாகவே குறைக்க வேண்டுமானால், உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். தினமும் 30 நிமிடங்களுக்கு நடை கொடுத்தாலே போதும், உங்கள் கொலஸ்ட்ராலின் அளவு வெகுவாக குறையும். அலுவலகத்தில் லிஃப்ட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக படிகட்டுக்களையே நாள் முழுவதும் பயன்படுத்துங்கள். உடல் ரீதியான செயல்பாடுகளிலும் ஈடுபடுங்கள். இந்த சின்ன சின்ன முயற்சிகள், கொலஸ்ட்ராலை அதிகரிக்க விடாமல் தடுக்கும்.

ஒமேகா-3 உணவுகள்

ஒமேகா-3 உணவுகள்

ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ள உணவுகளை உட்கொள்வதும், கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் மீன் பிரியரா? அப்படியானால் சால்மன், ட்யூனா மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள் உங்களை காக்கும். அதற்கு காரணம், அவைகளில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ளது. ஆல்மண்ட், பால் மற்றும் வால்நட்டிலும் இவை அதிகமாக உள்ளது.

கொழுப்பு நிறைந்த உணவுகள்

கொழுப்பு நிறைந்த உணவுகள்

கொழுப்பு நிறைந்துள்ள உணவுகளான குக்கீஸ் மற்றும் வறுத்த உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்பு அடங்கியுள்ளது. உங்கள் கொலஸ்ட்ராலை அதிகரிக்க இது ஒன்றே போதுமானது. அதனால் அவ்வகை உணவுகளை தவிர்க்கவும். எந்த ஒரு உணவு பொருளையும் வாங்குவதற்கு முன்னாள், அதன் மூலப்பொருட்களை படிக்க சிறிது நேரம் செலவழியுங்கள். அந்த பொருளில் ட்ரான்ஸ்-கொழுப்பு உள்ளதாக அதில் போடப்பட்டிருந்தால் அதனை கண்டிப்பாக வாங்காதீர்கள்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காய குடும்ப உறுப்பினர்களான ஸ்ப்ரிங் ஆனியன், பூண்டு மற்றும் சாதாரண வெங்காயம் உங்கள் இதயத்துக்கு மிகவும் நல்லது. அதனால் அவைகளை உங்கள் உணவுகளிலும் சாலட்களிலும் சேர்த்துக் கொள்ளுங்கள். கொலஸ்ட்ரால் அளவுகளை இயற்கையான முறையில் குறைக்க, முடிந்த வரை அதிகளவிலான பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

காய்கறி எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் செயற்கை வெண்ணெய்க்கு பதிலாக ஆரோக்கியம் நிறைந்த ஆலிவ் எண்ணெய் மற்றும் கனோலா எண்ணெய்களை பயன்படுத்துங்கள். உணவுகளை சமைக்கவும் சாலட்களை அலங்கரிக்கவும் இதனை பயன்படுத்தினால், உங்கள் இதயத்திற்கு தீவிரமான நன்மை கிடைக்கும்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். அது உங்கள் இதயத்திற்கும், நுரையீரலுக்கும் தீங்கை விளைவித்து, கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fitness Tips To Balance Cholesterol

The stressful lifestyle that we are exposed to on a daily basis, have started taking its toll on this generations health for bad. Here are some of the fitness tips to balance cholesterol.
Desktop Bottom Promotion