For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டையைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

By Karthikeyan Manickam
|

முட்டையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதே வேளையில், அதில் அதிக அளவு கொலஸ்ட்ராலும் முட்டையில் உள்ளது. உணவுக் கட்டுப்பாட்டில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய முட்டையை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன.

ஆனால் அளவுக்கு அதிகமாக முட்டை எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அதிலும் வாரத்திற்கு ஆறு முட்டை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நீரிழிவு நோயுள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

'ஹாஃப் பாயில்' முட்டை ஆரோக்கியமானதா?

இப்படி, முட்டை குறித்த பல விவரங்களை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது முட்டையைப் பற்றிய சில விவரங்களைப் பார்ப்போமா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டையின் சத்துக்கள்

முட்டையின் சத்துக்கள்

முட்டை என்பது ஒரு கோழிக் குஞ்சினுடைய இன்குபேட்டராக இருப்பதால், அதில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்துள்ளன. அயோடின், ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், ஏ, பி2 மற்றும் டி வைட்டமின்கள், கோலின் மற்றும் புரதங்கள் ஆகியவையும் நமக்குத் தேவையான அளவுக்கு முட்டையில் இருந்து கிடைக்கின்றன. மேலும், ஒரு நாளுக்கு நமக்குத் தேவைப்படும் கொலஸ்ட்ராலில் பாதி அளவு முட்டையிலேயே கிடைக்கிறது.

முட்டையும்... உடல் நலமும்...

முட்டையும்... உடல் நலமும்...

நம் உடல் ஆரோக்கியத்திற்கும் முட்டை பல விதங்களில் உதவுகிறது. முதலில், உடல் எடை குறைவதில் முட்டையின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூளையின் வளர்ச்சிக்கு முட்டையில் உள்ள கோலின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முட்டையும்... கொலஸ்ட்ராலும்...

முட்டையும்... கொலஸ்ட்ராலும்...

முட்டையில் தாறுமாறாக கொலஸ்ட்ரால் இருப்பதாகவும், அதனால் முட்டையைச் சாப்பிட பயந்து கொண்டும் இருந்தனர். முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் காரணமாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதாகவும் ஒரு தவறான நம்பிக்கை இருந்து வந்தது. ஆனால் நம் உடலில் கல்லீரல் உற்பத்தி செய்யும் ஒரு முக்கியமான பொருளே கொலஸ்ட்ரால் தான். பல முக்கிய ஹார்மோன்களின் உற்பத்திக்கும் அத்தியாவசியமானது கொலஸ்ட்ரால் மட்டுமே. ஒரே கவலை என்னவென்றால், முட்டையில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அதன் மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும்.

வாரத்திற்கு எத்தனை முட்டை?

வாரத்திற்கு எத்தனை முட்டை?

வாரத்திற்கு ஆறு முட்டைகளுக்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல என்று முன்னர் கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளின் படி, எத்தனை முட்டைகள் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts That You Need To Know About Eggs

Eggs are a good source of nutrition but they also have very high cholesterol. Here are some of the facts that you need to know about eggs.
Desktop Bottom Promotion