பெரியதாக இருக்கும் மார்பகங்களை இயற்கை வழிகளில் குறைப்பது எப்படி?

By:
Subscribe to Boldsky

பெண்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்டுவதில் முதன்மையான இடத்தை வகிப்பது தான் மார்பகம். இத்தகைய மார்பகமானது சில பெண்களுக்கு மிகவும் பெரியதாக இருக்கும். இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் வெளியே தைரியமாக நடக்கவே முடியாது. மேலும் அவர்களால் விரும்பிய உடைகளை அணிய முடியாது.

ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவதற்கான சில டிப்ஸ்...

மேலும் பெரியதாக இருக்கும் மார்பகங்களால் அவர்களின் அழகு கூட சில நேரங்களில் பாழாகும். எனவே பல பெண்கள் தங்களின் மார்பங்களைக் குறைக்க அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த முறையை பின்பற்ற நிறைய செலவு ஆகும். எனவே இதனை அனைத்து பெண்களாலும் மேற்கொள்ள முடியாது. ஆனால் இயற்கை வழிகளான உடற்பயிற்சி மற்றும் எடை குறைப்பு டயட்டை பின்பற்றுவதன் மூலம் மார்பங்களின் அளவைக் குறைக்க முடியும்.

மார்பகத்தை பெரிதாக்குவதற்கான வழிகள்!!!

சரி, இப்போது பெரியதாக இருக்கும் மார்பகங்களை இயற்கை வழிகளில் எப்படி குறைப்பது என்று பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உணவுமுறையில் மாற்றங்கள்

மார்பகத்தின் அளவைக் குறைக்க வேண்டுமானால், தினமும் உண்ணும் உணவில் கொழுப்பைக் கரைக்கும் உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். குறிப்பாக கலோரிகள் குறைவாக உள்ள உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இதன் மூலமும் மார்பகங்களின் அளவைக் குறைக்கலாம்.

சிட்ரஸ் பழங்கள் கைக்கொடுக்கும்

தினமும் வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றை உட்கொண்டு வந்தால், அவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கலோரிகளை எரித்து, இதனால் உடல் எடை மற்றும் மார்பகத்தின் அளவு குறையும்.

மீன்

மீனில் கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் உள்ளது. எனவே மார்பகத்தின் அளவைக் குறைக்க வேண்டுமானால், அசைவ உணவுகளில் சிக்கன், மட்டன் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளாமல், மீன்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் மீனை பொரித்து சாப்பிடாமல், வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது.

பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளவும்

ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளான காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் இவைகளை இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, இதன் மூலம் மார்பகத்தில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் உடல் எடை குறையும்.

உடற்பயிற்சி

முக்கியமாக தினமும் தவறாமல் உடல் எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சியை செய்து வர வேண்டும். இதனாலும் பெரிதாக இருக்கும் மார்பகங்களை குறைக்கலாம்.

புஷ்-அப்

மார்பங்களில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு புஷ் அப் மற்றும் பெஞ்ச் பிரஸ் போன்ற உடற்பயிற்சிகள் கைக்கொடுக்கும். ஆகவே இவற்றையும் தினமும் சிறிது நேரம் செய்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Easy Ways To Reduce Breast Fat

Here are few natural ways or rather remedies to reduce breast fat and shape them.
Story first published: Tuesday, November 4, 2014, 18:31 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter