For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...!

By Maha
|

பலரிடம் இரத்த அழுத்தத்திற்கு காரணம் என்னவென்று கேட்டால், டக்கென்று உப்பு என்று சொல்வார்கள். ஆனால் உப்பு ஒரு அப்பாவி. ஆம், ஏனெனில் அதற்கும் இரத்த அழுத்தத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஒரு ஆய்வும் இதுவரை நிருபித்தது இல்லை. சொல்லப்போனால் அப்படி நிரூபிக்கும் ஆய்வை முதலில் டிசைன் செய்வதே சிரமம். அப்புறம் என்ன... எத்தனை வருடம் ஒருவரை தொடர்ந்து கவனித்து, அவர் உணவில் உப்பு எவ்வளவு, இரத்த அழுத்தம் ஏறுகிறதா, இறங்குகிறதா என பார்ப்பது? அப்புறம் உப்பு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் ஏறும், உப்பை கட் பண்ணு என சொல்லுவது?

இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள்!!!

அதுமட்டுமின்றி, அப்படி ஆய்வு செய்பவர்கள் நமக்கு அதிகபட்சமாக அனுமதிக்கும் சோடியத்தின் அளவு எவ்ளோ தெரியுமா? கால் ஸ்பூன் உப்பு அவ்வளவு தான். இதை மட்டும் போட்டு சமையல் செய்வது சாத்தியமா? அப்புறம் உப்பால் பிரஷர் வருமென்று புலம்புவது ஏன்? என்று கேட்கலாம்.

Does Salt Cause High Blood Pressure?

உப்பு உடலில் இருக்கும் வரை இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பு உடலை விட்டு போனபின் இரத்த அழுத்தமும் இறங்கிவிடும். ஆனால் உண்மையில் சுத்தமா உப்பை கட் செய்தால் உங்கள் இரத்த அழுத்தம் ஒண்ணு, ரெண்டு பாயிண்ட் குறையும். அவ்வளவுதான். இதற்கு தான் உப்பை கட் செய்ய சொல்கிறார்கள். அதற்காக உப்பு நல்லது அல்ல, ஆனால் கெட்டதும் அல்ல. இருப்பினும் முக்கியமாக இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு அல்ல.

அப்புறம் இரத்த அழுத்தம் ஏன் வருகிறது?

இரத்த அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் இன்சுலின். உதாரணமாக, 2 துண்டு பிரட், ஜாம், ஒரு ஆரஞ்சு ஜூஸ் குடிக்கிறீக்ரள் என வைத்துக் கொள்வோம். இதில் துளி சிறிதும் இல்லை. ஆனால் சர்க்கரை ஏராளமாக உள்ளது. இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.

இன்சுலினுக்கும் இரத்த அழுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?

இன்சுலின் இரத்த அழுத்தத்தை மூன்று விதங்களில் உருவாக்குகிறது. முதலாவதாக இன்சுலின் சிறுநீரகத்திற்கு அதிக அளவில் சோடியத்தை தேக்க உத்தரவிடுகிறது. இதனால் தேவையற்ற சோடியத்தை சிறுநீரகம் வெளியேற்ற நினைத்தாலும் அதனால் முடிவது இல்லை. சிறுநீரகத்தில் சோடியம் தேங்கினால் அதற்கு ஏற்ப உடலில் நீரும் தேங்கியே ஆக வேண்டும். ஆகவே உடலில் சோடியமும், நீரும் தேங்க நம் ரத்த அழுத்தம் வேகமாக அதிகரிக்கிறது.

இரண்டாவதாக அதிகப்படியான இன்சுலின் நம் இதயகுழாய்கள் விரிவதை தடுக்கிறது. காரணம் இன்சுலின் ஒரு வளர்ச்சியளிக்கும் ஹார்மோன். இதயகுழாய்கள் விரிவது நின்றால் இதயம் அதிக வேகத்துடன் ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டும். இதுவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

மூன்றாவதாக இன்சுலின் நரம்பு மண்டலத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தி கார்டிசோல் எனும் கெமிக்கலை சுரக்க வைக்கிறது. இது அட்ரினலின் போன்று அழுத்தம் அளிக்கும் திரவம். நீங்கள் அதிகம் கோபப்பட்டாலோ அல்லது ஆவேசபட்டாலோ அட்ரினலின் சுரக்கும். கோபப்பட்டால் இதயம் அதிக ரத்தத்தை பம்ப் செய்ய தயாராகும். இதுவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

ஆகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமெனில் முதலில் நிறுத்த வேண்டியது அப்பாவியான உப்பை அல்ல. சர்க்கரை மற்றும் தானியத்தை தான்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உணவில் கொழுப்பை அதிகரித்து தானியத்தையும், சர்க்கரையையும் ஒரு வாரம் குறைத்து பாருங்கள். இரத்த அழுத்தம் மட, மட என குறையும். மேலும் உப்பை எவ்வளவு தின்றாலும் அது சிறுநீரகத்தில் தேங்காமல் வெளியே வந்துவிடும்.

English summary

Does Salt Cause High Blood Pressure?

Does salt cause high blood pressure? The main reason behind high blood pressure is given below. Take a look...
Desktop Bottom Promotion