For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு 5 அட்டகாசமான யோகாசனங்கள்!!!

By Karthikeyan Manickam
|

நீங்கள் இரவில் சரியாகத் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? எப்போதும் உங்களுக்குக் களைப்பாக இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இப்படி இரவில் தூங்காமலிருந்தால் பகலிலும் அதன் தாக்கம் மோசமாக இருக்கும். களைப்பு இன்னும் அதிகமாகி உங்களைச் சூழ்ந்து கொள்ளும். தூக்கமின்மை குறைபாட்டுக்குப் பல காரணங்கள் உள்ளன.

இரவில் கவலையை மறந்து நிம்மதியாக தூங்க வேண்டுமா? இதோ சில வழிகள்!!!

பெரும்பாலும், கடுமையான வேலை அல்லது மன அழுத்தம் ஆகியவை காரணமாகத் தூக்கமின்மை உண்டாகிறது. இந்தியாவில் சுமார் 5 சதவீதம் மக்கள் இந்தக் குறைபாட்டால் அவதிப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

சில யோகாசனங்களைத் தவறாமல் செய்வதன் மூலம் இந்த இன்சோம்னியாவை சரி செய்து, நாம் இரவில் நிம்மதியாகத் தூங்கி பகலிலும் சுறுசுறுப்பாக இருக்கலாம். அந்த யோகாசனங்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

நீங்க தூங்குற 'லட்சணத்திலேயே' உங்க பெர்சனாலிட்டியை தெரிஞ்சுக்கலாமாம்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பஸ்சிமோத்தாசனம் (Paschimottanasana)

பஸ்சிமோத்தாசனம் (Paschimottanasana)

இந்த ஆசனத்திற்கு, முதலில் நாம் தரையில் உட்கார்ந்து கால்களை நேராக நீட்டிக் கொள்ள வேண்டும். பிறகு கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, மெதுவாகக் குனிந்து கைகளால் பாதங்களைத் தொட முயற்சிக்க வேண்டும். அதே நேரத்தில் நம் கால் முட்டிகளில் தலை உரச வேண்டும். குனியும் போது நன்றாக மூச்சை வெளியேற்றி, பின்னர் மூச்சை சிறிது நிறுத்தி, அதன் பிறகு தலையை நிமிர்த்தும் போது மூச்சை இழுக்க வேண்டும். இந்த ஆசனத்தை ஒரு நாளுக்கு பல முறை செய்தால் சோர்வுகள் பறக்கும். இரவில் நிம்மதியாகத் தூங்கலாம்.

உத்தனாசனம் (Uttanasana)

உத்தனாசனம் (Uttanasana)

நேராக நின்று, நம் இரு கைகளையும் முன்புறமாகத் தலைக்கு மேலே உயர்த்த வேண்டும். பின்னர் அப்படியே முன்புறமாகக் கீழே குனிந்து, கால் முட்டிகளை மடக்காமல் கைகளால் தரையைத் தொட வேண்டும். ரொம்ப கஷ்டமாக இருந்தால் கொஞ்சம் முட்டியை மடக்கிக் கொள்ளலாம். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு, கைகளை நீட்டியவாறே மெதுவாக நிமிர்ந்து, கைகளை தலைக்கு மேலே கொண்டுவந்து, பின்னர் கீழே இறக்கிக் கொள்ளலாம். இந்த ஆசனம் செய்யும்போது, நம் ரத்தம் தலையில் பாய்வதால், நரம்பு மண்டலங்கள் மிகவும் சுறுசுறுப்பாகும்.

அபானாசனம் (Apanasana)

அபானாசனம் (Apanasana)

இந்த ஆசனம் செய்வதற்கு, நாம் முதலில் தரையில் மல்லாந்து படுத்து, கைகளை கால் முட்டிகளில் வைக்க வேண்டும். பின்னர் கால்களை மடக்கி அவற்றை மார்பில் வந்து படுமாறு இழுக்க வேண்டும். அப்போது சீராக மூச்சை இழுத்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து, கால்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம். இந்த ஆசனம் செய்யும்போது, நம் தொடைகள் மற்றும் கழுத்தில் உள்ள தசைகள் முறுக்கேறி, உடலின் பின்புறம் முழுவதும் ரிலாக்ஸாகும். இதனால் மனம் அமைதியாகி, தொப்பையும் குறைய வாய்ப்புள்ளது.

சுப்த பத்தகோனாசனம் (supta baddha konasana)

சுப்த பத்தகோனாசனம் (supta baddha konasana)

தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, கால் முட்டிகளை மடக்கி, கால்களை பிருஷ்டம் வரை கொண்டு வர வேண்டும். பிறகு மெதுவாக மூச்சை இழுத்து, ஒரு கால் முட்டிகளைத் தளர்த்தி, கைகளை தரையோடு தலைக்கு மேலே உயர்த்த வேண்டும். அப்போது நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளலாம். பின்னர், கைகளையும் கால்களையும் மெதுவாகப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். பின்னர் இடது புறமாகச் சுழன்று, கைகளை ஊன்றி எழுந்திருக்கலாம். இந்த ஆசனம் செய்வதால் நம் உடலும் மனமும் சுகமாகும்.

சாவாசனம் (Shavasana)

சாவாசனம் (Shavasana)

இந்த ஆசனத்திற்கு, முதலில் நாம் தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். பின்னர், உடம்போடு ஒட்டி உள்ளங்கைகள் மேலே இருக்குமாறு கைகளை வைக்க வேண்டும். மூச்சை மட்டும் சீராக இழுத்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beat Insomnia With Yoga

To help you combat insomnia, we have brought few yoga asanas which will help you in getting good and deep sleep at night.
Desktop Bottom Promotion