For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில ஆயுர்வேத சிகிச்சை!

By Ashok CR
|

ஹெமோராய்ட்ஸ் என அழைக்கப்படும் மூல நோய் என்பது ஆசன வாய் பகுதியை சுற்றி ஏற்படும் சிறிய வீக்கங்களாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் கழிக்கும் போது வலி உண்டாகும். அதனுடன் சேர்த்து இரத்த கசிவும் ஏற்படும். பொதுவாக நடுத்தர வோதில் தான் மூல நோய் வளர்ச்சி காணப்படும். ஆனால் எதுவும் உறுதியாக சொல்வதற்கு இல்லை. நடுத்தர வயதிற்கு முன்பும் பின்பும் மூல நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. இதற்கான சிகிச்சைக்கு ஆயுர்வேதம் பெரிதும் கை கொடுக்கிறது. மிகவும் நம்பிக்கை தரும் பலனையும் அளிக்கிறது.

ஆயுர்வேதம் என்பது ஹிந்து பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறை என்பது நம் அனைவருக்கும் தெரியும். பண்டைய காலம் முதலே அது நம் இந்திய கண்டத்திற்கு சொந்தமானதாக விளங்குகிறது. எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் இது அளிக்கும் பல பயன்களை பற்றி நமக்கு தெரிவதால் இவ்வகையான சிகிச்சை மிகவும் புகழ் பெற்று வருகிறது. குறிப்பாக மூல நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை சிறந்த பயனை அளிப்பதை அனைவரும் உணர்ந்தனர். மூல நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை என வரும் போது வீட்டு சிகிச்சைகள் முக்கிய பங்கை வகிக்கிறது.

பைல்ஸ் பிரச்சனையா? வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

மூல நோய் வருவதற்கான முக்கிய காரணங்களில் மலச்சிக்கல் ஏற்படுத்தும் செரிமான அமைப்பும் ஒன்றாகும். இதனால் மலம் கழித்தல் கடினமாகும். இதனால் மேலும் பிளவுகள் உண்டாகும். இதனால் தான் ஆயுர்வேதமும் உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களை எதிர்ப்பார்க்கிறது. மூல நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சையில் வீட்டு சிகிச்சையும் வாழ்வு முறையில் மாற்றங்களும் உள்ளடங்கியிருப்பதால், அதனை கடைப்பிடிப்பது சுலபமாகி விடும்.

மூல நோயால் உண்டாகும் அழற்சி உட்பக்கம் அல்லது வெளிபக்கமாக ஏற்படும். அதன் பின் அது மேலும் வறண்டு, இரத்த கசிவு ஏற்படும். உட்புற மூல நோயை காட்டிலும், வெளிப்புற மூல நோய் என்றால் இரத்த கசிவு குறைவாக இருக்கும். இரண்டிலுமே செரிமான அமைப்பில் தான் கோளாறு. அதனால் உங்கள் சிகிச்சை இந்த மூல காரணத்தை நோக்கியே இருக்க வேண்டும்.

அடிக்கடி சூடு பிடிக்குதா? அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Treatment For Piles

In the case of piles, or hemorrhoids, people have often found Ayurvedic to be highly effective. When we talk of piles ayurvedic treatment, home remedies are commonly involved.
Desktop Bottom Promotion