For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புரோபயோடிக் எனும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் உண்மையில் நல்லதா? கெட்டதா?

By Karthikeyan Manickam
|

பாக்டீரியாக்களில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் என்று ஒரு வகை உண்டு. நம் உடம்பிலும், சில உணவுப் பொருட்களிலும் அவை காணப்படுகின்றன.

ஆங்கிலத்தில் புரோபயோட்டிக்ஸ் என்று அழைக்கப்படும் இதுப்போன்ற நன்மை தரும் பாக்டீரியாக்கள் சில பானங்களிலும் கூட உள்ளன என்றும், அதனால் அவற்றைக் குடிப்பது ஆரோக்கியமானது என்றும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. சில ஈஸ்ட்டுகள் கூட புரோபயோட்டிக்குகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன.

ஆனாலும், பெயருக்கேற்றவாறு இந்த பாக்டீரியாக்கள் உண்மையிலேயே நம் உடலுக்கு நல்லது தானா என்பது குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதென்ன நன்மை தரும் பாக்டீரியாக்கள்?

அதென்ன நன்மை தரும் பாக்டீரியாக்கள்?

நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் சில நுண்ணியிரிகள் தான் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அல்லது புரோபயோட்டிக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

எவ்வளவு உள்ளன?

எவ்வளவு உள்ளன?

மனித உடம்பில் உள்ள செரிமான அமைப்பில் மட்டுமே 400 முதல் 500 வகையான நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை தீமை தரும் பாக்டீரியாக்களை அழித்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகின்றன. அவற்றில் லாக்டிக் ஆசிட் பாக்டீரியா மற்றும் பிஃபிடோ பாக்டீரியா ஆகியவை முக்கியமானவை.

என்னென்ன நன்மைகள்?

என்னென்ன நன்மைகள்?

- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

- லாக்டோஸ் குறைபாட்டைப் போக்குகின்றன.

- பெண்களின் பிறப்புறுப்புப் பகுதிகளில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றிலிருந்து காக்கின்றன.

- சிறுநீரகத் தொற்றுக்களிலிருந்தும் காக்கின்றன.

- சில புற்றுநோய்களைத் தடுக்கின்றன.

- குழந்தைகளுக்கு ஏற்படும் சிரங்குகளைத் தடுக்கின்றன.

- சளி மற்றும் ஃப்ளூ காய்ச்சலில் தாக்கத்தைக் குறைக்கின்றன.

- குடல் அழற்சியைத் தடுக்கின்றன.

எவ்வாறு வேலை செய்கின்றன?

எவ்வாறு வேலை செய்கின்றன?

சில சமயம் நோயெதிர்ப்பு மருந்துகளை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, செரிமான அமைப்பில் உள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகள் பாதிப்படைகின்றன. இதைத் தொடர்ந்து, புரோபயோட்டிக்குகள் தான் பாதிப்படைந்த நுண்ணுயிரிகளை மீட்டெடுக்கின்றன.

எந்தெந்த உணவுகளில் உள்ளன?

எந்தெந்த உணவுகளில் உள்ளன?

தயிர், புளித்த சோயா பால், புளித்த முட்டைக்கோஸ், புளித்த காய்கறிகள், புளித்த ஆட்டுப் பால், வீட்டுத் தயாரிப்பு ஊறுகாய், சில சாக்லெட்டுகள் மற்றும் ஐஸ்க்ரீம்கள் ஆகியவற்றில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளன.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are Probiotics Good For Our Health?

Probiotics are the friendly bacteria which are naturally found in certain food items and also in our gut. There are many probiotic drinks in the market too which appeal people to drink it every day. But are they really needed for our health? We find out more on it.
Desktop Bottom Promotion