For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமும், அழகும் பெற பெப்பர்மின்ட் டீ குடிங்க...!

By Boopathi Lakshmanan
|

மின்ட் டீ என்று பரவலாக அழைக்கப்படும் பெப்பர்மின்ட் டீ புதினாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது மென்தா பிபெரிடா என்று அறிவியல் ரீதியாக பெயர் பெற்றுள்ளது. இந்த டீயில் கலந்துள்ள மென்தால் என்ற பொருள் தான் பெப்பர்மின்ட் டீயின் நறுமணத்திற்கு காரணமாக இருப்பதால், அதை குடிக்கும் ஒவ்வொரு முறைக்கும் புத்துணர்வை பெறுவீர்கள்.

பல்வேறு வகையான ஆரோக்கிய பலன்களை தருவதால் உலகெங்கிலும் இருக்கும் பலருக்கும் விருப்பமான பானமாக பெப்பர்மின்ட் டீ உள்ளது. இயற்கையான தேநீராகவும், காப்ஃபைன் இல்லாமலும் இருக்கும் பெப்பர்மின்ட் தேநீர், குடல் நோய், தலைவலிகள், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் குணங்களையும் கொண்டுள்ளது.

நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான இயற்கையான இரத்த தூய்மையாக்கிகள்!!!

இவற்றிலிருந்து உடனடி நிவாரணமும், மென்மையும் பெறுவதற்கு ஒரு கப் மின்ட் டீ போதும். இந்த பெப்பர்மின்ட் தேநீரில் உள்ள முதன்மையான பொருளான மென்தால், காய்ச்சலால் அவதிப்படும் நோயாளிகளுக்கும் இதமூட்டும் மருத்துவ பொருளாக உதவுகிறது.

இப்போது பெப்பர்மின்ட் தேநீரின் ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகளைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமான உறுப்புகளை சரிவர இயங்கச் செய்தல்

செரிமான உறுப்புகளை சரிவர இயங்கச் செய்தல்

வயிற்றில் உள்ள தசைகளை மென்மையடையச் செய்யும் மூலிகையாக பெப்பர்மின்ட் உள்ளது. உணவை சாப்பிட்ட பின்னர், அஜீரணத்தால் வரும் வலியிலிருந்தும், வயிற்றில் உள்ள வாயுக்களால் வரும் வலியிலிருந்தும் நிவாரணம் பெறுவதற்கு பெப்பர்மின்ட் தேநீர் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உணவு வேகமாக செரிக்கவும் இது உதவுகிறது.

குமட்டல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு

குமட்டல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு

பல்வேறு நபர்களும் கார், பஸ் அல்லது படகில் பயணம் செய்யும் போது குமட்டல் வருவதை உணருவார்கள். இவ்வாறு வாந்தி வருவதை தவிர்க்க ஒரு கோப்பை சூடான பெப்பர்மின்ட் தேநீர் குடித்தால் போதும். அதன் நறுமணத்தால் உங்களை புத்துணர்வூட்டுவதுடன், வயிறு தொடர்பான பிரச்சனைகளான வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் சிகிச்சை செய்ய உதவுகிறது.

முகப்பருவிற்கு சிகிச்சை செய்ய

முகப்பருவிற்கு சிகிச்சை செய்ய

பெப்பர்மின்ட் டீயில் உள்ள மென்தாலின் நறுமணம், முகப்பரு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. பெப்பர்மின்ட் இலைகள் குளிர்ச்சியான விளைவை தருவதால், அது அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் பருக்கள் மிகுந்த சருமம் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

சரும எரிச்சலை குறைத்தல்

சரும எரிச்சலை குறைத்தல்

மிகவும் உணர்வு மிகுந்த தோலில் எரிச்சல் மற்றும் அலர்ஜிகள் இருந்தால், ஒரு கொப்பை பெப்பர்மின்ட் தேநீரை குடித்து நிவாரணம் பெறலாம். மேலும், சரும பிரச்சனைகளான தடிப்புகள், காயங்கள், பூச்சி கடித்தல், அரிப்பு மிகுந்த தோல் மற்றும் தோல் எரிச்சல் ஆகியவற்றையும் குறைக்க பெப்பர்மின்ட் தேநீர் உதவுகிறது.

தோலின் எண்ணெய் பதத்தை குறைத்தல்

தோலின் எண்ணெய் பதத்தை குறைத்தல்

நமது தோலில் எந்த அளவுக்கு எண்ணெய் அதிகமாக உள்ளதோ, அந்த அளவிற்கு அழுக்குகளும், பாக்டீரியா தாக்குதல்களும் அதிகமாக இருக்கும். ஏனெனில் எண்ணெய் இயற்கையாகவே அழுக்குகளை கவர்ந்திழுப்பதால் இதனை தவிர்க்க முடிவதில்லை. பெப்பர்மின்ட்டில் உள்ள முதன்மையான பொருளான மென்தால் தோலிலுள்ள கொழுப்பு சுரப்பிகள் அதிகமான எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துகின்றன.

முடியின் வளர்ச்சியை மேம்படுத்துதல்

முடியின் வளர்ச்சியை மேம்படுத்துதல்

பெப்பர்மின்ட் தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும். மேலும் இரத்த நாளங்களை மென்மைப்படுத்தி, மயிர்க்கால்களில் இரத்தம் பாய்ந்து செல்ல இந்த மூலிகை உதவுகிறது. தலைச் சருமத்தை தூண்டும் பொருளாக இருந்து செயல்படுவதால், முடியின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் பெப்பர்மின்ட் செயல்படுகிறது. பெப்பர்மின்ட்டுக்கு தலைமுடியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்தும் குணம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Health And Beauty Benefits Of Drinking Peppermint Tea

Peppermint Tea is a natural tea and free of caffeine, with the presence of many healing properties it is believed to reduce various problems like bowel syndrome, headaches, vomiting, diarrhoea and nausea. For the instant soothing and relaxation have a cup of mint tea.
Desktop Bottom Promotion