For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக அளவு யூரிக் அமிலம் உள்ளவர்களுக்கான சில டயட் டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

அதிக அளவு யூரிக் அமிலம் உள்ளவர்கள் அவர்களது உணவு முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் அவற்றின் அளவை பெருமளவில் குறைக்க முடியும். மருத்துவர்கள் கூறும் படி மாட்டிறைச்சி போன்ற உணவுகளை தவிர்த்து பச்சிலை காய்கறிகளை உட்கொள்வது மற்றும் அதிக அளவு நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது போன்ற மாற்றங்களை உணவு முறையில் செய்தால் அவை யூரிக் அமிலத்தின் தன்மையை குறைக்க உதவும்.

இங்கு அதிக அளவு யூரிக் அமிலம் உள்ளவர்களுக்கான சில டயட் டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றினால், யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள்

அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள்

மேரிலான்ட் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழகத்தின் அறிவுரைப்படி அதிக அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது அவை யூரிக் அமிலத்தை குறைக்கின்றன. உணவில் நார்ச்சத்து சேர்த்து உட்கொள்ளப்படும் போது, அவை யூரிக் அமிலத்தை இரத்தத்தில் ஈர்த்துக் கொள்ளச் செய்து, உடலிலிருந்து அவற்றை வெளியேற்றுகின்றன. ஓட்ஸ், கீரைகள், ப்ராக்கோலி ஆகியவைகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளாகும்.

குளிர்ந்த அழுத்தமுடைய ஆலிவ் எண்ணெய்

குளிர்ந்த அழுத்தமுடைய ஆலிவ் எண்ணெய்

வெண்ணெய் மற்றும் வெஜிடேபிள் எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு மாறாக குளிர்ந்த அழுத்தமுடைய ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். இத்தகைய எண்ணெய்கள் சூட்டினால் அழுத்தம் பெற்று உருவாக்கப்பட்டவையாகும். இவை சீக்கிரம் கெட்டுப் போய் விடுகின்றன. இதனால் உருவாகும் கொழுப்பு உடலில் உள்ள வைட்டமின் ஈ-யை அழித்துவிடுகிறது. வைட்டமின் ஈ யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஊட்டச்சத்தாகும். ஆகையால் இத்தகைய எண்ணெய்களை தவிர்க்க வேண்டும். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது அதிக அளவில் யூரிக் அமிலம் சுரக்காமல் இருப்பதற்கு உதவுகின்றது.

வைட்டமின் சி எடுத்துக் கொள்வது

வைட்டமின் சி எடுத்துக் கொள்வது

யூரிக் அமிலத்தை குறைப்பதற்கு வைட்டமின் சி பெரிதும் உதவியாக உள்ளது. தினசரி 500 மில்லிகிராம் வைட்டமின் சி-யை உட்கொண்டால், ஒரு மாதத்தில் அல்லது இரண்டு மாதத்தில் யூரிக் அமிலத்தின் அளவு உடலில் குறைந்துள்ளதை நீங்கள் உணர்வீர்கள்.

பேக்கரி உணவுகளை தவிர்ப்பது

பேக்கரி உணவுகளை தவிர்ப்பது

கேக், குக்கீஸ் மற்றும் இதர சர்க்கரை கலந்த உணவுகள் ஆகியவற்றில் அதிக அளவு சாச்சுரேட்டட் கொழுப்பு வகைகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு வகைகள் உள்ளதால் அவற்றைத் தவிர்க்கவும்.

செலரி விதையின் சாறு

செலரி விதையின் சாறு

வயிற்று வலி மற்றும் கால் வலி ஆகிய நோய்களை குணமாக்கும் சக்தி இந்த விதையில் உள்ளது. இவ்விதைகள் முதலில் கால் வலி, மூட்டு வலி, அடி வயிறு ஆகிய இடங்களிலுள்ள வலிகளை தீர்க்க உதவியாக உள்ளன. செலரியில் உள்ள தூக்கமூட்டும் தன்மை, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் குறைந்த டையூரிட்டிக் தன்மை ஆகியவை சிறுநீர் கிருமி நாசினிகளாக உள்ளன. இதை சில நேரங்களில் தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி மற்றும் பயம் ஆகிய கோளாறுகளுக்கு மருந்தாக கொடுப்பார்கள். இதன் விதை ஒரு மூலிகையாகவும், வேரும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள்

காய்கறி மற்றும் பழ வகைகளான சிவப்பு குடைமிளகாய், தக்காளி, ப்ளுபெர்ரி, ப்ராக்கோலி மற்றும் திராட்சை ஆகியவற்றில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் உள்ளன. இவை ஃப்ரீ ராடிக்கல்கள் நமது உடலின் உறுப்புகளை சேதப்படுத்த விடாமல் பாதுகாக்கின்றன. இதனால் யூரிக் அமிலத்தின் அளவும் குறைகிறது.

செர்ரி

செர்ரி

செர்ரிகளில் உள்ள ரசாயன கலவை யூரிக் அமிலத்தின் தன்மையை சமனப்படுத்தி அதிகமாய் உள்ள அமிலத்தை வெளியே அனுப்புகின்றது. 30 முதல் 40 செர்ரிகளை ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறைம் சாப்பிடுவது இந்த செயலை செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

பச்சையான ஆப்பிள் சீடர் வினிகர் அதிகமாய் உள்ள யூரிக் அமிலத்தின் தன்மையை குறைக்க உதவுகின்றது. இது இரத்தத்தின் pH-அளவை மாற்றுவதன் மூலம் இச்செயல் நடைபெறுகின்றது. ஆனால் இந்த திரவம் வடிகட்டப்படாமல், சுத்திகரிக்கப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். இத்தகைய பொருளை நம் வீட்டருகே உள்ள அண்ணாச்சி கடைகளில் கூட வாங்க முடியும்.

அதிக அளவு ஃபுருக்டோஸ் உடைய கார்ன் சிரப்

அதிக அளவு ஃபுருக்டோஸ் உடைய கார்ன் சிரப்

இந்த வகை இனிப்பூட்டும் திரவத்தை குளிர் பானங்களில் கலக்கின்றனர். இதை அருந்தும் போது ட்ரை-கிளிசரைடுகள் மற்றும் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் சர்க்கரை நோய், வாதம், சிறுநீரக கோளாறுகள் மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஜாக்கிரதை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Dos And Don'ts About Diet For High Uric Acid Levels

A proper uric acid diet plan will help control your high uric acid levels. Here are diet tips for high uric acid patients. Read more to know the do's and don't's in a high uric acid diet list.
Desktop Bottom Promotion