For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் 7 இந்திய பாரம்பரிய பழக்கங்கள்!!!

By Boopathi Lakshmanan
|

இயற்கையாகவே, ஒரு சில தலைமுறைகளாக நமது இந்திய பாரம்பரியம் மற்றும் அதன் நடவடிக்கைகளைப் பற்றி நம்பிக்கையில்லாத எண்ணங்களையே நாம் பின்பற்றி வருகின்றோம். ஆனால், அந்த நடவடிக்கைகள் பின்பற்றப் படுவதற்கான காரணங்கள் நம்முடைய எழுத்துகளில் ஆழமாக வேரூன்றியுள்ளதை நாம் உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டோம்.

இன்றைய அறிவியல் உலகம், சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவைக் கணக்கிட்டுச் சொல்வதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே. ஹனுமான் சாலிசாவில் இந்த கேள்விக்கான விடை கவிதையாகப் பாடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்று நமக்கு அறிவையும், தெளிவையும் ஊட்டி ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய 7 பாரம்பரிய முறைகளைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் படிக்கப் போகிறீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளி பாத்திரங்களைப் பயன்படுத்துதல்

வெள்ளி பாத்திரங்களைப் பயன்படுத்துதல்

வெள்ளியில் இயற்கையாகவே காணப்படும் கிருமிகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் உங்களுடைய உணவைப் பாதுகாக்கும் அரணாக இருக்கும். வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர் () என்று குறிப்பிடப்படும் புகழ் மொழி, செல்வந்த குணத்தை காட்டுவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக வளர்த்தெடுப்பதையும் குறிப்பிடக் கூடிய மொழியாக உள்ளது. குளிர்பதன வசதிகள் கண்டுபிடிக்கப்படாத புராதன காலங்களில், அதாவது பாஸ்ட்யுரைசேசன் முறை கண்டறியப்படாத காலங்களில், பாலின் குணம் மாறமலிருக்கவும், அது கெட்டுப் போகாமல் இருக்கவும் வெள்ளிக் காசுகளை பாலில் மூழ்கியிருக்கச் செய்வார்கள்.

கிணறுகளைப் போற்றுதல்

கிணறுகளைப் போற்றுதல்

கிணறுகளையும், ஆறுகளையும் போற்றும் பழக்கத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறீர்களா? இது ஒன்றும் அந்தக் கால யோகிகள், மகான்களின் கண்கட்டும் வித்தையல்லை. இந்தியாவின் பழமையான நாணயங்கள் எல்லாம் தாமிரத்தில் செய்யப்பட்டிருந்தன. மேலும், கிணறுகளும், ஆறுகளும் தான் கிராமங்கள் அல்லது நகரங்களின் தினசரி வாழ்க்கைக்கான ஆதாரங்களாக இருந்தன. RBC ஒருங்கிணைவு செயல்பாடுகள், என்ஸைம் செயல்பாடுகள் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியம் போன்ற செயல்பாடுகளில் மிகவும் அவசியமாக ஊட்டச்சத்தாக தாமிரம் உள்ளது. இது மூப்பு அடையும் வேகத்தை குறிப்பிட்டு சொல்லும் வகையில் குறைக்கவும், மூட்டு வலியின் தீவிரத்தை மட்டுப்படுத்தவும் உதவும் தனிமமாகவும் உள்ளது. கிராம மக்களின் உடல் மற்றும் மன நலம் ஆரோக்கியமாக இருக்கும் பொருட்டாக, வேதியர்கள் மூடநம்பிக்கைகளைப் பரவ விட்டு, உண்மையான அறிவியல் ரீதியான காரணங்களை மறைத்து விட்டார்கள். இந்த செய்திக்கும், கிணறுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? ஏனெனில், கிணறுகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் மட்டுமல்லாமல் தாமிரமும் தழைத்து செழித்து இருந்தது.

கோலம் போடுதல்

கோலம் போடுதல்

இந்திய நகரங்களில் இன்னமும் சாதரணமாக பின்பற்றப்படும் செயல்பாடுகளில் ஒன்றாக இருப்பது ரங்கோலி எனப்படும் கோலம் போடுவது. இது வீட்டுக்கு முன் அழகுக்காக போடப்படும் அலங்காரம் மட்டுமல்ல. இதன் பின்னணியில் ஒரு புனிதமான அறிவியல் தொடர்புடைய காரணமும் உள்ளது. முந்தைய காலங்களில் கோலப்பொடிகள், இன்றைக்கு மூச்சைத் திணறடிக்கும் வண்ணப்பொடிகளாக இல்லாமல், அரிசி மாவில் இயற்கையான வண்ணங்களைக் கலந்து தான் தயாரித்து பயன்படுத்தினார்கள். இது பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் செயல் என்றால் நம்புவீர்களா! இந்த வழிமுறையின் போது பூச்சிகளும், பறவைகளும் வாசலில் உள்ள கோலப்பொடியைச் சாப்பிடுவதில் கவனமாகி விடுவதால், அவை வீட்டுக்குள் நுழைவதில்லை. இது மட்டுமல்லாமல், காலை நேரங்களில் கோலம் போட வெளியே வரும் போது பெண்கள் சமூகம் மற்றும் கற்றல் தொடர்பான திறன்களை வளர்த்துக் கொள்ளவும், காலை நேரத்தில் ரம்மியமான சூழலை உருவாக்கவும் முடிந்தது.

காது குத்துதல்

காது குத்துதல்

பெண் குழந்தைகளுக்கு காது குத்துவதென்பது இன்றைய இந்தியாவிலும் பரவலாக இருக்கும் சாதாரண பழக்கமாகும். இது பெண்மையை வரையறுக்கும் செயலாக மட்டும் நின்று விடுவதில்லை. இந்த செயல்பாட்டின் பின்னணியில் அக்குபஞ்சர் சிகிச்சை முறையும் உள்ளது! காது மடல் மற்றும் மூக்கில் ஓட்டை போடுவதன் மூலம் ஆன்மீக அமைதியும், அணிபவரின் அழகும் கூடும் என்பது உண்மை. ஆனால், எந்த வரைமுறையும் இல்லாமல் உடலில் போடப்படும் ஓட்டைகளை போட வேண்டாம்! ஜாக்கிரதை!

இந்தியாவில் சாப்பிடும் முறை

இந்தியாவில் சாப்பிடும் முறை

இந்தியாவில் சாப்பிடும் முன்னர் சாப்பிடக் கூடிய தட்டு அல்லது இலையைச் சுற்றிலும் மூன்று முறை வட்ட வடிவமாக தண்ணீரை விரல்களில் எடுத்து போடுவதை பார்க்காதவர்கள் யாரும் இருக்கப் போவதில்லை. இதை சில பேர் கடவுளர்களுக்கும், தேவதைகளுக்கும் மரியாதை செலுத்தும் செயலாக சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், அது பூச்சிகள் மற்றும் சிறு உயிரினங்களை சாப்பாட்டிற்கு அருகில் வர விடாமல் தடுக்கும் யுக்தி என்பதையும் சொல்லிக் கொள்கிறோம்.

இந்தியர்கள் தங்களுடைய கைகளைப் பயன்படுத்தி சாப்பிடுவதில் கவனிக்கத் தக்கவர்கள் ஆவார்கள். இவ்வாறு கைகளைப் பயன்படுத்தி சாப்பிடுவதன் மூலம் உணவு எவ்வளவு சூடாக உள்ளது என்பதை அறிந்து கொள்கிறார்கள். எனவே, சூடான உணவை சாப்பிட்டு நாக்கை சுட்டுக் கொள்வதையும், அல்சர் நோயை வரவழைத்துக் கொள்வதையும் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். மேலும், டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவதை விட, தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதே இந்தியப் பாரம்பரியமாக உள்ளது.

இவ்வாறு தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது, உடலை திரும்பத் திரும்ப சாய்து உணவை சாப்பிடுவோம். ஆதன் மூலம் முதுகெலும்பு வலிவடைந்து, இரத்த ஓட்டமும் மற்றும் செரிமானமும் தூண்டப்படுகின்றன. மேலும், சாப்பிடும் உணவு உடையில் விழுவதும் தவிர்க்கப்படுகிறது.

நெய்யை போற்றுதல்

நெய்யை போற்றுதல்

நெய் ஒரு முழுமையடைந்த உணவாகும். பேராக்ஸைடுகள் மற்றும் தொற்றுக் கிருமிகளைப் போல நெய்யை சூடுபடுத்தும் போது, அது வேறு உருவத்திற்கு மாறி விடுவதில்லை. உண்மையில், உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க நெய் உதவுகிறது. உங்களுடைய செரிமாணக் குழயில் பூசிக் கொண்டு, புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கும் பணியை நெய் செய்கிறது. மேலும், பால் பொருட்கள் தொடர்பாகவும், ஆயுர்வேதத்திலும் யாரும் எதிர்பார்க்காத வகையிலான நற்குணங்களை நெய் கொண்டுள்ளது.

விரதம் இருத்தல்

விரதம் இருத்தல்

பல்வேறு வகையான உணவுகளை ஒரு கை பார்க்கும் 'தளி' உணவும், எந்த உணவுமே சாப்பிடாமல் நோன்பு அல்லது விரதம் இருக்கும் முறையும் இந்தியாவில் இருந்தே பிறந்தது என்று சொல்லும் போது, நமது எண்ணற்ற வேற்றுமை மிகுந்த காலச்சார பாரம்பரியத்தின் ஆழம் தெரியும். துளியில் அனைத்து வகைகளும் சேர்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பரிமாறப்படும் நேரத்தில், ஆண்டின் குறிப்பிட்ட சில நாட்களில் சாப்பிடாமல் விரதம் கடைபிடிப்பதும் நல்லது என்கிறது இந்தியப் பாரம்பரியம்.

இவ்வாறு விரதம் இருப்பதன் மூலம் உடலுக்கு சிறிதளவு ஓய்வும், உடல் சுத்தமடையும் செயலும் நடக்கும். ஸ்ரவண மாதம் புலால் உணவு உண்ணாமல் விரதம் இருக்க மிகவும் பரிந்துரைக்கப்படும் மாதமாக உள்ளது. ஆனால், ஸ்ரவண மாதம் மழைக்காலத்தில் வருவதால், அந்நாட்களில் புலால் உணவைத் தவிர்ப்பது ஏன் என்று தெரியுமா? ஏனெனில், மழைக்காலத்தில் தான் இறைச்சியானது, கோடை மற்றும் குளிர் காலத்தை விட வேகமாக கெட்டுப் போகும். மேலும், அந்நாட்களில் குளிர்பதனப் பெட்டிகள் போன்றவை கண்டுபிடிக்கப்படவில்லை. கடற் புயல்கள் சாதாரணமாக இருந்த பருவமாகவும் மழைக்காலம் இருந்தால், அந்நாட்களில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் இறக்கவும் நேரிடும்.

எனவே, ஸ்ரவண மாதத்தில் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கும் வகையில் விரதம் இருப்பதால், நீர் மூலம் பரவும் நோய்கள் வந்த, கெட்டுப் போன இறைச்சியை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இந்த காரணமும் மூடநம்பிக்கைகளால் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Indian Traditions Which Are Actually Good For Your Health!

Here are indian traditions which are actually good for your health. We, as a generation, have developed a default cynical attitude towards our traditions and practices. But, what we fail to understand is that reason is rooted deep into our scriptures.
Story first published: Saturday, April 19, 2014, 17:10 [IST]
Desktop Bottom Promotion