For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடம்பு கும்மென்று முறுக்கேற 20 சூப்பர் டூப்பர் டிப்ஸ்!!

By Karthikeyan Manickam
|

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! நம் உடலும் மனமும் நன்றாக இருந்தால் தான் நோய் நம்மை அண்டாமல் இருக்கும். அதற்கு நம் உடம்பை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்யலாம்; வாக்கிங் போகலாம்; ஜாக்கிங் செய்யலாம்; ரன்னிங் ஓடலாம்; ஏன் ஜிம்முக்கு சென்றும் உடம்பைத் தேற்றலாம்.

பாடி பில்டர் போன்று அழகான உடல் கட்டமைப்பைப் பெற உதவும் உணவுகள்!!!

நம் உடம்பை ஆரோக்கியமாகவும், கும்மென்று செக்ஸியாகவும் வைத்துக் கொள்ள 20 எளிமையான டிப்ஸ்கள் இங்கு தரப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் என இருபாலினருமே இவற்றைக் கடைப்பிடித்துக் கொள்ளலாம்.

எடை தூக்கும் பயிற்சி பற்றி உங்களுக்கு தெரியாத 9 விஷயங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுக் கட்டுப்பாடு

உணவுக் கட்டுப்பாடு

நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுக் கட்டுப்பாடு மிகமிக அவசியம். கண்ணில் கண்டதையெல்லாம் வாங்கிச் சாப்பிடாமல், உண்ண வேண்டிய உணவுகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். போகப் போகப் பழகி விடும்.

காலை உணவு

காலை உணவு

காலை உணவை மட்டும் எப்போதும் தவிர்த்து விடவே கூடாது. அதிலும், நல்ல சத்தான காலை உணவை தினமும் எடுத்துக் கொண்டால் தான் நம் மெட்டபாலிசமும், எனர்ஜியின் அளவும் சிறப்பாக இருக்கும்.

கொழுப்பற்ற பால்

கொழுப்பற்ற பால்

சாதாரண பாலில் கொழுப்புச் சத்து இருக்கும். இது உடலுக்குக் கெடுதல் ஆகும். எனவே கொழுப்பு நீக்கப்பட்ட பாலை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதில் கலோரிகளும் குறைவு. உடம்பில் அதிக எடை இருக்கும் போது, இந்தக் கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிப்பதன் மூலம் நன்றாக எடையைக் குறைக்கலாம்.

நீர்

நீர்

தினமும் 2-3 லிட்டர் தண்ணீராவது குடித்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். சருமம் வறட்சியடையாமல் இருக்கும். மேலும், நம் உடலில் தேவையில்லாமல் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை அகற்றவும் தண்ணீர் உதவும்.

குளிர்பானங்களுக்கு குட்-பை

குளிர்பானங்களுக்கு குட்-பை

குளிர்பானங்களில் கலோரிகள் அதிகம் இருப்பதால், அவற்றை அறவே தவிர்ப்பது நல்லது. அப்போது தான் உடல் எடை குறையும்.

காய்கறிகள்

காய்கறிகள்

நம் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஒரு தட்டு உணவில், பாதித் தட்டு காய்கறிகள் தான் இருக்க வேண்டும். கால் பகுதி ஸ்டார்ச் பொருட்களாகவும், மீதமுள்ள கால் பகுதி இறைச்சியாகவும் இருக்கலாம்.

பசித்துப் புசி

பசித்துப் புசி

நன்றாகப் பசி எடுத்த பிறகே சாப்பிட வேண்டும். அப்படிப் பசி எடுக்கும் போது ஒரு டம்ளர் நீரை மடமடவென்று குடிக்க வேண்டும். அப்படிக் குடிப்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

சத்தான ஸ்நாக்ஸ்

சத்தான ஸ்நாக்ஸ்

மாலை 3 மணிக்கு மேல் உடலில் உள்ள எனர்ஜியின் அளவு குறையத் தொடங்கும். அப்போது கொழுப்பு குறைவான தயிர், கலோரிகள் குறைந்த காய்கறிகள், பாதாம் உள்ளிட்ட ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை சாப்பிடலாம்.

சூப்

சூப்

சத்தான சூப்புகளைக் குடிப்பதன் மூலமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். சூப் குடிப்பதால், வயிறு நிரம்பியது போலத் தோன்றும். அப்போது தான் குறைவாக சாப்பிட முடியும். க்ரீம் இல்லாத, கலோரிகள் குறைவான மற்றும் நார்ச்சத்து மிகுந்த சூப்புகள் குடிப்பது நல்லது.

மெதுவாக சாப்பிடுங்கள்

மெதுவாக சாப்பிடுங்கள்

நாம் உணவை நன்றாக மென்று, மெதுவாக சாப்பிட வேண்டும். அப்போது தான் குறைவாகவும் சாப்பிட முடியும். வேகமாகச் சாப்பிடும் போது, அளவுக்கு அதிகமாகச் சாப்பிட வேண்டியிருக்கும்.

கலோரிகள் குறைந்த உணவுகள்

கலோரிகள் குறைந்த உணவுகள்

கடுகு உள்ளிட்ட கலோரிகள் குறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

ஃபாலோ அப்

ஃபாலோ அப்

உங்கள் உணவுக் கட்டுப்பாட்டை எப்படிக் கடைப்பிடிக்கிறீர்கள் என்பதை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டே வாருங்கள். அப்போது தான் எவ்வளவு விரைவாக எடையைக் குறைத்து வருகிறீர்கள் என்பது தெரிய வரும்.

வெளி உணவு

வெளி உணவு

நீங்கள் வெளியில் சென்று சாப்பிட வேண்டிய நிலை வந்தால், உங்கள் உணவில் சூப் அல்லது பச்சடி கண்டிப்பாக இருக்க வேண்டும். கலோரிகள் மிகுந்த உணவை சாப்பிடுவதில் அப்போது தான் ஒரு கட்டுப்பாடு வரும்.

ஐஸ்க்ரீம், குளிர்பானங்களுக்கு 'நோ'

ஐஸ்க்ரீம், குளிர்பானங்களுக்கு 'நோ'

நீங்கள் வெளியில் சாப்பிடும் போது, ஐஸ்க்ரீம் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

உங்களுக்கு நீங்களே ட்ரீட்

உங்களுக்கு நீங்களே ட்ரீட்

வாரத்திற்கு ஒரு முறை நீங்களே உங்களுக்கு ட்ரீட் கொடுத்துக் கொள்ளூங்கள். அதாவது, உங்கள் உணவுக் கட்டுப்பாட்டுக்கு வாரம் ஒரு முறை ஓய்வு கொடுங்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடல் எடையக் குறைக்க உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருவது அவசியம். அதிலும் தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பார்ட்னருடனும் ஓ.கே.

பார்ட்னருடனும் ஓ.கே.

உடற்பயிற்சி செய்யும் போது ஒரு பார்ட்னரையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்து வருவீர்கள். பார்ட்னருடன் உடற்பயிற்சி செய்வதால் சந்தோஷமும் கிடைக்கும்.

எடைப் பயிற்சி

எடைப் பயிற்சி

உங்கள் உடற்பயிற்சியில், எடைப் பயிற்சியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து, அவ்விடங்களில் தசைகள் கும்மென்று முறுக்கேறி நிற்கும்.

வாரம் 5 முறை

வாரம் 5 முறை

ஒவ்வொரு வாரமும் 5 முறை உடற்பயிற்சியை மேற்கொள்வது சாலச் சிறந்தது. ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்; ரொம்ப ஈஸியாகவும் இருக்கக் கூடாது.

குறைந்த மது

குறைந்த மது

எடைக் குறைப்பில் ஈடுபட்டிருக்கும் போது, மது குடிப்பதை முற்றிலும் கைவிடுவது நல்லது. முடியவில்லையென்றால், வார இறுதிகளில் மட்டும் அளவாக மதுவை அருந்திக் கொள்ளலாம்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Tips To Get The Perfect Body

Try these simple tips to get perfect body and be proud of your perfection. Both men and women can try these methods.
Desktop Bottom Promotion