For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஞ்சளை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!!

By Maha
|

இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு மசாலா பொருள் தான் மஞ்சள். இத்தகைய மஞ்சளானது உணவிற்கு நிறத்தை மட்டும் கொடுப்பதில்லை. மாறாக பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது. இத்தகைய மஞ்சளானது அக்காலத்தில் இருந்து இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் பலவற்றில், மஞ்சளில் உள்ள நோயெதிப்பு அழற்சி தன்மையினால், மஞ்சளானது காயங்களை சரிசெய்ய உதவுவதுடன், புற்றுநோய் முதல் அல்சைமர் வரை பல உடல்நல பிரச்சனைகளையும் குணப்படுத்த பெரிதும் உதவியாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

சுவாரஸ்யமான வேறு: பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் 15 நன்மைகள்!!!

ஆகவே அத்தகைய பொருளை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று அனைவரும் நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து இனிமேல் தவறாமல் மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரலை சுத்தப்படுத்தும்

கல்லீரலை சுத்தப்படுத்தும்

மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரலில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, கல்லீரலானது சுத்தமாக இருக்கும்.

அல்சைமர் நோயைத் தடுக்கும்

அல்சைமர் நோயைத் தடுக்கும்

மஞ்சள் தூளில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், அதனை உணவில் சேர்த்து வந்தால், மூளையில் அமிலாய்டு என்னும் பிளேக் உருவாவது தடுக்கப்பட்டு, இதனால் மறதி நோயான அல்சைமர் நோய் ஏற்படுவது தடுக்கப்படும்.

புற்றுநோயை தடுக்கும்

புற்றுநோயை தடுக்கும்

மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, அது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, பல வகையான புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

நாள்பட்ட மூட்டு வலி

நாள்பட்ட மூட்டு வலி

மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையினால், நாள்பட்ட மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் தான் ஆயுர்வேத மருத்துவத்தில் மூட்டு வலியைக் குணப்படுத்த மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர்.

தண்டுவட மரப்பு நோய்/மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்

தண்டுவட மரப்பு நோய்/மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்

மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, அது தண்டுவட மரப்பு நோய் என்னும் மூளை மற்றும் முதுகு தண்டுகளிடையே ஏற்படும் தொடர்பை தடுக்கும். பொதுவாக இது இளம் வயதினரைத் தாக்கக்கூடிய நோய். அதிலும் குறிப்பாக பெண்கள் தான் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே உணவில் மஞ்சளை சேர்த்து தண்டுவட மரப்பு நோயில் இருந்து விடுபடுங்கள்.

எடை கட்டுப்பாடு

எடை கட்டுப்பாடு

மஞ்சளானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மன இறுக்க நிவாரணி

மன இறுக்க நிவாரணி

சீன மருத்துவத்தில் மஞ்சளை மன இறுக்கத்தை சரிசெய்யும் சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றனர். எனவே இந்த பொருளை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், அது மன இறுக்கத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

கீல்வாதம்

கீல்வாதம்

மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மையானது இருப்பதால், இது கீல்வாதம் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே கீல்வாதம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள்.

கணைய புற்றுநோய்

கணைய புற்றுநோய்

ஆய்வு ஒன்றில் மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, அது கணைய புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

எலும்புப்புரை

எலும்புப்புரை

மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, பிற்காலத்தில் எலும்புப்புரை போன்ற முதுகு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.

கட்டிகளில் இரத்த நாளங்களின் வளர்ச்சி

கட்டிகளில் இரத்த நாளங்களின் வளர்ச்சி

மஞ்சள் தூளானது, உடலில் உருவாகியிருக்கும் கட்டிகளில் உள்ள இரத்த நாளங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி, கட்டிகளால் உடலுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுக்கும்.

காயங்களை குணப்படுத்தும்

காயங்களை குணப்படுத்தும்

மஞ்சளை உணசில் சேர்த்தால், அது உடலில் ஏற்பட்டுள்ள உள் காயங்களை குணப்படுத்திவிடும். அதேப் போன்று வெளிக் காயத்திற்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சரும நோய்கள்

சரும நோய்கள்

மஞ்சள் தூளை உணவில் சேர்க்கும் போது, அது சொரியாசிஸ் மற்றும் பல சரும அழற்சிகளை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

நெஞ்சு வலி மற்றும் அடிவயிற்று வலி

நெஞ்சு வலி மற்றும் அடிவயிற்று வலி

சீனாவில் நெஞ்சு வலி மற்றும் அடிவயிற்று வலியைக் குணப்படுத்த மஞ்சளைத் தான் பயன்படுத்துகிறார்கள். ஆகவே இதனை உணவில் சேர்த்து வந்தால், இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வயிற்று அல்சர்

வயிற்று அல்சர்

மஞ்சளில் உள்ள ஒரு முக்கியமான நன்மை தான் அல்சர் பிரச்சனையில் இருந்து விடுதலை அளிப்பது. ஆகவே அல்சர் உள்ளவர்கள், உணவில் மஞ்சளை சேர்த்து வர விரைவில் குணமாகும். மேலும் தினமும் இதனை உணவில் சிறிது சேர்த்து வந்தால், அல்சர் வருவதையே தடுத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Reasons To Add Turmeric To Your Diet

Long known for its anti-inflammatory properties, recent research has revealed that turmeric is a natural wonder, proving beneficial in the treatment of many different health conditions from cancer to Alzheimer's disease. Here are 20 health benefits of turmeric.
Desktop Bottom Promotion