சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

ஒவ்வொரு காலத்திலும் சந்தையில் பல வகையான பழங்கள் வந்த வண்ணம் இருக்கும். அப்படி தற்போது நாம் பார்ப்பது தான் கூடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீத்தாப்பழங்கள். அனைத்து இடங்களிலும் காணப்படும் இந்த சதைப்பற்றுள்ள பழம் எங்கும் கொட்டிக் கிடக்கும். இதில் சிறப்பு என்னவென்றால் இது மிகவும் ஆரோக்கியமானதாகும்.

வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ள பழம் தான் சீத்தாப்பழம். இவ்வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை நீக்கும். இதுப்போக உங்களை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், மெக்னீஷியம், இரும்பு, நியாசின் மற்றும் பொட்டாசியமும் இதில் அடங்கியுள்ளது.

எலுமிச்சையின் அட்டகாசமான ஆரோக்கிய நன்மைகள்!!!

பலருக்கு இந்த சதைப்பற்றுள்ள பழத்தில் மீது நாட்டம் இருப்பதில்லை. ஆனால் அதன் முக்கியத்துவம் மற்றும் உடல்நல பயன்கள் பற்றி தெரிந்தால் அதனை ஒவ்வொரு சீசனிலும் கண்டிப்பாக வாங்கி சாப்பிடுவீர்கள். வேகமான உடல் எடை குறைப்பிற்கு சீத்தாப்பழம் உதவுகிறது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதனால் அதனை உடல் எடை குறைப்பு பழமாக கூட பயன்படுத்தலாம். இருப்பினும் இந்த சுவைமிக்க பழத்தில் உள்ள ஒரே பிரச்சனை, இது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். அதனால் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு இது உதவாது.

ப்ளாக் டீயின் சில வியப்பூட்டும் நன்மைகள்!!!

இதோ, சீத்தாப்பழத்தின் சில உடல் நல பயன்கள். நம் உடல் நலத்திற்கு இது எப்படி உதவுகிறது என்பதை விரிவாக பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உடல் எடையை குறைக்க...

உடல் எடையை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கு சீத்தாப்பழம் உதவுகிறது. சீத்தாப்பழம் ஜூஸ் செய்வதற்கு, கொஞ்சம் தேனையும் சீத்தாப்பழத்தையும் பாலில் கலந்து தொடர்ந்து குடியுங்கள்.

கர்ப்ப காலத்தின் போது...

சிசுவின் மூளை, நரம்பியல் அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு சீத்தாப்பழம் உதவுகிறது. கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும் இந்த பழம் உதவுகிறது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு...

சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 வளமையாக உள்ளது. இந்த வைட்டமினால் மூச்சுக்குழாய் அழற்சி குறைந்து ஆஸ்துமா ஏற்படுவதும் தடுக்கப்படும்.

மாரடைப்பு

சீத்தாப்பழத்தில் உள்ள மெக்னீசியம், நமக்கு உடல்நல பயனை அளிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் நம்மை அது பாதுகாக்கும்.

செரிமானத்திற்கு நல்லது

சீத்தாப்பழத்தில் தாமிரமும், டையட்டரி நார்ச்சத்தும் வளமையாக உள்ளதால், உண்ணுவதற்கு ஆரோக்கியமான பழமாக இது திகழ்கிறது. தாமிரம் இருப்பதால் அது செரிமானத்திற்கு உதவிடும். கூடுதலாக குடல் இயக்கம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்தும் அது உங்களை காக்கும்.

சர்க்கரை நோய்க்கு சிறந்த பழம்

சீத்தாப்பழத்தில் டையட்டரி நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், சர்க்கரை உறிஞ்சப்படும் அளவு குறையும். இதனால் டைப்-2 சர்க்கரை நோய் உருவாகும் அபாயம் குறையும்.

இரத்த அழுத்தத்திற்கு

சீத்தாப்பழத்தில் உள்ள சிறந்த உடல்நல பயன் - அதிலுள்ள வளமையான பொட்டாசியம் மற்றும் மெக்னீஷியம். இந்த இரண்டுமே உங்கள் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

கொலஸ்ட்ரால் அளவுகள்

சீத்தாப்பழத்தில் நியாசின் மற்றும் டையட்டரி நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இவைகளால் கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும்.

உங்களுக்கு இரத்த சோகையா?

சீத்தாப்பழத்தில் இரும்புச்சத்து வளமையாக உள்ளதால் இரத்த சோகைக்கும் அது சிகிச்சையளிக்கும்.

வாய் ஆரோக்கியம்

சீத்தாப்பழம் பற்களுக்கு மிகுந்த பயன்களை அளிக்கிறது. பல் மற்றும் ஈறு வலிக்கு எதிராக சீத்தாப்பழத்தின் தோல் உதவுகிறது.

கண்களை பார்த்துக் கொள்ளுங்கள்

சீத்தாப்பழத்தில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. இவை இரண்டுமே உங்கள் கண்களுக்கு நல்லதாகும். ப்ரீ ராடிக்கல்களை அழிக்க இது உதவுவதால், நல்ல கண் பார்வையை பராமரிக்க இது உதவிடும்.

கீல்வாதத்தை தடுக்கும்

சீத்தாப்பழத்தில் மெக்னீசியம் உள்ளதால், அது உடலில் உள்ள நீரின் அளவை சரிசமமாக்கும். இது சீத்தாப்பழத்தின் முக்கியமான உடல்நல பயனாகும். இதன் காரணமாக மூட்டில் இருக்கும் அமிலங்கள் வெளியேற்றப்படும். இதனால் கீல்வாதம் வராமல் தடுக்கப்படும்.

காலை குமட்டலை தடுக்கும்

கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லதாகும். அதே போல் பிரசவத்திற்கு பின்பு உடல் எடையை குறைக்கவும் இது உதவும். முக்கியமாக, காலையில் ஏற்படும் குமட்டலை இது நீக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், உணர்வின்மை, பசி, மனநிலையில் ஏற்ற இறக்கம் போன்றவைகளுக்கு எதிராக போராடும்.

தோல் புற்றுநோயை அண்ட விடாது

சீத்தாப்பழத்தில் உள்ள அசிடோஜெனின், தோல் புற்றுநோய்க்கு அறிகுறியான சரும சிதைவை நீக்கும். இதனால் சரும புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

14 Health Benefits Of Custard Apples

There are more than a handful health benefits of custard apple. Take a look at how these yummy fruits will help you stay healthy.
Story first published: Sunday, October 12, 2014, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter