For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு தூக்கம் மிகவும் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

By Boopathi Lakshmanan
|

தூக்கம் என்பது மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். தூக்கமில்லாதவன் துக்கத்துடன் தான் இருக்க வேண்டும். தூங்கும் போது தான் உடலும், மனமும் முழு ஓய்வை எடுக்க முடியும். ஒவ்வொரு நாளும் குறைந்த நேரம் தூங்குவதும் நல்லதற்கு தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒரு காபி இருந்தால் போதும், தூக்கத்தை நான் வென்று விடுவேன் என்று நினைக்கிறீர்களா? அல்லது நீங்கள் கற்பனை செய்திருப்பதை விட மிகவும் அசாதாரணமான வகையில் தூங்குவதற்காக போராடிக் கொண்டிருக்கிறீர்களா?

படுக்கையில் உடலைக் கிடத்துவதற்கு முன்னரே தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வருவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள், ஆனால் தூக்கம் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படுகிறதா என்பதை நீங்கள் உணர்ந்திருக்க முடியாது. இதோ அதற்கொரு அலாரம்: இந்த கட்டுரையில் உங்களுக்கு தூக்கம் தேவையா அல்லது குறைவாகவே தூங்குகிறீர்களா என்பதைப் பற்றிய விளக்கங்களைக் கொடுத்திருக்கிறோம்.

இரவில் கவலையை மறந்து நிம்மதியாக தூங்க வேண்டுமா? இதோ சில வழிகள்!!!

நியூயார்க்கில் உள்ள மான்டெஃபியோரே மெடிக்கல் சென்டரின், தூக்க மருந்துகள் பிரிவின் இயக்குநரும் மற்றும் யு பியூட்டி ஸ்லீப்பின் வல்லுநருமாக இருக்கும் ஷெல்பி ப்ரீடுமேன் ஹாரிஸ் உதவியுடன், எந்த வகையான சூழ்நிலையின் போது உங்களுக்கு தூக்கம் தேவைப்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்த அறிகுறிகளில் ஏதாவதொன்றை நீங்கள் அனுபவித்து வந்தால், தூங்கச் செல்லுங்கள். உணவு மற்றும் தண்ணீரைப் போலவே, உறக்கமும் ஒரு அடிப்படைத் தேவையாகும். இது ஆரோக்கியத்திற்கும், அழகை கூட்டுவதற்கும் உதவும். கட்டான உடற்கட்டுடன் உடலைப் பராமரிக்கவும் உறக்கத்தைத் தவிர வேறு மருந்தில்லை.

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு 5 அட்டகாசமான யோகாசனங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படுத்தவுடன் உறங்கி விடுதல்

படுத்தவுடன் உறங்கி விடுதல்

இதை நல்ல தூக்கத்திற்கான அறிகுறியாக நினைத்தால், அது முற்றாகத் தவறாகும். படுத்த 5 நிமிடத்திற்குள் நீங்கள் தூங்கி விட்டால், இதுவரை நீங்கள் போதிய அளவு தூங்கவில்லை என்று அர்த்தமாகும். மேலும் தேசிய நரம்பியல் நோய்கள் மற்றும் வலிப்பு நோய்கள் நிறுவனத்தின் கருத்துப்படி, இது ஒரு உறக்க நோய் அல்லது தூக்க குறைபாடு ஆகும்.

வழக்கத்தை விட அதிகமாக உணர்ச்சிவசப்படுதல்

வழக்கத்தை விட அதிகமாக உணர்ச்சிவசப்படுதல்

காலை நேர மீட்டிங்கின் போது, சாதாரணமாக காணப்படும் நீங்கள் பரபரப்பாக காணப்படுகிறீர்களா? போதுமான உறக்கம் இல்லாததையே இதற்கு காரணமாக சொல்ல முடியும். ஏனெனில் மூளையின் வெளிப்பகுதியை மூடியிருக்கும் ப்ரீப்ரோன்டல் கார்டெக்ஸ் பகுதி, தூக்கமின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஹாரிஸ் இதை விளக்குகிறார். 'இந்த பகுதி தான் ஒரு முடிவை தீர்மானிக்கவும், உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்தவும், பார்வை மற்றும் கவனத்தை தொடர்புபடுத்தவும் உதவுகிறது. போதுமான தூக்கம் இல்லாதிருப்பதால் மோசமான முடிவுகளை எடுக்கவும் மற்றும் உணர்ச்சிவசப்பட்டு செயல்படவும் செய்கிறோம். எடுத்துக்காட்டாக, போதுமான தூக்கம் இல்லாத போது சரியாக சாப்பிடாமல் இருத்தல், விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பொருட்களை வாங்குதல், எரிச்சல் மற்றும் மற்றவர்களுடன் பிரச்சனை செய்தல் போன்றவற்றை சொல்லலாம்'.

கருத்துக்களை சார்ந்திருத்தல்

கருத்துக்களை சார்ந்திருத்தல்

'நீங்கள் ஒன்று கேட்க மற்றவர் எதையோ கொடுக்கிறார்கள்' என்றும், 'மோசமான பாதிப்பை விட முன்னெச்சரிக்கையாக இருப்பதே நல்லது' என்றும் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், இது உங்களுக்கு சரியான தூக்கம் கிடைக்கவில்லை என்று அர்த்தம். 'மூளையின் முன்பகுதியானது பேச்சு, ஆக்கப்பூர்வமாக யோசித்தல் மற்றும் புதுமையாக யோசித்தல் ஆகியவற்றை செய்வதாகும். நீங்கள் போதிய அளவுக்கு தூங்காத போது, இப்பகுதி பெரிதும் பாதிக்கப்படுகிறது' என்கிறார் ஹாரிஸ். 'போதிய தூக்கமில்லாதவர்கள் தொடர்ந்து சிக்கலான பேச்சுக்களை பேச கஷ்டப்படுகிறார்கள், அதிகளவு வார்த்தைகள் கிடைக்காமலும், திக்கித் திக்கி பேசவும் மற்றும் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப பேசவும் செய்கிறார்கள்' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மறதிக்கு சொந்தக்காரர்

மறதிக்கு சொந்தக்காரர்

போதிய அளவு தூங்காததால் ஏற்படும் தளர்ச்சி, உங்களை மறதிக்கு நெருங்கி சொந்தக்காரராக மாற்றி விடுகிறது. உதாரணமாக, உங்கள் தந்தையின் பிறந்த நாள் அட்டையை போஸ்ட் செய்ய வேண்டும் என்று வேகமாக வெளியே கிளம்பும் நீங்கள், அவ்விடத்திற்கு சென்ற பின்னர் தான் வாழ்த்து அட்டையை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டதை அறிவீர்கள், அதே போல புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒருவரின் பெயரை பலமுறை கேட்டிருந்தாலும் கூட மறந்து விடுவீர்கள். போதிய அளவு ஓய்வெடுக்காததால் மறதி உங்களுடன் தங்கிவிடுகிறது. தூக்கத்தின் போது நினைவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன மற்றும் உணர்வுகள் செயலூக்கம் பெறுகின்றன என்கிறார் ஹாரிஸ். 'முறையான ஓய்வு இல்லாமல், நினைவுகளை கொண்டு வருவது கடினமான காரியம்,' என்றும் அவர் குறிப்பிடுகிறார். 'உணர்வுப்பூர்வமான நினைவுகளை கருத்துக்களாக கொண்டு வருவது கடினமான விஷயமாகும், அதுவும் அவற்றை பகுத்தறிவுக்கு தகுந்தவாறும் மற்றும் எண்ணம் முழுமையாகவும் கொண்டு வருவதும் மிகவும் கடினமானதாகும்'.

பசி! பசி! பசி!

பசி! பசி! பசி!

இரவில் நீங்கள் போதிய அளவு உறங்காத போது, சிப்ஸ்கள், ஐஸ் கிரீம்கள் என நொறுக்குத் தீனிகளில் மனம் செல்வதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. போதிய தூக்கமில்லாது போனால், பசி உணர்வு தொடர்பான லெப்டின் மற்றும் க்ரெலின் ஆகிய இரண்டு முக்கியமான ஹார்மோன்கள் பாதிக்கப்படும். 'லெப்டின் என்ற ஹார்மோன் நமக்கு போதிய உணவு கிடைத்துவிட்டது, சாப்பிடுவதை நிறுத்தலாம் என்ற உணர்வைத் தரக்கூடியதாகும்' என்கிறார் ஹாரிஸ். அதே நேரத்தில், 'க்ரெலின் பசிக்கான அறிகுறிகளைக் காட்டி நம்மை சாப்பிடத் தூண்டுகிறது. நமக்கு போதிய அளவு உறக்கம் இல்லாத வேளைகளில் இந்த ஹார்மோன்களின் சமநிலைகள் மாறி விடுவதால், சாப்பிட வேண்டும் என்ற உணர்வு அதிகரிக்கும். சுருக்கமாக சொன்னால், முறையான தூக்கம் இல்லாததால், நாம் அதிகளவு சாப்பிட வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும் ஹார்மோன் அதிகரிக்கவும், சாப்பிட்டது போதும் என்ற உணர்வைத் தரும் ஹார்மோன் குறைந்து விடவும் செய்யும்.

இரண்டு முறை படித்தல்

இரண்டு முறை படித்தல்

உங்களால் எதையும் நன்றாக கவனிக்க முடியவில்லையா? சந்தேகமே இல்லை - உங்களுக்குத் தேவை உறக்கம். 2009 ஆம் ஆண்டில் ஜர்னல் இதழால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, போதிய தூக்கம் இல்லாமலிருந்தால், கவனமும் செலுத்த முடியாமல் போய், முடிவுகளை இரண்டு-முறைகளாக பிரிக்க முடியாமல் போய்விடும். இந்த இரண்டாக பிரித்து முடிவெடுக்கும் விஷயத்தால் தான், நம்மால் கவனமாக கார் ஓட்டவும், அதே சமயத்தில் விபத்துக்களை தவிர்க்கவும் முடிகிறது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

போதிய தூக்கம் இல்லாதவர்களின் தோற்றம் விகாரமாகவே காணப்படும். அது மட்டுமல்லாமல் நடையில் தடுமாற்றம், ஏதாவது பொருட்களை தூக்கிச் செல்லும் போது தடுமாற்றம் போன்ற தளர்வுகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும், என்கிறது ஹாரிஸின் குறிப்பு

துணையுடன் சண்டை

துணையுடன் சண்டை

2013 ஆம் ஆண்டில் U.C.Berkeley செய்த ஆய்வின் படி, போதிய அளவு உறக்கமில்லாத தம்பதிகளுக்குள் சச்சரவுகள் அதிகம் உள்ளதை உறுதிப்படுத்துகிறது. போதிய அளவு கண்களை மூடி உறங்காத காரணத்தால், இருவருக்கும் சண்டை, சச்சரவுகள் வரும் போது, அவர்களால் அதை சரியாக கையாள முடிவதில்லை.

ஏதோ ஞாபகத்தில் இருப்பது

ஏதோ ஞாபகத்தில் இருப்பது

நீங்கள் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது, மெயின் ரோட்டிலிருந்து வெளியேறி உங்கள் இடத்திற்கு செல்லும் வழியை தாண்டி வந்து விட்டீர்களா அல்லது சிற்சில நினைவுகளுடன் உங்களுடைய பணிகளை நாள் முழுவதும் செய்து வருகிறீர்களா? இது ஆட்டோ-பைலட் போட்டு வாழ்க்கை ஓட்டும் செயலாகும். இவ்வாறு செய்யும் போது இந்த நிமிடத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்ந்திருக்க மாட்டீர்கள். இந்நேரத்தில், உங்களுக்குத் தேவை உறக்கம் மட்டுமே என்கிறார் ஹாரிஸ்.

சினிமா அல்லது பயணத்தில் உறக்கம்

சினிமா அல்லது பயணத்தில் உறக்கம்

இருட்டான, தளர்வான ஒரு சூழலுக்குள் புகுந்தவுடன், குறிப்பாக பகல் நேர வெளிச்சம் இல்லாத இடத்துக்குள் புகுந்தவுடன் உங்களுக்கு தூக்கம் கண்களைச் சுழற்றத் தொடங்கினால், போங்க சார் போய் தூங்குங்க! இது தான் நீங்கள் கண்டிப்பாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லும் அலாரமாகும். நீங்கள் போதிய அளவு உறங்கினால் மட்டுமே, பகல் வேளைகளில் சுறுசுறுப்பாகவும் மற்றும் கவனமாகவும் இருப்பீர்கள். ஏனெனில், அது பகல் நேரமல்லவா!

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Surprising Signs You're Sleep-Deprived

Here we’ve rounded up the top 10 signs that you are shortchanging yourself on sleep. If any of these sound familiar, it’s time to start making sleep more of a priority.
Desktop Bottom Promotion