For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான 10 காரணங்கள்!

By Karthikeyan Manickam
|

ஃபில்லாந்தேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த நெல்லிக்காயில் வைட்டமின்-சி அதிகம் இருப்பதால், தினமும் அதை நாம் நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.

இந்த நெல்லிக்காயை நாம் அப்படியே சாப்பிடலாம். குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோருக்குமே இது பிடிக்கும். இது நம் மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது; நுரையீரல்களை சரியான முறையில் இயங்கச் செய்கிறது; உடலிலுள்ள நச்சுப் பொருள்களையும், கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்திலும் ஒரு முக்கிய மருந்துப் பொருளாக விளங்கும் இந்த நெல்லிக்காயைத் தினமும் நாம் நம் உணவில் சேர்த்துக் கொள்வதற்கான காரணங்கள் இதோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பைக் குறைக்கிறது

கொழுப்பைக் குறைக்கிறது

உடல் பருமன் நோயினால் அவதிப்படுபவர்கள் நம் நாட்டில் மிக அதிகம். நீரிழிவு மற்றும் இதய நோய்களையும் இந்த உடல் பருமன் ஏற்படுத்துகிறது. நெல்லிக்காயில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்துக்கள் நம் உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து அகற்றுகிறது.

கண் பார்வையை அதிகரிக்கிறது

கண் பார்வையை அதிகரிக்கிறது

கண் புரை என்னும் பார்வை நோயைத் தவிர்ப்பதில் நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது. மேலும், கண் சிவப்பாதல், கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல், மாலைக் கண் உள்ளிட்ட பலவிதமான பிரச்சனைகளைப் போக்குவதற்கும் நெல்லிக்காய் உதவுகிறது. கண்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

இதய நோய்களை கட்டுப்படுத்துகிறது

இதய நோய்களை கட்டுப்படுத்துகிறது

நம் இதயத்திற்கும் பலவிதமான பலன்களை நெல்லிக்காய் அளிக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, அதன் விளைவாக இதயத்தைப் பாதுகாக்கிறது. இருதயத்திற்குள் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

தலைமுடியை வலுவாக்குகிறது

தலைமுடியை வலுவாக்குகிறது

நம் தலைமுடியை வலுவாக்குவதில் கால்சியத்தின் பங்கு அதிகம் உள்ளது. இந்தக் கால்சியம் நம் உடலுக்குள் எளிதாக ஊடுருவுவதற்கு நெல்லிக்காய் உதவுகிறது. நாம் உபயோகப்படுத்தும் ஷாம்புக்களில் நெல்லிக்காய் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விந்தணு உற்பத்திக்கு...

விந்தணு உற்பத்திக்கு...

ஆண்களில் சிலருக்கு விந்தணுக்கள் குறைவாக இருக்கும். அவர்கள் தொடர்ந்து நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.

நச்சுப் பொருட்களைக் குறைக்க...

நச்சுப் பொருட்களைக் குறைக்க...

நெல்லிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் நாம் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாகும். நச்சுப் பொருட்கள் விரைவில் வெளியேறும். சிறுநீரகங்களையும் இது சீராக இயங்க வைக்கிறது.

மாதவிடாய் வலிகளைக் குறைக்கிறது

மாதவிடாய் வலிகளைக் குறைக்கிறது

மாதவிடாய் நாட்களில் பெண்கள் நெல்லிக்காயை எடுத்துக் கொள்வதால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள் குறையும்.

எலும்பு வளர்ச்சிக்கு...

எலும்பு வளர்ச்சிக்கு...

ஏற்கனவே கூறியது போல், கால்சியம் எளிதாக உடம்பில் உறிஞ்சப்படுவதற்கு நெல்லிக்காய் மிகவும் உதவுகிறது. உடலில் கால்சியம் சேரச் சேர எலும்புகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.

வாய் நாற்றத்திற்கு...

வாய் நாற்றத்திற்கு...

நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் விலகி ஓடும். மேலும், பற்களை வலுவாக்கும், ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களையும் ஆற்றுகிறது.

மலச்சிக்கலுக்கு விடுதலை

மலச்சிக்கலுக்கு விடுதலை

நாம் சாப்பிடும் உணவுகளை எளிதாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கலே இல்லாமல் செய்வதற்கு நெல்லிக்காய் மிகவும் உதவுகிறது. அதிலுள்ள நார்ச்சத்துக்கள் தான் இந்த மாயத்தைச் செய்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Reason To Include Amla In Your Daily Diet

Popular for its high vitamin C content, amla has an abundance of uses which makes it a prominent reason to include it in one's daily diet
Desktop Bottom Promotion